உங்கள் சொல் வங்கியை வளமாக்க உதவும் இணையதளம்.

ஆங்கில அறிவை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு வழி வேண்டும்;ஆனால் அந்த வழி சுலபமானதாவும் இருக்க வேண்டும்,சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆர்டில்குலேட் இணையதளம் நிச்சயம் உங்களை கவரக்கூடும்.

ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டு ஆங்கில சொல் வங்கிய வளமாக்கி கொள்ள உதவுகிறது.சொல் வங்கி என்றவுடன் தினந்தோறும் பல வார்த்தைகளை அறிமுகம் செய்து கொண்டு அவற்றின் பொருளை மனதி நிறுத்தி கொள்ள வேண்டுமோ என்று மிரண்டு போக வேண்டாம்.

ஒவ்வொரு படியாக முன்னேறுவது என்று சொல்வார்களே அதே போல இந்த தளம் ஒவ்வொரு சொல்லாக ஆங்கில சொல் வங்கியை வளமாக்கி கொள்ள வழி காட்டுகிறது.அதிலும் இன்றைய சமூக வலைப்பின்னல் யுகத்தில் பலருக்கும் பரிட்சயமான ,விருப்பமான டிவிட்டர் சேவையோடு கலந்து புதிய ஆங்கில சொல்லை கற்க கைகொடுக்கிறது.

ஆங்கில சொல் வளத்தை பெருக்கி கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்.

இந்த தளத்தில் தினந்தோறும் இடம்பெறும் புதிய ஆங்கில சொல் அறிமுக செய்யப்படுகிறது.அந்த சொல்லுக்கான பொருளும் கொடுக்கப்பட்டிருக்கும்.அந்த சொல்லின் அர்தத்தை தெரிந்து கொண்ட பின் அதனை பயன்படுத்தி டிவிட்டரில் ஒரு குறும்பதிவு வெளியிட வேண்டும்.

மற்ற உறுப்பினர்களும் அந்த சொல்லை பயன்படுத்தி குறும் பதிவை வெளியிட்டிருப்பார்கள்.அவர்களோடு உங்கள் குறும்பதிவு போட்டியிடும் .அதாவது நீங்கள் குறும்பதிவில் அந்த சொல்லை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சக உறுப்பினர்கள் அதனை ‘லைக்’ செய்திருப்பார்கள்.அல்லது மறுடிவீட் செய்திருப்பார்கள் .

அதிக லைக் அல்லது மறுடிவீட் பெறும் பதிவுகள் முகப்பு பக்கத்தில் வரிசையாக இடம் பெறும்.
தினமும் புதிய சொல் ஒன்றை தெரிந்து கொள்வதோடு அதனை பயன்படுத்தவும் வைத்து அந்த சொல்லை மனதில் பதிய வைப்பதோடு தொடர்ந்து பயன்படுத்த ஊக்கம் தரும் வகையில் மற்றவர்களோடு போட்டியிட வைக்கிறது.

டிவிட்டர் பிரியர்களுக்கு இந்த சேவை சவலான இன்பத்தை அளிக்க கூடும்.

சக உறுப்பினர்கள் குறிப்பிட்ட சொல்லை பயன்படுத்தியிருக்கும் விதத்தை பார்க்கும் போது அதனை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முதல் முறையாக இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் இதற்கு முன்ன இந்த தளத்தில் இடம் பெற்ற சொற்களையும் அவை குறும்பதிவுகளாக பயன்பட்ட விதத்தையும் பார்க்க முடியும்.வெற்றி பெற்றவர்கள்,மற்றும் முன்னிலை பெற்றவர்களின் பதிவுகளையும் பார்க்க முடியும்.

போகிற போக்கில் ஆங்கில மொழி புலமையை வளர்த்து கொள்ள இந்த தளம் உதவும்.மொழி கற்க உதவும் இணையதளங்களில் மிகவும் சுவாரஸ்யமான தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம்.கற்பதன் சுமை தெரியாமல் பயனாளிகல் மத்தியில் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த சேவையின் சிறப்பு என்று சொல்லலாம்.

அதற்கேற்ப இதன் வடிவமைப்பும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

இதே போல தமிழ் மொழிக்கும் கூட ஒரு சேவைய துவக்கலாம்.

இணையதள முகவரி;http://www.artwiculate.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உங்கள் சொல் வங்கியை வளமாக்க உதவும் இணையதளம்.

  1. மணிகண்டவேல்

    அருமையான தகவல்களை தினம் தினம் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.. தொடர்ந்து இதுபோல் உபயோகமாக எழுதுங்கள்.

    Reply
  2. மணிகண்டவேல்

    அருமையான தகவல்களை தினம் தினம் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.. தொடர்ந்து இதுபோல் உபயோகமாக எழுதுங்கள்.

    கவிதை காதலன்

    Reply
    1. cybersimman

      பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே.

      Reply
  3. polurdhayanithi

    அருமையான தகவல்களை தினம் தினம் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.. தொடர்ந்து இதுபோல் உபயோகமாக எழுதுங்கள்.

    Reply
    1. cybersimman

      ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி.

      Reply
  4. inda site mihavum intrusingaha irukiradu,kindly continue the same

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *