சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்.

20131010135445419469_8எப்போது என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிற‌து.

இந்திய கிரிக்கெட்டில் ,ஏன் உலக கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரையும் விட அதிகமாக சாதித்து அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய டெண்டுல்கரை கொண்டாடி மகிழும் வகையில் அவரைப்பற்றிய பத்து சிறந்த இணையதளங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.

1. சச்சின் வாக்கு.( http://www.brainyquote.com/quotes/authors/s/sachin_tendulkar.html)

எண்கள் தான் சச்சனுக்கு நெருக்கமானவை. டெஸ்ட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளின் எண்ணிக்கை ,சச்சின் எனும் கிரிக்கெட் அற்புதத்துக்கு சாட்சி. ஆனால் சாதனைகளை விட வியப்பை ஏற்படுத்தும் விஷயம் சச்சினின் பணிவு.கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. சச்சினின் வார்த்தைகள் மூல்மே இவை பலமுறை வெளிப்பட்டுள்ளன. பல்வேறு பேட்டிகளில் சச்சின் கூறிய கருத்துக்கள் மேற்கோள்களாக புகழ் பெற்ற பிரைனிகோட்ஸ் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு இந்த மேற்கோளை பாருங்கள்; “என் வாழ்க்கை முழுவதும்,பள்ளியில் கூட, நான் ஓடுவதற்கு யாரையும் வைத்து கொண்டது இல்லை, காரணம் பந்தை அடிக்கும் போது அது எத்தனை உறுதியாக் செல்லும் ,எங்கே செல்லும் என்று எனக்கு மட்டுமே தெரியும்,ஓடுபவருக்கு தெரியாது”.  மேலும் பல சச்சொஇன் மொழிகளை இங்கே படித்து சச்சின் எனும் மனிதரின் மகத்துவத்தை வியந்து போற்றுங்கள்.

2. சச்சின் பற்றி ஒபாமா.

 சச்சின் பற்றி பாராட்டாத கிரிக்கெட வீரர்கள்,விமரசகர்களே கிடையாது.மேத்யூ ஹைடன் “நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் நான்காவது நிலையில் ஆடுகிறார் ” என கூறியது அவரைப்பற்றிய மேர்கோள்களின் சிகரம். சரி அமெரிக்க அதிபர் ஒபாமா சச்சின் பற்றி கூறியிருக்கிறாரா? இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வி புகழ்பெற்ற கேள்விபதில் தளமான குவோராவில் எழுப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதில் இல்லை என்பதே. குவோராவில் சச்சின் பற்றி கேட்க்ப்பட்டுள்ள மற்றொரு கேள்வி ‘சச்சின் இஸ்லாமியராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டிருப்பாரா? என்பது. இந்த கேள்விக்கான பதில் இந்தியாவின் பெருமையை உணர்த்துகிறது. ஆம் என்பதே அந்த பதில் விரிவான பதிலுக்கு பார்க்க… ( http://www.quora.com/If-Sachin-Tendulkar-were-a-Muslim-would-he-get-the-same-adulation)

3.சச்சின் பிராட்மேன்.

கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சச்சின் பல மக்த்தான வீரரோடு ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளார். லாரா, பாண்டிங் என நீளும் இந்த பட்டியலில் அதிக அளவில் இடம் பெறுவது கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் தான். சச்சின்பிராட்மேனில் யார் சிறந்தவர். இந்த ஒப்பீட்டுக்கு எண்ணிக்கைகளால் பதில் அளிக்கிறது தி ரோர்.காம் கட்டுரை. பிராட்மேனே சிறந்தவர் என புள்ளிவிவர ஒப்பீட்டால் இந்த கட்டுரை நிறுவினாலும் அது ஒரு பகுதி உண்மையே என்பதை இதில் இடம்பெறாத சச்சினின் சாதனைகள் சொல்லும். ( http://www.theroar.com.au/2011/02/28/sachin-tendulkar-and-don-bradman-theres-no-comparison/)

4. யார் இந்த சச்சின்?

 சச்சின் யார் என்று யார

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.