பேஸ்புக் நண்பர்கள் சக்கரம் தெரியுமா?

550wheelபேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே இடத்தில் காட்சிரீதியாக தொடர்பு படுத்தி பார்க்க முடியும் தெரியுமா ?நண்பர்கள் சக்கரம் ( பேஸ்புக் பிரண்ட்ஸ் வீல்) இதை தான் செய்கிறது .
தாமஸ் பிளட்சர் என்பவர் இந்த நண்பர்கள்  சக்கரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மூலம் நீங்களும் நண்பர்கள் சக்கர்த்தை உருவாக்கி கொள்ளலாம். இதற்காக, பிளட்சரின் இணையதளத்திற்குள் நுழைந்து , நண்பர்கள் சக்கரம் தேவை என்று கேட்டுக்கொண்டால் , உங்களுக்கான பேஸ்புக் நண்பர்கள் சக்கரம் தயாராகிவிடும். அந்த சக்கரத்தில் நீங்கள் நடுநாயகமாக இருப்பீர்கள், உங்கள் நண்பர்கள் அனைவரும் சக்கர்த்தின் விளிம்பில் புள்ளிகளாக இருப்பார்கள். நண்பர்களுக்கு பரஸ்பரம் உள்ள தொடர்புகளும் கோடுகளாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். உங்கள் பேஸ்புக் கனக்கில் லாக் இன் செய்து இந்த சக்கர்த்தை பெற்று கொள்ளலாம்.

அதன் பின் , இந்த நண்பர்கள் சக்கர்த்தை பேஸ்புக் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த சக்கரத்தை உருவாக்கிய பிள்ட்சர் இதே போல டிவிட்டர் சேவைக்கான சக்கரம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். டிவிட்டர் பயனாளிகள் அதன் மூலம் தங்கள் பின் தொடர்பாளர்களை சுட்டிக்காட்டும் டிவிட்டர் சக்கரத்தை உருவாக்கி கொள்ளலாம்.

பேஸ்புக் நண்பர்கள் சக்கரம் இங்கே : http://friend-wheel.com/index.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.