சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்!

websiteமுதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது. உங்கள் ஆதரவின் பயனாக , எனது முதல் புத்தகம் வெளியாகிறது. இணையத்தால் இணைவோம் ( சைபர்சிம்மன் கையேடு -1) எனும் தலைப்பில் மதி நிலையம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.

கடந்த ஜூலை மாதம் , இது தொடர்பாக நான் முதலில் பதிவு செய்திருந்தது நினைவிருக்கலாம். சிறந்த பதிவுகளை தொகுத்து வெளியிட இருப்பதாக நான் தெரிவித்திருந்ததற்கு பலரும் ஆதரவு அளித்து ஊக்குவித்திருந்தீர்கள். கடந்த சில மாதங்களாக இந்த தொகுப்பு முயற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். இப்போது மதி நிலையத்தின் சார்பில் இந்த புத்தகம் வெளியாகிறது. முதல் கட்டமாக மிகச்சிறந்த இணையதளங்களின் அறிமுகங்களை தொகுத்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை தொகுக்கும் அனுபவம் சவாலாக இருந்தது. இணையதளங்கள் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இணையத்தின் எல்லையற்ற சாத்தியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்தேன். எனவே தேர்வு செய்ததை விட அதிக இணையதளங்களை சேர்க்காமல் தவிர்த்திருக்கிறேன். இணையதளங்களின் தற்போதைய நிலையை அப்டேட் செய்து  அநேகமாக புது பதிவாகவே திருத்தி எழுதியிருக்கிறேன். பல தளங்கள் புதிதாக சேத்திருக்கிறேன்.

புத்தகம் தயாரான விதம் பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். எனது இந்த முதல் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை . இணையத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டியாக விளங்கும் இந்த தொகுப்பு நூலை தொடர் வரிசையாக கொண்டு வர விரும்புகிறேன். அதற்கும் உங்கள் ஆதரவு தேவை.

இந்த புத்தகத்தை வெளியிடும் மதி நிலையம் பதிப்பகத்திற்கு உங்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகத்தை எதிர்பார்க்கலாம். வாங்கி படித்து கருத்து சொல்லி ஊக்கம் தாருங்கள். முடிந்தால் உங்கள் நட்பு வட்டத்திலும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

புத்தக கண்காட்சியில் மதிநிலையம் அரங்கு; 577,578.

மதிநிலையத்தின் இணையதளம் ; http://www.mathinilayam.com/

 

0 thoughts on “சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்!”

  1. முதல் வாழ்த்துக்கு நன்றி நண்பரே.தங்கள் கருத்துக்களை பார்த்து நீண்ட நாளாகி விட்டதே.

   அன்புடன் சிம்மன்

  1. நன்றி நண்பரே. புத்தகம் வெளியானவுடன் தங்கள் கருத்துக்களை கூறவும்.

  1. மிக்க நன்றி நண்பரே. கருத்துக்களை அறிய காத்திருக்கிறேன்.

  1. 60 சதவீதத்துக்கு மேல் புதிதாக எழுதியவை. எஞ்சியவையும் , புதுப்பித்து திருத்தி எழுதப்பட்டவை.

   அன்புடன் சிம்மன்

 1. தமிழில் AntonPrakasku அடுத்து புதுசா எழுதுறது நீங்க தான்
  தொகுப்பு நூல் தொடர் வரிசையாக
  வர விரும்புகிறேன்.

  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே. முதல் தொகுப்பில் இணையதளங்கள் உள்ளன. அடுத்த தொகுப்புல் இணையதளங்கள் மற்றும் இணையபோக்குகள். தொடர்ந்து தேடியந்திரங்கள், இமெயில் பயன்பாடு, இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் என திட்டமிட்டுள்ளேன்.

   அன்புடன் சிம்மன்

  1. நன்றி. படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்

 2. மிக்க ஸந்தோஷம்.வாழ்த்துகளும் அநேக கோடி.அன்புடன்
  காமாட்சி. சொல்லுகிறேன்.

  1. தங்கள் ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்,

   அன்புடச் சிம்மன்

 3. வணக்கம் சார், நான் தான் ரமேஷ்குமார் சார், உங்களுடன் மாலைச்சுடரில் பணிபுரிந்தேன். இந்த நல்ல விஷயத்தில் எனக்கும் ஏதேனும் வாய்ப்பு இருந்தால் கூறுங்கள் சார், என்னால் முடிந்தவரை ஏதேனும் செய்து தருகிறேன். என்னுடைய மொபைல் நம்பர் 9884768225.

  1. நன்றி ரமேஷ். நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

   அன்புடன் சிம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *