அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் ; வழிகாட்டும் இணையதளங்கள்.

அடுத்ததாக என்ன புத்தகம் படிக்கலாம் ? புத்தக பிரியர்களுக்கு இதைவிட ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்வி வேறு இருக்க முடியாது. இந்த கேள்விக்கு பதிலாக அமையக்கூடிய சரியான புத்தகதை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சி தரக்கூடியதும் வேறு இருக்க முடியாது. புத்தக விமர்சனம், நண்பர்கள் பரிந்துரை ,இலக்கிய தேடல், சிறந்த புத்தகங்களின் பட்டியல் என இதற்கு பலவழிகள் இருக்கின்றன. ஆச்சர்யத்தையும் ஆனந்த்தையும் அளிக்ககூடிய அந்த அடுத்த புத்தகத்தை கண்டுகொள்ள உதவும் சுவாரஸ்யமான இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா ? வழக்கமான விமர்சனம் மற்றும் முன்னணி புத்தகங்களின் பட்டியலை தாண்டி ,ஏற்கனவே படித்த புத்தகங்களின் அடிப்படையில் வாசகர்களின் ரசனைக்கேற்ற புத்தகங்களை முன்வைப்பதே இந்த இணையதளங்களின் சிறப்பு.

1.வாட் ஷுட் ரீட் நெக்ஸ்ட் (  http://www.whatshouldireadnext.com/)

அடுத்ததாக நான் என்ன புத்தகம் படிக்கலாம்? இந்த கேள்வியையே தலைப்பாக கொண்ட இந்த இணையதளம் அழகாக இதற்கான பதிலை அளிக்கிறது. இந்த இணையதளம் மூலம் புதிய புத்தகத்தை அறிமுகம் செய்து கொள்ள , ஒருவர் தனக்கு பிடித்தமான எழுத்தாளர் அல்லது புத்தகத்தை தெரிவிக்க வேண்டும். தளத்தில் நடுநாயகமாக இருக்கும் தேடல் கட்டத்தில் இந்த விவரத்தை சமர்பித்தவுடன் , அந்த எழுத்தாளர் அல்லது புத்தகத்திற்கு தொடர்புடைய மற்ற புத்தகங்களின் பட்டியல் வந்து நிற்கும். இந்த பட்டியலில் உள்ள புத்தகங்கள் அநேகமாக முதலில் சமர்பிக்கப்பட்ட புத்தகத்தின் தன்மைக்கு ஒத்ததாக இருக்கும். தேடியவரின் வாசிப்பு தன்மையின் அடிப்பைடயில் உருவாக்கப்பட்ட பட்டியல் என்பதால் இதில் உள்ள புத்தகங்கள் அநேகமாக அவருக்கு பிடித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

பட்டியலில் உள்ள புத்தகம் பற்றிய கூடுதல்தகவல்களை பெறலாம் என்பதோடு இணையம் மூலமே வாங்கி கொள்ளலாம். புத்தக பரிந்துரை பட்டியலை பேஸ்புக், ட்விட்டர் மூலம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த பரிந்துரைகள் வாசகர்கள் சமர்பித்த பிடித்தமான புத்தகங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவை. நீங்களும் விரும்பினால் உங்கள் அபிமான புத்தகங்களின் பட்டியலை இதில் சமர்பிக்கலாம்.

2. என்ன புத்தகம் (http://www.openingthebook.com/whichbook/)

அடுத்த்தாக படிக்கும் புத்தகம் பிடித்த்தாக இருக்க வேண்டும் ஆனால் முற்றிலும் எதிர்பாராத்தாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த இணையதளம் அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றும். எல்லோருக்குமே பிடித்தமான எழுத்தாளர்கள் இருக்கின்றனர். தேடி படிக்கும் புத்தக தலைப்புகள் இருக்கின்றன. ஆனால் இவை தவிர ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றனவே. அவற்றில் ஏதோ ஒன்று உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம் அல்லவா? இப்படி கேட்பதோடு இவ்வாறு உங்களுக்கு பிடித்திருக்க கூடிய புத்தகத்தை இந்த தளம் அறிமுகம் செய்கிறது. இந்த தளத்தில் என்ன விஷேசன் என்றால் வசகர்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்ப புத்தகங்களை பரிந்துரைக்க கேட்கலாம். உதாரணமாக எளிதாக படிக்க கூடிய புத்தகம் தேவை என குறிப்பிட்டு த

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் ; வழிகாட்டும் இணையதளங்கள்.

  1. எப்போதுமே உங்கள் பதிவின் ரசிகன் நான் .மிக தேவையான விசயங்களை பதிவு செய்ய ,மிக பெரிய புத்தி பலம் அவசியம் .அது உங்களிடம் இருக்கிறது .

    Reply
    1. cybersimman

      நான் மிகவும் ரசித்து எழுதிய பதிவு இது. தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. புத்தகங்களுக்கான வலைப்பின்னல் சேவையான லைப்ரரிதிங் மற்றும் குட்ரீட்ஸ் பற்றி எழுத வேண்டும் என எண்ணியுள்ளேன். உங்கள் கருத்து அதற்கு ஊக்கம் அளிக்கிறது.

      அன்புடன் சிம்மன்.

      ——–
      பதிவுகளை பிடித்திருப்பதாக சொன்னதற்கு நன்றி. முடிந்தால் எனது தொகுப்பு நூலான இணையத்தால் இணைவோம் படித்து பார்த்து கருத்து சொல்லவும். ; http://600024.com/store/inaiyathal-inaivom-mathi-nilayam

      Reply

Leave a Comment

Your email address will not be published.