தாவர ஆராய்ச்சிக்கு நீங்கள் தயாரா?

இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன தெரியுமா? இலைகளில் இருக்கும் குளோரோபில் எனப்படும் பச்சியம் தான் காரணம் என்று இந்த கேள்விக்கு நீங்கள் பளிச் என் பதில் சொல்லிவிடக்கூடும். சரி, மரத்தில் இருந்து இலைகள் ஏன் உதிர்ந்து விழுகின்றன? அப்படி உதிர்வதற்கு முன் அவை ஏன் மஞ்சளாகவும் பழுப்பாகவும் நிறம் மாறுகின்றன? இன்னும் சில இலைகள் ஏன் சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன ? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும் சரி, அல்லது இது போன்ற சுவாரஸ்யமான கேள்விகள் மூலம் இலைகள் பற்றியும் தாவிரங்கள் குறித்தும் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினாலும் சரி, சயின்ஸ் மேன் சிம்பில் (http://www.sciencemadesimple.com/leaves.html )  இணையதளம் கவர்ந்திழுக்கும்.

உங்களை போன்ற சுட்டீஸ்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. அதற்கேற்ப சீன்ன சின்ன சோதனைகள் மற்றும் கட்டுரை தலைப்புகள் மூலம் அறிவியலை கற்றுத்தருகிறது. இந்த தளத்தின் ஹைலைட்டோ அறிவியல் தொடர்பான சுவாரஸ்யமான கேள்விகளும் அவற்றுக்கான எளிமையான பதில்களும் தான். இயல்பாகவே சுட்டீஸ்களுக்கு தங்களை சுற்றியுள்ள உலகை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தின் பயனாக மனதில் பல் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும் என்று குறிப்பிடும் இந்த இணையதளம் இத்தகையை கேள்விகளுக்கான பதில்களை அளிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது.

இப்படி இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளில் ஒன்று தான், இலைகள் ஏன் நிறம் மாறுகின்றன ?
இந்த கேள்வியை நீங்கள் எப்போதேனும் கேட்டுக்கொண்டதுண்டா
? ஏன் என்றால் குளிர்காலம் வருவதற்கு முன் மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். ! ஏன் இந்த மாற்றம் என வியந்திருக்கலாம். இந்த மாற்றம் நிகழும் காலம் இலையுதிர் காலம் என்று குறிப்பிடப்படுகிறது. பருவகாலங்களில் இது மிகவும் முக்கியமானது. குளிர்காலத்துக்கு முன் வருவது. ஆகையால் குளிர் காலத்துக்கு தயாராகும் வகையில் தான் மரங்கள் இலைகளை உதிர்க்க துவங்குகின்றன. குளிர்காலம் வந்தால் நமக்கெல்லாம் குளிரால் நடுங்கும். மரங்களுக்கு நடுக்க வராது என்றாலும் வேறு விதமான பிரச்சனை உண்டு. குளிர்காலத்தில் அவற்றுக்கு தேவையான அளவு வெய்யில் இருக்காது என்பது தான் பிரச்ச்னை. மரங்களுக்கு ஏன் வெய்யில் தேவை என்பது உங்களுக்கே கூட தெரிந்திருக்கலாம். மரங்களுக்கும் சரி ,தாவரங்களுக்கும் சரி இலைகள் தானே உணவுக்கான வழிகள். ஆம், அவற்றை பொறுத்தவரை இலைகள் , உணவு உற்பத்தி ஆலைகள். இலைகள் பச்சியத்தை கொண்டு சூரிய ஒளி மூலம் உணவு தயாரிக்கின்றன. ஒளிச்சேர்க்கை ( photosynthesis.) என்று சொல்லப்படும் இந்த முக்கிய நிகழ்வுக்க
ு தண்ணீரும் தேவை. ஆனால் குளிர்காலத்தில் மரங்களுக்கு தேவையான அளவு தண்ணீரும் கிடைக்காது
, வெய்யிலும் இருக்காது. இந்த காலத்திலும் இலைகள் வழக்கமான முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டால் அதற்கேற்ப ஒளியும் நீரும் கிடைக்காமல் திண்டாடிப்போகும்.

எனவே தான் மரங்கள் குளிர்காலம் வருவதற்கு முன்பாகவே பச்சியம் உற்பத்தி செய்வதை நிறுத்திக்கொள்கின்றன. அதோடு இலைகள் உள்ள காம்பு பகுதியையும் நீர் வராமல் மூடி விடுகின்றன. பச்சியம் இல்லாமல் இலைகளின் பச்சை நிறம் மறையத்துவங்கின்றன. அப்போது இலைகளில் உள்ள மற்ற ரசாயணங்களின் நிறம் முதன்மை பெறுவதால் அவை மஞ்சளாகவோ பழுப்ப்பாகவோ தோன்றுகின்றன. நீர் வரத்து நின்று விட்டதால் நாளைடைவில் இலைகள் காய்ந்து விழுந்து விடுகின்றன. அதனால் மரங்களுக்கு கவலையில்லை. குளிர் காலம் முடிந்ததும் மீண்டும் அந்த இடங்களில் புதிய இலைகள் துளிர்க்கத்துவங்கி விடும். இலைகள் நிறம் மாறும் ரகசியம் இது தான்.

எல்லாம் சரி, உணவு உற்பத்தை நிறுத்திய பின் மரம் சாப்பாட்டுக்கு என்ன செய்யும் என்று கேட்கலாம். மரங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையானவை தெரியுமா? குளிர் காலம் சிக்கலானது என தெரிந்து முன் கூட்டியே உணவை தேக்கி வைத்துக்கொள்ளும். ஒரு சில மரங்கள் இதற்கு இலைகளையே உணவு சேமிப்பு கிடங்ககாக பயன்படுத்துகின்றன. மரங்களின் உனவு எனப்து சர்க்கரை ( glucose) தானே. சூரிய ஒளி மற்றும் குளிர்கால இரவுகள் இந்த சர்க்கரையை சிவப்பாக மாற்றுவதால் இலைகள் நிறமும் சிவப்பாக மாறுகிறது. ஒரு சில மரங்களில் இலைகளின் கழிவுகள் பழுப்பு நிறமாகின்றன.

ஆனால் எல்லா மரங்களும் குளிர்காலத்தில் உணவு உற்பத்தியை நிறுத்து கொள்வதில்லை. ஒரு சில மரங்கள் குளிர்காலத்திலும் உணவு உற்பத்தி செய்து கொள்கின்றன. அவற்றின் இலைகள் அதற்கேற்ப விஷேச தன்மை கொண்டவையாக குளிர் மற்றும் ஈரப்பத இழப்பை எதிர்ப்பவையாக இருக்கின்றன. இந்த வகையான மரங்கள் பசுமை மாறா ரகத்தை சேர்ந்தவை. இன்னும் சில மரங்கள் ஊசி போன்ற இலைகளை பெற்றிருக்கின்றன.

மரம் போல நின்று கொண்டிருப்பதாக நம்மில் சிலரை சொல்லக்கூடும். ஆனால் நாம் நினைப்பது போல மரங்கள் சும்மா நிற்பதில்லை பாருங்கள் ,அவை சுறுசுறுப்பாகவும் இருக்கின்ற. பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகவும் இருக்கின்றன , இல்லையா?

 ஒரு சுவாரஸ்யமான கேள்வியில் துவங்கி மரங்களை பற்றி அறிந்து கொண்டது போலவே இந்த இணையதளத்தில் இன்னும் பல விஞ்ஞான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அறிவியல் சார்ந்த சோதனைகளையும் மேற்கொள்ளலாம்.

இதே கேள்விக்கு ஹைலைட்கிட்ஸ் ( https://www.highlightskids.com/science-questions/how-and-why-do-leaves-fall-trees) இணையதளமும் ரத்தினச்சுருக்கமாக அழகாக பதில் அளிக்கிறது. மரங்களுக்கு பட்டை இருப்பது ஏன் என்ற கேள்வுக்கும் பதில் தரப்பட்டுள்ளது . இவை மட்டும் தானா? நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? , பூச்சிகளின் இரத்தம் ஏன் மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது ?இரவில் நிலவு நம்மையே பின்தொடர்வது போல தோன்றுவது ஏன்? பலூனில் காற்று சுருங்கிப்போவது ஏன்? போன்ற கேள்விகளுக்கும் இந்த தளத்தில் பதில்களை தெரிந்து கொள்ளலாம்.

 http://dnr.wi.gov/eek/veg/trees/treestruecolor.htm இந்த தளத்திலும் இலைகளை பற்றியும் நாம் வாழும் பூமி பற்றியும் அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

———–

நனறி.சுட்டி விகடன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

6 Comments on “தாவர ஆராய்ச்சிக்கு நீங்கள் தயாரா?

  1. Ravichandran R

    uruppadiyana enaya dhalam.

    Reply
    1. cybersimman

      நிச்சயமாக.பயனுள்ள இணையதளங்கள் தவிர மற்றவை பற்றி அநேகமாக நான் எழுதுவதில்லை.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. narayanan chormpet

    THALAI; I LIKE IT WELL DONE

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி. கேட்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஆனால் இது போன்ற அடிப்படையான இணையதளங்கள் தமிழிலும் உருவாக்கப்பட வேண்டும் என்பது என விருப்பம்.

      இதே போல தாவிரவியல் ஆய்வுக்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் பட்பிரஸ்ட் எனும் இணையதளம் பற்றிய விரிவான அறிமுகம் எனது தொகுக்கு நூலான இணையத்தால் இணைவோம் – இடம் பெற்றுள்ளது.: http://600024.com/store/inaiyathal-inaivom-mathi-nilayam

      அன்புடன் சிம்மன்

      Reply
  3. இது தமிழில் இருந்தால் நல்லா இருக்கும் .. வார்த்தைகள் சிலவற்றிற்கு அர்த்தம் தெரியாததால் ஆர்வம் குறைந்துவிடுகிறது …
    தொடர்ந்து பல நல்ல தளங்களை அறிமுகபடுத்தி வருவதற்கு நன்றி

    Reply
    1. cybersimman

      இது போன்ற தளங்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். இவற்றை அறிமுகம் செய்யும் நோக்கமும் அதற்காக தான். தமிழி உருவாக்கப்ப்ட வேண்ட்ய தளங்கள் என்று ஒரு பட்டியலே என்னிடம் இருக்கிறது.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.