christian.jpg-pwrt2

உதவினார், உலகப்புகழ் பெற்றார்; இணையம் கொண்டாடும் வாலிபர்

அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சில நேரங்களில் சரியான சின்ன செயல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்த்தியுள்ளது.

பிரிட்டனின் ஹார்விச் நகரைச்சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் கிரிஸ்டியன் டிரவுஸ்டேல்.(Christian Trouesdale ). 19 வயதாகும் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்துக்கொண்டே ஆல்டி எனும் டிபார்ட்மண்டல் ஸ்டோரில் பகுதிநேர ஊழியராக இருக்கிறார்.

சமீபத்தில் அவரது கடைக்கு 96 வயது முதியவர் ஒருவர் வந்திருக்கிறார். வயோதிகம் காரணமாக தளர்ந்திருந்த அந்த முதியவரை வாலிபர் கிறிஸ்டியன் கைத்தாங்கலாக அவரது வீடு வரை அழைத்துச்சென்று விட்டு வந்தார். சிறிய உதவி தான். ஆனால் மனிதாபிமானத்தையும்,பெரியவர்கள் மீதான பரிவையும் வெளிப்படுத்திய செயல்.
ஹார்விச் என்பது பிரிட்டனில் மான்செஸ்டர் அருகே இருக்கும் போல்டனில் அமைந்துள்ள சிறிய ஊர். அங்கு ஒரு சூப்பர் மார்கெட்டில் வெளிப்பட்ட இந்த மனிதநேயம் மிக்க செயல் உள்ளூர்வாசிகளுக்கே கூட தெரியாமல் போயிருக்கலாம். வாலிபர் கிறிஸ்டியனும் தனது செயலை மிக இயல்பானதாகவே கருதியதால் அதை இக்கால வழக்கப்படி பேஸ்புக்கில் படம் பிடித்து நிலைத்தகவலாக வெளியிட்டுக்கொள்ள முற்படவில்லை.

உண்மையில் கிறிஸ்டியன் பெரியவருக்கு இதே போல உதவியது இது இரண்டாவது முறை. இந்த சம்பவத்திற்கு ஒரு வாரம் காலம் முன் அந்த பெரியவர் கடைக்கு வந்த போது வெளியே பேய்க்காற்று அடித்துக்கொண்டிருந்தது. இதனால் பெரியவர் தானாக நடந்து செல்ல தயங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த கிறிஸ்டியன், தனது மேலாளரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு அவரை கைப்பிடித்து அழைத்து வீட்டில் விட்டு வந்தார். அந்த உரிமையில் தான் பெரியவர் மறுமுறை வாலிபரின் உதவியை கோர அவரும் மகிழ்ச்சியுடன் அதை நிறைவேற்றினார்.எனினும் அவர் பேஸ்புக் பகிர்வு பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

ஆனால் சமந்தா பிராடி மற்றொரு பேஸ்புக் பயனாளி வாலிபரின் இந்த செயல் பாராட்டுக்குறியது என்றும் இதை உலகுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார். இந்த காட்சியை நேரில் பார்த்த சாட்சி. வாலிபர் கிறிஸ்டியன் முதியவரை அன்போடு பொறுமையாக கைப்பிடித்து அழைத்துச்சென்றதை பார்த்து சமந்தா , அட இந்த பையன் தான் எத்தனை பொறுப்பாக இருக்கிறான் என நெகிழந்திருக்கிறார்.

அருகாமையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் சம்ந்தா, கிறிஸ்டியன் செயலை பாராட்டியதோடு ,இந்த தகவலையும் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதி கேட்டார்.
அதன் படி தனது பேஸ்பக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவும் செய்தார். இதை நான் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் எனும் அறிமுக வரியுடன் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். வாலிபர் கிறிஸ்டியனின் அன்பான,கணிவான ,சிந்தனைமிக்க செயலை பாராட்டியவர், மனிதகுலம் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இந்த வாலிபரின் செயலுக்கு கொஞ்சம் அங்கீகாரம் தேடித்த விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் விரும்பியது போலவே சக பேஸ்புக பயனாளிகள் பலரும் வாலிப்ரைன் இந்த செயலை மனதார பாராட்டி அவர் கைத்தட்டலுக்கும் பூங்கொத்துக்கும் தகுதியானவர் என முடிவு செய்தனர். அந்த எண்ணத்துடனே இந்த தகவலுக்கு லைக் தெரிவித்து இதை தங்கள் நட்பு வட்டத்திலும் பகிர்ந்து கொண்டனர். விளைவு இந்த தகவலும் படமும் பேஸ்புக்கில் வைரலாக பரவியது. பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டும் தெரிவித்தனர்.
அமெரிக்க முதல் கனடா, நியூசிலாந்து என உலகின் பலநாடுகளில் இந்த தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு பலரும் தங்கள் பாராட்டுகளை பதிவு செய்தனர்.

இவ்வாறு இரண்டு லட்சம் முறைகளுக்கு மேல் கைல் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரால் இந்த தகவல் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பின்னூட்டம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த செயலைப்பார்த்து உனது அம்மா நிச்சயம் பெருமை கொள்வார் என ஒரு பயனாளி குறிப்பிட்டிருந்தார்.
இனொருவர் நீ மிகப்பெரிய ஆசிர்வாதம் என தெரிவித்திருந்தார். இது போன்ற செயலை நான் அதிகம் பார்க்கமாட்டேன் என நினைத்துக்கொண்டிருந்தேன் என இன்னொருவர் கூறியிருந்தார். இன்னொருவரோ இவரைப்போன்ற வாலிபர்கள் அதிகம் தேவை என கூறியிருந்தார். இப்படி வாலிபருக்கு வாழ்த்துக்கள் குவிந்து ஒரே நாளில் உலகம் அறிந்தவராக மாறியிருக்கிறார்.

பேஸ்புக் மூலம் கிடைத்திருக்கும் இந்த கவனம் எதிர்பாராதது என்று வாலிபர் கிறிஸ்டியன் லேசான சங்கடத்துடன் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் விநோதமாக இருக்கிறது,ஏனெனில் இந்த செயல் தனக்கு இயலபானது, பெற்றோர்கள் , மற்றவர்கள் நம்மை நடத்த விரும்புவது போலவே அவர்களிடம் நடந்து கொள்ளும்படி தன்னை வளர்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வாலிபரை பிரபலமாக்கிய பேஸ்புக் பகிர்வு: https://www.facebook.com/Youniquebybrady/posts/10206133693811604

—-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *