இன்ஸ்டாகிராம் நட்சத்திரமான பார்பி பொம்மை

அழகான பார்பி பொம்மை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பல இடங்களில் பார்பி பொம்மைகளை நீங்கள் பார்த்து ரசித்தும் இருக்கலாம்.டாக்டர் பார்பி, தொழில்முனைவோர் பார்பி என பலவிதங்களில் இந்த பொம்மை அவதாரம் எடுத்திருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இப்போது பார்பி பொம்மை இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அசத்தலான மேக்கப்போடு ,அட்டகாசமான பின்னணியில் எடுக்கப்பட்ட கியூட்டான செல்பிக்களை எடுத்து பார்பி பொம்மை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது.பார்பியின் இன்ஸ்டாகிராம் பக்கம் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால் பார்பி இப்போது புதிய இன்ஸ்டாகிராம் நட்சத்திரமாகி இருக்கிறாள்.

சோஷியலைட் பார்பி எனும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் நீங்களும் சொக்கிபோய் விடுவீர்கள். பார்பி படங்களை பார்க்கும் போது உங்களை அறியாமல் புன்னகைக்கவும் செய்வீர்கள். ஏனெனில் இந்த பார்பி பகிரும் படங்கள் அவளது சுய புராண சித்திரங்கள் அல்ல; மாறாக இன்ஸ்டாகிராமில் தடுக்கி விழுந்தால் காணக்கூடிய மிகவும் பொதுவான காட்சிகளை நுட்பமாக கேலிக்கும் கிண்டலுக்கும் இலாக்காக்கும் விமர்சன சித்திரங்கள்!

பார்பி பகிர்ந்து கொள்ளும் படங்களில் பார்க்கும் காட்சிகள் எல்லாமே இன்ஸ்டாகிராமில் எங்கோ பார்த்தது போலவே இருக்கும். அவற்றில் பார்பி கொடுக்கும் போஸ்களும் கூட ஏற்கனவே பல இன்ஸ்டாகிராம் படங்களில் பார்த்தது தான். பார்பி இஸ்டாகிராமில் அவதாரம் எடுத்திருக்கும் நோக்கமும் அது தான் – இன்ஸ்டாகிராமில் பலரும் பகிர்ந்து கொள்ளும் ஒரே மாதிரியான புகைப்படங்களையும், அதைவிட மோசமாக அவற்றுடன் வெளியிடப்படும் ஒரே மாதிரியான புகைப்பட குறிப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் பார்பி தானும் அதே போல படம் எடுத்துக்கொண்டு அதே படக்குறிப்புகளை வெளியிட்டு நையாண்டி செய்து வருகிறாள்.
ஒரு படத்தில் பார்பி பெரிய கண்ணாடி அணிந்து தலைமுடியை காற்றில் பறக்கவிட்டபடி கடற்கரை மணலில் நின்று கொண்டிருக்கிறாள். இன்னொரு படத்தில் மலைச்சரிவு ஒன்றை ஏகாந்தமாக வேடிக்கை பார்த்த படி நிற்கிறாள். இன்னொரு படத்தில் சூரியன் மறையும் அந்து வானத்தை நெற்றிக்கு மேல் கைவைத்தபடி நோக்கி கொண்டிருக்கிறாள். இயற்கை எழில் கொஞ்சும் காட்சி ஒன்றில் லயித்தபடி மற்றொரு படத்தில் காணப்படுகிறாள். இப்படி படங்கள் விரிகின்றன.

இந்த படங்கள் எல்லாமே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் , இயற்கையான காட்சிகள் அல்லது தனித்துவம் மிக்க காட்சிகள் எனும் பெயரில் பகிர்ந்துகொள்ளப்படும் செயற்கையான காட்சிகளை நையாண்டி செய்வதாகும்.
இணையத்தில் இது பகிர்வு யுகம் தான் என்பதில் சந்தேகமில்லை. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பலரும் தங்கள் அன்பவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு வருகின்றன. புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் பலர் தங்கள் அனுபவங்களை புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
எல்லோருமே இனிமையான காட்சிகளையும், மறக்க முடியாத தருணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் சிக்கல் என்ன என்றால் இத்தகைய காட்சிகளும், தருணங்களும் எல்லோருக்கும் சாத்தியமில்லை.அதிலும் எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. ஆனால் இதை உணராமல் இன்ஸ்டாகிராம் படம் என்றால் அது அட்டகாசமான சூழலில் எடுக்கப்பட்ட அருமையான படமாக இருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் பலரும் ஒரே மாதிரியான படங்களை எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரமிக்க வைக்கும் ஏரியில் படகு சவார் செய்வது,சூரியோதயத்தை கண்டு களிப்பது, கடற்கரை மனலில் நின்று இயற்கையை ரசிப்பது போன்ற இந்த சித்திரங்கள் ஒரே மாதிரியாக இருப்பது கூட பரவாயில்லை. ஆனால் இந்த படங்களை தனித்து நிற்கச்செய்யும் வகையில், அவற்றுடன் வெளியிடப்படும் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் எனும் பொருள்படும் புகைப்பட குறிப்புகளும் ஒரே மாதிரி இருப்பது தான், இவற்றின் அழகான தோற்றத்தை மீறி பெரும் அலுப்பை உண்டாக்கி அதிருப்தியில் ஆழ்த்துகின்றன.

இன்ஸ்டாகிராம் படங்கள் மூலம் மற்றவர்களை கவர்ந்துவிட வேண்டும் என துடிப்பவர்கள் தான் இந்த வகையான படங்களை இன்னும் அதிகமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த வகையான பகிர்வுகளை இன்ஸ்டாகிராம் படங்கள் மூலமே விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்? அதை தான் பார்பி செய்து கொண்டிருக்கிறாள்.
அதாவது அமெரிக்க இளம் பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் பார்பி மொம்மை வாயிலாக இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அமெரிக்காவின் போர்ட்லாண்டில் வசிக்கும் இந்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த புகைப்பட கலைஞர், இன்ஸ்டாகிராமில் #liveauthentic , #socalityஆகிய ஹஷ்டேகுடன் பகிரப்படும் புகைப்படங்களாக பார்த்து தேர்வு செய்து பார்பி மூலம் அவற்றை பகடி செய்வதாக வயர்டு இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “எல்லோரும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான படங்களை எடுத்து ஒரே மாதிரியான குறிப்புகளை வெளியிடுகின்றனர்” என்று கூறும் அந்த புகைப்பட கலைஞர் , “ இந்த படங்களில் எதையும் தனித்து அடையாளம் காண முடியவில்லை என்பதால், ஒரே மாதிரியான தோற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் பார்பி பொம்மைகளை கொண்டு இவற்றை சுட்டிக்காட்டுவதை விட வேறு சிறந்த வழி எது என்று கேட்கிறார்.

பார்பியின் இன்ஸ்டாகிராம் பக்கம்:https://instagram.com/socalitybarbie/

—–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.