இணைய பிழை செய்திகளில் ஒரு புதுமை!

முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுவது மட்டும் செய்தி அல்ல; அவற்றின் பிழை செய்தி பக்கங்கள் சீராமைக்கப்படுவதும் கவனிக்கத்தக்க செய்தி தான்! ஆனால் இணையதளங்கள் புதுப்பிக்கப்படும் அளவுக்கு பிழை பக்கங்கள் புதுப்பிக்கப்படுவதுமில்லை, அப்படி அவை புதுப்பிக்கப்படும் போதும் பெரிதாக கவனிக்கப்படுவதுமில்லை- அதனால் தான் எப்.டி.காம் இணையதளத்தின் பிழை பக்கம் புதுமையான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இணைய உலகிற்கான செய்தியாக இருக்கிறது.

பிழை பக்கம் என்பது இணையத்தில் ஒருவர் அடிக்கடி எதிர்கொள்ளக்கூடியது தான். பல காரணங்களினால் ஒரு இணையதளத்தின் உள்ளடக்கம் தோன்றாமல் வெறுமையான பக்கம் வந்து நிற்கும். அதற்கான விளக்கமாக, மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் இணைய பக்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிடப்பட்டு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கும். 404 நாட் ஃபவுண்ட் பிழை செய்தி என இது குறிப்பிடப்படுகிறது. இதற்கான தொழில்நுட்ப விளக்கம் கொஞ்சம் சிக்கலானது என்றாலும் இதன் பொருள் நீங்கள் தேடி வந்த இணைய பக்கம் சர்வரில் இல்லை என்பது தான்.

இணையவாசிகளுக்கு இந்த அறிவிப்பை போல ஏமாற்றம் அளிக்ககூடியது வேறு எதுவும் இல்லை. அதே நேரத்தில் அதிகம் அலுப்பூட்டக்கூடியதும் கூட!
ஒரே மாதிரியான பிழை செய்தியை வெவ்வேறு கட்டங்களில் வேறு வேறு இணையதளங்களில் பார்க்க நேர்ந்தால் வெறுப்பாக தான் இருக்கும்.

இணையதள பக்கங்களை அணுகுவதில் ஏதேனும் சிக்கல் என்றால் இந்த செய்தி தானாக திரையில் தோன்றும்.அதன் காரணமாகவே இவை ஒரே மாதிரியாக இருக்கின்றன.
ஆனால் இணையதளங்கள் விரும்பினால் தங்கள் சர்வர்களில் மாற்றம் செய்து வழக்கமான பிழை செய்தி அறிவிப்புக்கு பதில் பிரத்யேகமான பிழை செய்தியை இடம் பெற வைக்கலாம்.பெரும்பாலான நிறுவனங்கள் இதை செய்வதில்லை என்றாலும் ஒரு சில தளங்கள் இவற்றில் கொஞ்சம் புதுமையை புகுத்தி பயனாளிகளுக்கு ஆசுவாசம் அளிக்க முற்படுவதுண்டு. அந்த வகையில் சற்றே கலைநயமான பிழை செய்தி பக்கங்கள் எல்லாம் கூட உருவாக்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற வணிக நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் ( எப்.டி.காம்) இப்போது விழித்துக்கொண்டு தனது தளத்தின் பிழை செய்தி பக்கத்தை மாற்றி அமைத்துள்ளது.
இந்த பக்கத்தில், வழக்கம் போல, பக்கத்தை காணவில்லை ( பேஜ் நாட் ஃப்வுண்ட்) எனும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அதன் கீழே நீங்கள் தேடிய பக்கம் காணவில்லை, அதற்கு பதிலாக நீங்கள் இந்த பக்கங்களை பார்க்கலாம் அல்லது தகவல்களை தேடலாம் அல்லது முகப்பு பக்கத்திற்கு செல்லலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

இவற்றில் கிளிக் செய்தால் பொருளாதாரம் தொடர்பான முக்கிய தலைப்புகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய தகவல் பட்டியலை பார்க்க முடிகிறது. தேடல் பகுதியை கிளிக் செய்தால் முக்கிய பொருளாதார செய்திகள் தோன்றுகின்றன. முகப்பு பக்க பரிந்துரையை கிள்க் செய்தால் நிதித்துறை தொடர்பான வார்த்தைகளுக்கான அகராதி விளக்கங்களை பார்க்கலாம்.

பிழை செய்தியுடன் கூடுதல் தகவல்களை அளிக்கும் இந்த மாறுபட்ட அணுகுமுறையை நிச்சயம் இணையவாசிகள் விரும்புவார்கள்.
எப்.டி.காம் இந்த பக்கத்தை மாற்றி அமைத்துள்ளதுடன் அதற்கான அழகான விளக்கத்தையும் அளித்துள்ளது.
404 பிழை செய்தி பக்கத்தை இணையவாசிகள் அடிக்கடி எதிர்கொள்ள நேர்ந்தாலும் இந்த பக்கம் தொழில்நுட்ப குழுவால் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது,ஆனால் இணையவாசிகள் எதிர்பார்த்து வந்ததை தர முடியாமல் ஏமாற்றம் அளிக்கும் நிலையில் , இந்த பக்கத்தின் உள்ளடக்கத்தையாவது மேம்படுத்துவது சிறந்ததாக இருக்கும் என கருதி, இந்த மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் புதுமையாக மட்டும் இல்லாமல், எப்.டி.காமின் இணையதள உள்ளடக்கத்திற்கு பொருத்தமான வகையில் அமைந்திருப்பது தான் இந்த மாற்றத்திற்கு மேலும் அர்த்தத்தை அளித்துள்ளது.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும், இணையவாசிகள் பிழை செய்தி பக்கத்தை பார்த்ததும் திரும்பி செல்லப்போகிறார்கள். அந்த சில நொடிகளில் அவர்கள் அலுத்துக்கொள்ளலாம்.அதிருப்தி அடையலாம்.ஆனால் அந்த சில நொடிகளை அவர்களுக்கு பயனுள்ள அனுபவமாக ஆக்கும் வகையில் செயல்படுவது என்பது தங்க்ளை தேடி வரும் இணையவாசிகள் மீது இணையதளங்களின் நிர்வாகம் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது.

எப்.டி.காமின் விளக்கம்:http://labs.ft.com/articles/four-oh-four/

—–

தளம் புதிது; என்ன படிக்கலாம்?

இது கொஞ்சம் விநோதமான இணையதளம்.இப்போது என்ன வாசிக்கலாம் என பரிந்துறைக்கிறது இந்த தளம் (readpoopfiction).வாசிப்பு பரிந்துறையில் என்ன விநோதம் இருக்க கூடும் என கேட்கலாம்.இந்த தளம் எந்த இடத்தில் இருந்து படிப்பதற்கான பரிந்துறையை வழங்குகிறது என்பதில் தான் இதற்கான பதில் இருக்கிறது. சிலருக்கு கழிவறையில் அமர்ந்திருக்கும் போது ஏதாவது படிக்கும் பழக்கம் இருக்கிறது.இந்த பிரிவினர், படிப்பதற்கு ஏற்ற கதைகள் இந்த தளம் முன்வைக்கிறது. 2 நிமிடங்களில் படிக்க கூடிய குறுங்கைதை, 3 நிமிடங்களில் படிக்க கூடிய சிறிய கதை, 4 நிமிடங்களில் படிக்க கூடிய கதை அதற்கு மேல் படிக்க கூடிய கதை , கதைக்கான கால அளவை குறிப்பிட்டு தேடலாம்.
அந்த இடத்தில் படிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம், நல்ல கதைகளை வாசிக்க இந்த தளத்தின் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏதாவது ஒரு குறுங்கதை, ஏதாவது ஒரு நடுத்தர அல்லது நீள் கதை என கோரி வாசிக்கலாம். ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதை , அடுத்த கதை என கிளிக் செய்து கொண்டே இருக்கலாம். கதைகள் ஆங்கிலத்தில் இருப்பது மட்டுமே சின்ன குறை.

இணையதள முகவரி: http://readpoopfiction.com/

—–

செயலி புதிது; தினம் ஒரு செயலி

புதிதாக அறிமுகமாகும் ஆயிரகணக்கான செயலிகளில் நீங்கள் அடுத்ததாக பயன்படுத்தக்கூடிய செயலியை கண்டறிய உதவுகிறது டெக்ஸ்ட்மீஆப்ஸ் செயலி. எப்படி தெரியுமா? தினம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட செயலியை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகத்தை எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பி வைக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு செயலி தான், அதற்கு மேல் வராது!
ஆனால் ஒன்று எல்லாமே ஐ.ஒ.எஸ் செயலிகள். இன்னொன்று குறுஞ்செய்தி வடிவில் தகவல் வருவதால் அதற்கான கட்டணம் பொருந்தி வரலாம். ஆனால் செயலிகள் அறிமுகம் செய்து கொளவதில் எளிமையான ,புதுமையான அணுகுமுறை !

மேலும் விவரங்களுக்கு: http://www.textmeapps.com/

——-

கூகுள் டாக்சில் புதிய வசதி

இணையம் வழியே டைப் செய்து ஆவணங்களை உருவாக்கி கொள்ள உதவும் கூகுள் டாக்ஸ் சேவையில் புதிய வசதி அறிமுகமாகி இருக்கிறது. வாய்ஸ் டைபிங் எனப்படும் குரல் வழி டைப் வசதி தான் அது. ஆக, இனி கூகுள் டாக்சில் டைப் செய்ய வேண்டும் என்றில்லை; டைப் செய்ய வேண்டிய வாசகங்களை வாய் மூலமாக டிக்டேட் செய்தாலே போதுமானது. இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள குரோம் பிரவுசரின் செட்டிங் பகுதிக்குச்சென்று வாய்ஸ் டைபிங் அம்சத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பேசத்துவங்கினால் போதும் எழுத்துக்கள் தானாக டைப் ஆகத்துவங்கும். இது தவிர ஆவணங்களில் இருந்து தொடர்புடைய தகவல்களை தேடும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
குரல் வழி டைப்பிங்கைப்பொருத்தவரை ஆங்கிலம் உள்ளிட்ட 40 மொழிகளில் இந்த வசதி அறிமுகமாகி உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி இடம்பெற்றுள்ளது.தமிழை விரைவில் எதிர்பார்க்கலாமா?

வாய்ஸ் டைபிங் பற்றி அறிய: https://support.google.com/docs/answer/4492226?hl=en

——-

புகைப்பட அகழ்வாராய்ச்சியாளர்

வெப்ஷாட்ஸ், போட்டோ பக்கெட் போன்ற இணையதளங்களை நினைவு இருக்கின்றதா? இவை எல்லாமே ஒரு காலத்தில் இணையத்தில் பிரபலமாக இருந்த புகைப்பட பகிர்வு அல்லது சேமிப்பு சேவைகள். இப்போது இவற்றில் பல பயன்பாட்டில் இல்லை.போட்டோ பக்கெட் தொடர்ந்து இயங்குகிறது, ஆனால் பலரும் அதை மறந்துவிட்டனர். அது மட்டும் அல்ல, இந்த தளங்களில் கணக்கு துவங்கி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டவர்களில் பலரும் கூட தங்கள் பக்கங்களை மறந்து விட்டனர். இந்த படங்கள் எல்லாம் இணையத்தின் அடி ஆழத்தில் கேட்பாரற்று கிடக்கின்றன.
இவற்றை எல்லாம் மீண்டும் கண்டெடுத்து புது வாழ்வு அளித்து வருகிறார் புகைப்பட கலைஞரான டவுக் பேட்டன்ஹவுசன். புகைப்பட பகிர்வு சேவைகளில் கைவிடப்பட்ட கணக்குகளில் புதைந்து கிடக்கும் புகைப்படங்களை அகழ்வாராய்ச்சி செய்து அவற்றில் இருந்து தனித்து நிற்க கூடிய படங்களை தேர்வு செய்து தனது வலைப்பதிவில் இவர் வெளியிட்டு வருகிறார். வலைப்பதிவு பெயர் என்ன தெரியுமா? இணைய வரலாறு (internethistory )! .
கடந்த 2010 ம் ஆண்டு முதல் இந்த வலைப்பதிவை அவர் நடத்தி வருகிறார். புகைப்பட பகிர்வு தளங்களில் கைவிடப்பட்ட கணக்குகளாக தேடிப்பார்த்து அவற்றில் ஏதேனும் ஒரு வகையில் கவனத்தை ஈர்க்கும் படங்களை தனது வலைப்பதிவில் வெளியிட்டு வருவதாக அவர் சொல்கிறார்.
ஸ்மார்ட்போன் காமிராக்கள் சகஜமாகி , சுயபடங்களை எடுத்து பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பரவலாக இருக்கும் நிலையில் சுவாரஸ்யமான சேவையாகவே இந்த வலைப்பதிவு அமைந்துள்ளது. நாளை கைவிடப்பட்ட சுயபடங்களுக்கும் கூட இப்படி ஒரு இணையதளம் தேவைப்படலாம்.

இணையதளம்;http://internethistory.tumblr.com/

——

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts