கூகுள் சிறந்த தேடியந்திரம் தான். இதில் சந்தேகமும் இல்லை: இதற்கு சான்றிதழும் தேவையில்லை. ஆனால் கூகுள் மட்டும் போதுமானதல்ல. இதை ஏற்கனவே நீங்கள் உணர்ந்திருக்கலாம். அல்லது இனி உணரலாம். எப்படியும் ஒற்றை தேடியந்திரத்தை மட்டும் சார்ந்திருப்பது நல்லது அல்ல. எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகளை நாடும் போது தேடியந்திர விஷயத்தில் மட்டும் நமது தேர்வை ஏன் குறுக்கி கொள்ள வேண்டும்.
எனவே கூகுள் தவிர வேறு தேடியந்திரங்களையும் நீங்கள் அறிந்திருப்பது உங்கள் இணைய அனுபவத்தை செழிப்பாக்கும். உங்களுக்கு கிடைத்த தேடல் முடிவுகள் சிறந்தவை தானா என்று ஒப்பிட்டு பார்ப்பது மாற்று தேடியந்திரங்கள் மூலம் தானே சாத்தியம்.
மாற்று தேடியந்திரங்கள் மட்டும் அல்லாமல், சிறப்பு தேடியந்திரங்கள் மற்றும் குறிப்பிட்ட நோக்கிலான பிரத்யேக தேடியந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இதன் பொருள் இன்றே கூகுளை விட்டு விட்டு வேறு தேடியந்திரத்திற்கு மாற வேண்டும் என்றில்லை. ஆனால், வேறு பல பொருடுத்தக்கூடிய தேடியந்திரங்கள் இருப்பதை தெரிந்து வைத்துக்கொண்டால் போதுமானது. அதன் பிறகு தேவை ஏற்படும் போது இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேடியந்திர பரப்பில் கூகுள் தவிர நூற்றுக்கணக்கில் தேடியந்திரங்கள் இருந்தாலும், அவற்றில் நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பத்து முக்கிய தேடியந்திரங்கள் இவை:
1. டக்டக்கோ: இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் தேடியந்திரம். கூகுள் போல உங்களின் ஒவ்வொரு இணைய அசைவையும் கண்காணிப்பதில்லை, உங்களைப்பற்றிய எந்த விவரத்தையும் சேமித்து வைப்பதில்லை என உறுதி அளிக்கும் தேடியந்திரம். கூகுள் இணையவாசிகளின் தேடல் சுவடுகளை விடாமல் கவனித்து விளம்பர வருவாய் பார்க்கிறது. இத்தகைய கண்காணிப்பை விரும்பாவிட்டால், டக்டக்கோ நல்ல தேர்வு.
இதன் தேடல் நுடமும் சிறந்தது தான். உடனடி தேடல் உட்பட பல்வேறு புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. பயன்படுத்திப்பார்த்தால் வியந்து போகும் வாய்ப்பு அதிகம்.; https://duckduckgo.com/
டக்டக்கோ பற்றி அறிய: http://bit.ly/2d5eSh2
2. வோல்பிராம் ஆல்பா: இது வழக்கமான தேடியந்திரம் அல்ல. கணக்கீடு இயந்திரம் என தன்னை வர்ணித்துக்கொள்கிறது. கூகுள் போல இணையத்தில் தேடி வந்து முடிவுகளை கொட்டுவதில்லை. ஆனால், தன்னிடம் உள்ள கணக்கிலடங்கா தரவுகளில் இருந்து தேடப்படும் பதத்திற்கு ஏற்ற தகவல்களை வரைபடமாக முன்வைக்கிறது. வழக்கமான தேடலைவிட, கணிதம், அறிவியல், புள்ளிவிரங்கள் சார்ந்த பிரத்யேக தேடலுக்காக அணுகும் போது அசர வைக்கும். ; https://www.wolframalpha.com/
வோல்பிராம் ஆல்பா பற்றி அறிய: http://bit.ly/2aFndTa
3. யாண்டெக்ஸ் : ரஷ்யாவின் கூகுள். சர்வதேச வடிவமும் இருக்கிறது. ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம். சொந்தமாக இணையத்தை துழாவி, இணையதளங்களை பட்டியலிட்டு, சொந்த அல்கோரிதம் அடிப்படையில் முடிவுகளை அளிக்கிறது. மொழிபெயர்ப்பு வசதி, இமெயில் ,பிரவுசர் என பல வசதிகளை கொண்டிருக்கிறது. தேடல் முடிவுகள் கூகுளில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். ; https://www.yandex.com
யாண்டெக்ஸ் பற்றி அறிய: http://bit.ly/2dybAyD
4. டாக்பைல்: இணையத்தின் பழைய தேடியந்திரங்களில் ஒன்று. இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. மெட்டா தேடியந்திர ரகத்தைச்சேர்ந்தது. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடி, பொருத்தமான முடிவுகளை பட்டியலிடுகிறது. பல தேடியந்திரங்களின் பலனை பெறுவது நல்லது தானே! http://www.dogpile.com/
டாக்பைல் பற்றி அறிய: http://bit.ly/2dybzLd
5. கிகாபிளாஸ்ட்: இன்னொரு பழைய தேடியந்திரம். சிறிய அளவில் துவக்கப்பட்டாலும், தனக்கென சொந்த தேடல் பட்டியல் மற்றும் தேடல் நுட்பம் கொண்டது. ஓபன் சோர்சிலானது என்பது இன்னும் சிறப்பு. ; http://www.gigablast.com
கிகாபிளாஸ்ட் பற்றி அறிய: http://bit.ly/2d8rjoy
6. பைண்ட்சவுண்ட்ஸ்: ஒலிகளை நாடுபவர்களுக்கான தேடியந்திரம். தேடல் என்பது தகவல்கள் சார்ந்தது மட்டும் அல்ல என உணரத்துவங்கி, ஒலி கோப்புகளை தேடும் போது இதன் அருமையை உணரலாம். ; http://www.findsounds.com
பைண்ட்சவுண்ட்ஸ் பற்றி அறிய: http://bit.ly/2d8sft6
7.ஒன்லுக்: அகராதிகளின் அகராதி இந்த தேடியந்திரம். வார்த்தைகளுக்கான பொருளை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய அகராதிகளில் தேட உதவுகிறது. ஒரே இடத்தில் ஆங்கில வேட்டை நடத்தலாம். பொருளை விவரித்து வார்த்தையை தேடும் வசதி உட்பட எண்ணற்ற உப வசதிகள் உள்ளன.; http://www.onelook.com
ஒன்லுக் பற்றி அறிய: http://bit.ly/1Q8OuvM
8. ஷோடன்: திகில் தேடியந்திரம். திகலை தேட முடியாது. ஆனால் இதன் விளைவுகள் திகிலை ஏற்படுத்தக்கூடியது. தகவல்களை தேடுவதற்கானது அல்ல. இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள எண்ணற்ற சாதனங்களை தேடுவதற்கானது. எதிர்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடியது. https://www.shodan.io
ஷோடன் பற்றி அறிய: http://bit.ly/2d5ecbQ
9. வேர்ல்ட்கேட்: உலகம் முழுவதும் உள்ள நூலகங்களின் புத்தகங்களை தேட உதவும் தேடியந்திரம். புத்தக பிரியர்களில் துவங்கி ஆய்வாளர்களை வரை பலரை மகிழ்விக்க கூடியது. இதன் விரிவும், ஆழமும் அசர வைக்கும்.; http://www.worldcat.org/
வேர்ல்ட்கேட் பற்றி அறிய: http://bit.ly/2diX6RW
10. டி.எம்.ஓ.இசட்: இணையத்தின் நுழைவு வாயிலாக யாஹு கொடி கட்டிப்பறந்த காலத்தில், புதிய இணையதளங்களை கண்டறிய உதவிய அதன் கையேடு நினைவில் இருக்கிறதா? பல்வேறு தலைப்புகளின் கீழ், இணையதளங்களை வகைப்படுத்திய அந்த கையேடு போலவே அமைந்த அருமையான இணைய வழிகாட்டி டி.எம்.ஓ.இசட் தேடியந்திரம். ஓபன் சோர்ஸ் முறையிலானது. நீண்ட காலம் தாக்குப்பிடித்திருப்பதுடன் அன்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.; http://www.dmoz.org/
டி.எம்.ஓ.இசட் பற்றி அறிய: http://bit.ly/2d8rMHm
மாற்று தேடியந்திர பட்டியலில் தானாக இடம் பெறும் மைக்ரோசாப்டின் பிங் மற்றும் யாஹூ இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்க்.காம் கேள்வி பதில் தளமும் சேர்க்கப்படவில்லை. இது முழுமையான பட்டியல் அல்ல. தேடியந்திர பரப்பின் நீள அகலத்தை உணர்த்துவதற்கான பட்டியலே. இதில் பிலக்கோ மற்றும் பிளிப்பிகஸ் ஆகிய தேடியந்திரங்கள் இடம்பெற வேண்டும் என விரும்பினாலும் அவை இப்போது பயன்பாட்டில் இல்லை.
இந்த பட்டியலில் உள்ள அனைத்து தேடியந்திரங்கள் குறித்தும் தமிழ் இந்து இணைய பதிப்பில் எழுதி வரும், ஆ’வலை’ வீசுவோம் தொடரில் விரிவாக எழுதியுள்ளேன். அந்த கட்டுரைகளின் இணைப்புகள் தான் ஒவ்வொரு தேடியந்திரத்துடனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற வேண்டிய தேடியந்திரங்கள் இன்னும் ஒரு பட்டியல் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.