சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று வழிகாட்டும் பல கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, வெற்று மிகைப்படுத்தலும், வணிக நோக்கிலான முன்னெடுப்புகளும் என புறந்தள்ளி விடலாம். மற்றபடி, ஏஐ சாட்பாட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கண் திறப்பாக அமையக்கூடிய வழிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த பின்னணியில் மிச்சிலி ஹாங் (Michelle Huang ) எனும் டிஜிட்டல் கலைஞர் சாட்ஜிபிடியை பயன்படுத்திய விதம், புதுமையானதாகவும், முன்னோடி அம்சம் கொண்டதாகவும் இருக்கிறது. ஹாங், சாட்ஜிபிடி மூலம் தனது இள வயது சுயத்தை மீண்டும் உருவாக்கி அந்த சிறிமியுடன் உரையாடி வியக்க வைத்தார்.
சாட்ஜிபிடி அறிமுகமாகி அதன் உரையாடும் திறன் பற்றி உலகமே வியந்து விவாதித்துக்கொண்டிருந்த நிலையில், ஹாங் தனக்குள் இருந்த சிறுமியுடன் உரையாடி அந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
சிறு வயது முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்தது, ஹாங்கின் இந்த பரிசோதனை முயற்சியில் கை கொடுத்தது. ஏழு வயது முதல் 19 வரை ஹாங் எழுதிய நாட்குறிப்பு பக்கங்களில் இருந்து, தனது சிறு வயது நம்பிக்கைகளை நன்கு பிரதிபலித்த குறிப்புகளை தேர்ந்தெடுத்து, சாட்ஜிபிடிக்கு பயிற்சி அளித்தார். அதன் பின், நாட்குறிப்பு அடிப்படையில் தனது சிறு வயது சிறுமியை உருவாக்கி கொண்டு தன்னோடு உரையாடுமாறு சாட்ஜ்பிடியிடம் கேட்டுக்கொண்டு, அப்படியே பேசினார்.
இப்படி தனது சிறு வயது சுயத்துடன் அவர் உரையாடிய போது கேட்ட கேள்விகளையும், அவரது சிறுமியாக சாட்ஜிபிடி அளித்த பதில்களையும் டிவிட்டரில் விரிவாக பகிர்ந்து கொண்டார்.
எந்த முன் முடிவுகளும் இல்லாமல், என்ன நடக்கிறது பார்க்கலாம் என்பது போல இந்த உரையாடலை மேற்கொண்டதாகவும், ஆனால் சில கேள்விகளுக்கு சாட்ஜிபிடி அளித்த பதில் வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தியதாக ஹாங் தெரிவித்திருந்தார். மேலும், சிறு வயது சுயத்துடன் உரையாடிய அனுபவம் கிட்டத்தட்ட ஒரு சிகிச்சை தன்மை கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஏஐ சேவைகள் நமக்கான முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்கலாம் என்றும் இது பற்றி பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
வளர்ந்து வந்துவிட்டாலும், ஐந்து வயதில் இருந்த சிறுமியின் சில கூறுகள் இன்னமும் தனக்குள் இருப்பதை உணரும் நிலையில், தனது சிறு வயது சுயத்தோடு பேசிப்பார்த்தது நல்ல புரிதலை அளித்தது என்றும் கூறியிருந்தார்.
சாட்ஜிபிடி பதில்களின் துல்லியத்தை விட இந்த புதுமையான அனுபவத்திலேயே கவனம் செலுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.
உங்கள் நாட்குறிப்புகளை கொண்டு உங்களோடு உரையாடக்கூடிய ஒரு தனிப்பட்ட சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம் என்பதை உணர்த்தும் வகையில் ஹாங்கின் முயற்சி அமைந்திருந்தது. டிவிட்டரில் இந்த முயற்சி பரபரப்பாக விவாதிக்கப்பட்டதோடு, ஊடகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
மிச்சிலி ஹாங் இந்த அனுபவத்தை தனது இணையதளத்திலும் விவரித்திருக்கிறார்: https://michellekhuang.com/young-michelle-ai-chatbot/
–
சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தில், எலிசா முதல் சாட்ஜிபிடி வரை பகுதியில், மைல்கல் சாட்பாட்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதில் விடுபட்டு போன சுவாரஸ்யமான ஒரு சாட்பாட் சார்ந்த முயற்சி இது.