Tagged by: chatgpt

இந்திய இல்லங்களில் சாட்ஜிபிடி பயன்பாடு!

சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்கும், ஆய்வுத்துறையை எப்படி பாதிக்கும்? என்பது போன்ற கேள்விகளையும் விட்டுவிடலாம். சாட்ஜிபிடி நம்முடைய இல்லங்களில் என்ன விதமாக பயன்படும், அவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம். ஒரு இல்லத்தலைவிக்கு சாட்ஜிபிடி எப்படி பயன்படும்? என்று யோசித்துப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் பெண்கள், சமையல் குறிப்பை தேட சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம். ( பாலின சார்பு பார்வைக்கு மன்னிக்கவும்). பிள்ளைகளுக்கு […]

சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்...

Read More »

குரங்கு கோட்பாடும், ஏஐ எழுதும் கவிதையும்!

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்னாகும் என நமக்குத்தெரியும். அதே குரங்கு கையில் கம்ப்யூட்டரை கொடுத்தால் என்னாகும் தெரியுமா? பூமாலைக்கு நேர்ந்தது தான் கம்ப்யூட்டருக்கு நேரும் என்று சொல்லாமல், கொஞ்சம் இதற்கான நிகழ்தகவுகளை யோசித்துப்பார்க்கலாம். செயற்கை நுண்ணறிவின் ஆற்றலயும், அதைவிட முக்கியமாக அதன் ஆற்றாமையையும் புரிந்து கொள்ள இது உதவும். முதலில், குரங்கு கையில் ஏன் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும்? இதற்கான பதில், ’முடிவில்லா குரங்கு கோட்பாட்டில்’ இருக்கிறது. அதாவது, ஒரு குரங்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, […]

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்னாகும் என நமக்குத்தெரியும். அதே குரங்கு கையில் கம்ப்யூட்டரை கொடுத்தால் என்னாகும் த...

Read More »

சாட்ஜிபிடிக்கு முன்னர் ’சைபாட்’ இருந்தது தெரியுமா?

சாட்ஜிபிடியின் சாத்தியங்களையும், வரம்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதல் சாட்பாட்டான எலிசாவை மனதில் கொண்டாக வேண்டும். சாட்ஜிபிடி உள்ளிட்ட எல்லா நவீன சாட்பாட்களும் எலிசாவின் மீது தான் உருவாக்கப்பட்டவை. எலிசா துவக்கி வைத்த சாட்பாட்கள் பயணத்தில் எண்ணற்ற சாட்பாட்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் சின்ன சின்ன மைல்கல் சாட்பாட்களும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றான் ’சைபாட்’ (CyBot) பற்றி இப்போது தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும். 1996 ல் அறிமுகமான இந்த ஏஐ திறன் கொண்ட […]

சாட்ஜிபிடியின் சாத்தியங்களையும், வரம்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதல் சாட்பாட்டான எலிசாவை மனதில் கொண்டாக...

Read More »

சாட்ஜிபிடி ஒரு புதிய அறிமுகம்

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு இன்னொரு முகம் என பல முகங்கள் இருப்பதால், பலரும் சாட்ஜிபிடியை எப்படி அறிமுகம் செய்கின்றனர் என்று கவனிப்பது அவசியம். அந்த வகையில் ஜோஷ் பெர்சின் (https://joshbersin.com/2023/01/understanding-chat-gpt-and-why-its-even-bigger-than-you-think/ ) என்பவரின் சாட்ஜிபிடி அறிமுகத்தை இங்கே பார்க்கலாம். ஒவ்வொருக்கும் சாட்ஜிபிடி பற்றியும், ஏஐ பற்றியும் ஒரு கருத்து இருக்கிறது என தனது அறிமுகத்தை துவங்கும் பெர்சின், எளிமையாக கூறுவது என்றால், […]

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு...

Read More »

எலிசா சாட்பாட் பற்றி நீங்கள் அறியாதவை!

எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனும் கருத்தாக்கம் எலிசா மூலம் தான் சாத்தியமானது. முதல் சாட்பாட் என்ற முறையில் எலிசா வரம்புகள் கொண்டது. எழுதிக்கொடுத்ததை படிக்கும் பேச்சாளர் போல அது தனக்கான திரைக்கதைக்கு ஏற்ப கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஆனால், இந்த வரம்பு தெரியாத அளவுக்கு பதில் அளிக்கும் புத்திசாலித்தனம் பெற்றிருந்தது. கேள்விகளில் உள்ள குறிப்பிட்ட சொற்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற கொக்கியை கொண்ட […]

எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனு...

Read More »