கூகுள் ஏன் சிறந்த தேடியந்திரம் இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ’புக்லாம்ப்’ தளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். அதற்கு முன் புக்லாம்ப் தளம் பற்றி தேடுவதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். புக்லாம்ப், புத்தகம் சார்ந்த புதுமையான பரிந்துரை முயற்சியாக அமைந்த முன்னோடி திட்டம். புத்தக பரிந்துரைகளுக்கான பாண்டோரா என வர்ணிக்கப்பட்ட இந்த தளம், ஆப்பிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.
புத்தகங்களுக்கான மரபணு திட்டம் என அதன் நிறுவனர் இந்த தளத்தை வர்ணித்திருக்கிறார்.
இந்த முன்னோடி தளம் பற்றி மேலும் அறிய ஆவலோடு கூகுளில் தேடினால், அது புக்லாம்ப் திட்டம் பற்றிய தகவல்களை அளிப்பதற்கு பதில், புக்லாம்ப்.இன் எனும் இந்திய விற்பனை தளத்தை முதலில் சுட்டிக்காட்டுகிறது. அடுத்து வரும் முடிவுகளும் விற்பனை தள முடிவுகள் தான். முதல் பக்கத்தில் புக்லாம்ப் தளம் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.
கூகுளின் தொடர்புடைய பரிந்துரைகளிலும் புக்லாம்ப் தளம் பற்றிய குறிப்பு இல்லை.
போட்டித்தேடியந்திரமான மைக்ரோப்சாப்டில் தேடும் போதும், புக்லாம்ப் விற்பனை தளம் பற்றிய முடிவுகளே வருகின்றன. பிங் பல நேரங்களில் கூகுள் போலவே நடந்து கொள்ளும்.
கூகுள், புக்லாம்ப்.இன், தளத்தை முன்னிறுத்துவதற்கு காரணங்கள் இருக்கலாம். இந்தியாவில் இருந்து தேடப்படுவதால், இந்த தளம் முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தவிர பயனாளிகள் புக்லாம்ப் என தேடிவரும் போது மேஜை விளக்குகளையே அதிகம் நாடி வந்திருக்கலாம். ஆனால், புக்லாம்ப் புத்தக பரிந்துரை தளம் தொடர்பான குறிப்பை கூகுள் முன்னிறுத்தாதது ஏமாற்றம் தான். தேடல் முடிவுகளின் இரண்டாம் பக்கத்திலும் நிலைமை மாறவில்லை.
இதே தேடலை டக்டக்கோவில் நிகழ்த்தி பார்த்த போது, விற்பனை சார்ந்த முடிவுகள் முதலில் இடம்பெற்றாலும், மூன்றாவது முடிவாக புத்தகங்களுக்கான பாண்டோரா தளம் எனும் செய்தி இணைப்பு வருகிறது. இந்த தளம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான டெக்கிரன்ச் தளம் செய்தியும் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் தொடர்புடைய தேடல் பரிந்துரைகளில், புக்லாம்ப் தளம் எனும் பரிந்துரையும் இருக்கிறது. அதில் புக்லாம்ப்.ஆர்க் தளம் பற்றிய விவரங்கள் அதிகம் வருகின்றன.
எனவே தான் சொல்கிறேன், பல நேரங்களில் கூகுள் மோசமான முடிவுகளை சுட்டிக்காட்டுகிறது. எனவே மாற்றுத்தேடியந்திரங்களில் தேடிப்பழகுங்கள்.
புக்லாம்ப்.ஆர்க் முன்னோடி தளம் பற்றி தனியே விரிவாக பார்க்கலாம்.
–