டிவிட்டரை எனக்கு புரியவில்லை.

டிவிட்டர் புகழ் எங்கோ போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒபரா உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்ட‌ருக்கு வருகை தந்து கொன்டிருக்கும் போது புகழ்பெற்ற பாடகி ஒருவர் டிவிட்டரை தன்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
பாட‌கியின் பெயர் பியான்சி நோவல்ஸ்.விரைவில் அவர் இசைபயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை முன்னிட்டு அவர் அளித்துள்ள பேட்டியில் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை குறித்து பதிலளித்துள்ளார்.

அப்போது ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது ,இல்லை பொனில் பேசுவதையே விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.டிவிட்டரையாவது பயன்படுத்துகிறீர்களா என்று கேட்ட போது ,என் தங்கை டிவிட்டர் ராணியாக இருக்கிறார். எனக்கு டிவிட்டர் பற்றி கற்றுத்த‌ந்துள்ளார்.ஆனாலும் என‌க்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

அதே பேட்டியில் தனது இசை பயண விவரங்கள் யூடியூப்பில் வெளியாவது குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாடுபட்டு தான் உருவாக்கும் இசைபயனங்களை முன்கூட்டியே யூடியூப்பில் பார்க்கமுடிவதை தன்னால் ஏற்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களை சென்ற‌டைய பல பாடகர்கள் இண்டெர்நெட்டை பெரிய அள‌வில் பயன்படுத்தி வரும் நிலையில் பியான்சி இவ்வாறு சொல்லியிருப்பது வியப்பை அளிக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரை எனக்கு புரியவில்லை.

  1. ட்விட்டர் எனக்கும் புரியவில்லை..ஆனால் நான் பிரபலம் அல்ல 😉

    Reply

Leave a Comment

Your email address will not be published.