சாட்ஜிபிடி சரிதம் புத்தகம் ஒரு அறிமுகம்

ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ள ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகம், இரண்டு தொகுதிகளை கொண்ட ஒரே புத்தகம்.

முதல் பகுதி, சாட்ஜிபிடி உருவான விதம், அதன் அடிப்படை நுட்பங்கள், செயல்படும் விதம் உள்ளிட்ட அம்சங்களை விவரிக்கும் கட்டுரைகளை கொண்டுள்ளது. சாட்ஜிபிடியின் வரலாறு தவிர, பொதுவாக ஆக்கத்திறன் ஏஐ தொடர்பான நுட்பங்களையும், ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த பிரச்சனைகளையும் விவரிக்கும் கட்டுரைகளையும் கொண்டுள்ளது.

சாட்ஜிபிடியை முன்வைத்து, ஏஐ சார்ந்த பல்வேறு விஷயங்களை ஒரு பறவை பார்வையாக இந்த பகுதி அளிப்பதாக கருதலாம்.

இரண்டாவது பகுதி, எலிசாவில் இருந்து துவங்குகிறது. எலிசா முதல் சாட்பாட் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எலிசாவில் துவங்கி, நவீன சாட்பாட்டான சாட்ஜிபிடி வந்த கதையை வரலாற்று நோக்கில் இந்த கட்டுரைகள் விவரிக்கின்றன.

சாட்ஜிபிடிக்கு முன் புத்தகம் எழுதிய சாட்பாட், மெசஞ்சரில் குடி கொண்ட சாட்பாட் மற்றும் பலரும் மறந்துவிட்ட கிளிப்பி சாட்பாட் உள்ளிட்ட சாட்பாட்களை அறிந்து கொள்ளலாம். முக்கியமாக, சாட்ஜிபிடி தவிர பல்வேறு முக்கிய சாட்பாட்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

சாட்ஜிபிடியை பயன்படுத்தும் முன், சாட்பாட்கள் தொடர்பான பொதுவான வரலாற்று பார்வையும், ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த புரிதலும் தேவை என்பதை உணர்ந்து எழுதப்பட்ட புத்தகம்.

சாட்ஜிபிடி புகழ் மட்டும் பாடாமல், வரலாற்று பார்வையோடு, விமர்சன கண் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். தமிழ் திசை காமதேனு, யுவர்ஸ்டோர் தமிழ் ஆகிய இதழ்களில் வெளியான கட்டுரைகளின் நூல் வடிவம். 

வாசித்துப்பார்த்து கருத்து கூறவும்: பகிரவும்!

சாட்ஜிபிடி சரிதம்

ஜீரோ டிகிரி பதிப்பகம்

ரூ.350

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *