சொந்தமாக சாட்பாட்டை உருவாக்கி கொள்வது எப்படி?  

சொந்தமாக ஒரு மார்கோவ் சங்கிலியை உருவாக்கி கொள்வது மிக எளிது என்கிறார் செர்ஜி ஜெயிட்சே (Serge Zaitsev ). அதோடு, மார்கோவ் சங்கிலியை உருவாக்கி கொள்வது எப்படி என்றும் எளிமையாக விளக்கியிருக்கிறார்.

மார்கோவ் சங்கிலியை எதற்காக உருவாக்கி கொள்ள வேண்டும் என கேட்பதற்கு முன், மார்கோவை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மார்கோவ், ஏஐ உலகில் அடிக்கடி அடிப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர். ரஷ்ய கணித மேதையான இவர் முன் வைத்த சங்கிலி கோட்பாடு பல ஏஐ நுட்பங்களுக்கு பின்னணியில் இருந்து இயக்கி கொண்டிருக்கிறது.

இவ்வளவு ஏன், ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி மனிதர்களோடு உரையாடி வியக்க வைப்பதன் பின்னணியிலும், ஒரு விதத்தில் மார்கோவ் சங்கிலி இருக்கிறது. அது மட்டும் அல்ல, நீங்கள் விரும்பினால் உங்களுக்கான சொந்த சாட்பாட்டை மார்கோவ் சங்கிலி கொண்டு உருவாக்கி கொண்டுவிடலாம்.

இதற்கு கொஞ்சம் நிரல் எழுத தெரிந்திருக்க வேண்டும் என்றாலும், மேலோட்டமாக தெரிந்து கொண்டால் கூட, சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள் செயல்படும் அடிப்படியை புரிந்து கொள்ளலாம். எனவே, இப்போது மார்கோவ் சங்கிலியை செர்ஜி எப்படி சுருக்கமாக அறிமுகம் செய்கிறார் என பார்க்கலாம்.

சாட்ஜிபிடியின் முன்னோடியான எலிசா சாட்பாட்டில் இருந்து தான் இந்த விளக்கத்தை செர்ஜி துவக்குகிறார். உளவியல் சிகிச்சையாளர் போல தோற்றம் தந்த எலிசாவின் பின்னணியில் தீர்மானமான சில விதிகள் அமைந்திருந்தது. குறிப்பிட்ட சொற்களுக்கு, குறிப்பிட்ட சொற்களை பதிலாக பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த விதிகளே எலிசா உரையாடுவது போன்ற தோற்றத்தை அளித்தது.

எலிசாவில் இருந்து சாட்பாட்கள் எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டன என்றாலும், அடிப்படையில் அவற்றின் பின்னே அமைந்திருப்பது விதிகள் தான். மாறாக, வளைந்து கொடுக்க கூடிய விதிகளின் அடிப்படையில், பொருத்தமான பதில்களை அளிக்க கூடிய சாட்பாட்களை மார்கோவ் சங்கிலி கொண்டு உருவாக்கலாம் என்கிறார் செர்ஜி.

செர்ஜி சொல்வதை இப்படி புரிந்து கொள்ளலாம்: ஒரு புத்தகத்தை மார்கோவ் சங்கிலி மென்பொருளிடம் கொடுத்தால், அதில் சொற்களை தோன்றும் வரிசையில் உள்ள பொது அம்சங்களை தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில், கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருந்தக்கூடிய பதில்களை உருவாக்கித்தரும்.

இது எப்படி சாத்தியமாகிறது என்பதை புரிந்து கொள்ள, மார்கோவ் சங்கிலியை புரிந்து கொள்ள வேண்டும். மார்க்வோ சங்கிலி என்பது ஒரு கணித மாதிரி. முந்தைய நிகழ்வின் அடிப்படையில் அமையும் எதிர்கால நிகழ்வுகள் வரிசையை விவரிக்கும் சங்கிலியாக இது அமைகிறது. இப்போதைய நிகழ்வை கொண்டு, அடுத்து வரக்கூடிய நிகழ்வை கணிக்கவும் இந்த மாதிரி உதவும் என்பது தான் முக்கியம்.

ஆக, புத்தகத்தில் உள்ள சொற்களை கொண்டு ஒரு மார்கோவ் சங்கிலியை உருவாக்கினால், எந்த ஒரு சொல்லுக்கும் அடுத்து வரக்கூடிய சொல்லை கணிக்க வைக்கலாம். இப்படி ஒவ்வொரு சொல்லாக கொண்டு, அடுத்த சொல்லை கணிக்க வைத்து, கேள்விக்கு பதில் அளிக்க வைக்கலாம்.

சாட்ஜிபிடியும் இதே முறையில் தான் செயல்படுகிறது என்றாலும், ஒரு புத்தகம் அல்ல, கோடிக்கணக்கான புத்தகங்கள் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நாம் நினைத்தால் கொஞ்சம் எளிதான சாட்பாட்டை மார்கோவ் சங்கிலியால் உருவாக்கலாம். இதற்கு ஊக்கம் அளிக்கும் உதாரணமாக, யூஸ்நெட் காலத்தில், உருவாக்கப்பட்ட மார்க் வி சஹானே (Mark V. Shaney,) எனும் சாட்பாட்டை செர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகத்தின் முன்னோடி சேவைகளில் ஒன்றான யூஸ்நெட் என்பது அந்த காலத்து விவாத குழு வலைப்பின்னல். அதில் செய்திகளை பகிர்ந்து உறுப்பினர்கள் விவாதிக்கலாம். இந்த குழுக்களில், அழைப்பில்லாமல் வருகை தந்து, தானே பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் சஹானே சாட்பாட்.

சீன தத்துவ பிரதிகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்ட இந்த சாட்பாட் தானே கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்டிருந்தது. இதே போலவே, எளிமையான 30 வரி நிரல் எழுத முடிந்தால், உங்களுக்கான மார்கோவ் சங்கிலியை அமைத்து, ஒரு சாட்பாட்டை உருவாக்கி கொண்டுவிடலாம்.

மார்கோ சங்கிலி பற்றி மேலும் அறிய செர்ஜியின் பதிவு:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *