டிவிட்டர் தடையும் வீரர்கள் போர்க்கொடியும்

roடிவிட்டர் செய்வது தொடர்பான தடைக்கு பிரபல டென்னிஸ் வீரர் ரோடிக் டிவிட்டர் மூலமே போர்க்கொடு தூக்கியிருக்கிறார்.டிவிட்டர் தொடர்பான கட்டுப்பாடுகள் முட்டாள்தனமானது என்று அவர் கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்கள் பலர் டிவிட்டர் செய்து வருகின்றனர்.நினைப்பதையும் ,செய்வதையும் உடனடியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்யும் டிவிட்டர் சேவை மற்ற எவரையும்விட விளையாட்டு வீரர்களுக்கும் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் தான் ஏற்றது.பிரபலமாக இருக்கும் அவர்கள் நடந்தால் செய்தி,நின்றால் செய்தி,பேசினால் செய்தி .நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆகையினால் இப்போது என்ன‌ செய்து கொண்டிருக்கிறோம் என்னும் கேள்விக்கு டிவிட்ட‌ர் மூல‌ம் ந‌ட‌ச‌த்திர‌ங்கள் ப‌தில‌ளிக்கும் போது உள்ள‌ப‌டியே அத‌னை தெரிந்து கொள்ளும் ஆர்வ‌ம் இருக்கும்.த‌விர‌ டிவிட்ட‌ர் ப‌திவுக‌ள் மூல‌ம் வீர‌ர்க‌ளின் மன ஓட்ட‌த்தை ர‌சிக‌ர்கள் தெரிந்து கொள்ள‌ முடியும்.அதோடு வீர‌ர்க‌ளும் ர‌சிக‌ர்க‌ளோடு நேரிடையாக‌ தொட‌ர்பு கொண்ட‌து போல‌ இருக்கும்.

அமெரிக்க‌ டென்னிஸ் வீர‌ர் ரோடிக் போன்ற‌வ‌ர்க‌ள் இத்த‌கைய‌ அணுகூல‌ங்க‌ளை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக உற்சாகமாக டிவிட்ட‌ர் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.வீர‌ர்க‌ள் டிவிட்ட‌ர் செய்வ‌து ர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும் டென்னிஸ் நிர்வாக‌த்தை க‌வ‌லைய‌டைய‌ வைத்துள்ள‌து.இத‌ன் ப‌ல‌னாக‌ யு எஸ் ஓப‌ன் டென்னிஸ் போட்டியின் போது வீர‌ர்க‌ள் டிவிட்ட‌ர் செய்ய‌க்கூடாது என‌ த‌டை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

வீர‌ர‌க‌ள் அறை ம‌ற்றும் வ‌ர‌வேற்ப‌றையில் டிவிட்ட‌ர் எச்ச‌ரிக்கை என்னும் த‌லைப்பி கீழ் வீர‌ர்க‌ளுக்கான‌ புதிய‌ க‌ட்டுப்பாடு விதிக‌ள் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.உங்க‌ளில் ப‌ல‌ர் டிவிட்ட‌ர் மூல‌ம் ர‌சிக‌ர்க‌ளை தொட‌ர்பு கொண்டு வ‌ருகறீர்க‌ள் என‌ப்து தெரியும் .இது ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தான் என்றாலும் ,போட்டியின் போது ம‌ற்றும் மைதான‌த்திலிருந்து டிவிட்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுவ‌தாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

கிரிக்கெட் விளையாட்டை போல‌வே டென்னிஸ் விளையாட்டிலும் சூதாட்ட‌ம் த‌லை காட்டியிருப்ப‌தால் போட்டியின் போது ர‌க‌சிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் க‌சிவ‌தை த‌டுப்ப‌த‌ற்காக‌ இந்த‌ க‌ட்டுப்பாடு அவ‌சிய‌ம் என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தீவ‌ர‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளியான‌ ரோடிக் இந்த‌ க‌ட்டுப்பாடுக‌ளை பார்த்துவிட்டு டிவிட்ட‌ர் மூல‌மே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீர‌ர‌க‌ளின் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌ நினைப்ப‌து முட்டாள்த‌ன‌மான‌து என்று கூறியுள்ள‌ ரோடிக் விதிக‌ளை தான் ம‌தித்தாலும் ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல்க‌ளை வீர‌ர்க‌ள் வெளியீட்டு விடுவார்க‌ள் என‌ ச‌ந்தேகிப்ப‌து ச‌ரியால் என்றூ கூறியுள்ளார்.

ரோடிக்கின் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை ஒரு ல‌ட்ச‌த்திற்கும் அதிக‌மான‌வ‌ர்க‌ள் பின்தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

link;
http://twitter.com/andyroddick

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டர் தடையும் வீரர்கள் போர்க்கொடியும்

  1. இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

    இமெயில் முகவரி: infokajan@ymail.com
    http://valaipoongaa.blogspot.com/

    Reply

Leave a Comment

Your email address will not be published.