என்ன படம் பார்க்க‌லாம்;வழிகாட்டும் இணையதளம்.

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை.என்ன தான் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து பில்டப் கொடுத்தாலும் பதிவுலக‌ மொழியில் சொல்வதானால் மொக்கை படத்தை யாரையும் பார்க்க வைக்க முடியாது. படம் பற்றி தயாரிப்பாளரும் விமர்சகர்களும் அஹா ஒஹோ என்று சொன்னாலும் பதிவுலகும் டிவிட்டர் வெளியும் உண்மையான லட்சனத்தை அம்பலமாக்கி விடும்.எனவே ரசிகர்களை முன் போல சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது. இது ர‌சிக‌ர்க‌ளின் காலம். இதனை […]

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இரு...

Read More »

கூகுல் மீது வரி விதிப்பு

கூகுல் மீது வரிவிதிக்கப்படுவது சரியென நினைக்கிறீர்களா?இதனால் பாதிப்பு கூகுலுக்கு மட்டும் தானா? பிரான்ஸ் அரசு உத்தேசித்துள்ள வரி விதிப்பு திட்டம் தான் இந்த கேள்விகளையும் இதே போன்ற இன்னும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கூகுல் முன்னணி தேடியந்திரமாக இருப்பதும் அந்த செல்வாக்கின் அடிப்ப‌டையில் இணைய விளம்பரம் மூலம் வாருவாயை அள்ளிக்குவித்து வருவதும் தெரிந்தது தான்.பத்திரிக்கைகளும் பிற இணையதளங்களும் இணையத்தின் வழியே வருவாயை ஈட்ட‌ முடியாமல் தடுமறிக்கொண்டிருக்கும் போது கூகுல் மட்டும் தேடல் முதல்வனாய் லாபம் பார்த்து வருகிறது. […]

கூகுல் மீது வரிவிதிக்கப்படுவது சரியென நினைக்கிறீர்களா?இதனால் பாதிப்பு கூகுலுக்கு மட்டும் தானா? பிரான்ஸ் அரசு உத்தேசித்து...

Read More »

டிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை

குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம். இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை. இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ […]

குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டர...

Read More »

இந்தியாவிலிருந்து அடுத்த பில் கேட்ஸ்

உலக மகா கோடிஸ்வரர்,இளைஞர்களின் கனவு நாயகன், என்று பில்கேட்சை எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்.பணம்,புகழ்,தொழில்நுட்ப அறிவு என மூன்றும் இணைந்த மேதையாக விளங்கும் பில்கேட்ஸ் நம் காலத்து நாயகன்.முன்னேற்றத்துடிப்பவர்களின் இலக்கு எதுவாக இருந்தாலும் அவர்களின் கனவு பில்கேட்ஸ் தான். பில்கேட்ஸ் போல வர முடிகிற‌தோ இல்லையோ பெரித்தினும் பெரிது கேள் என்னும் மகாகவியின் பாடியது போல் த்ற்காலத்தலைமுறை கேட்ஸ் சாதனையை தான் உச்சமாக வைத்து கொண்டு முன்னேற நினைக்கிறது. இவ்வளவு ஏன் எந்த நாட்டில் ஐடி புலி உருவானாலும் […]

உலக மகா கோடிஸ்வரர்,இளைஞர்களின் கனவு நாயகன், என்று பில்கேட்சை எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்.பணம்,புகழ்,தொழில்நுட்ப அ...

Read More »

உங்கள் இணையதளத்திற்கான கூகுல் கிளினிக்

பந்திக்கு முந்து என்று சொல்வது போல இணையதளங்களை பொருத்தவரை தேடியந்திரங்களில் முந்து என்பதே வேத வாக்காக இருக்கிறது.காரணம் தேடியந்திரத்தில் முந்தி இருந்தால் தான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முடியும். அதாவது கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடல் பட்டியலில் முதல் பக்கத்தில் அல்லது முதல் சில பக்கங்களிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.இல்லை என்றால் இணைய‌வாசிக‌ள் க‌ண்ணில் ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்பு குறைவு. என‌வே தான் எந்த ஒரு இணையதள‌மும் தேடக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஆலோச‌னை சொல்கின்றனர்.அது மட்டுமல்ல இணையத‌ளத்தில் […]

பந்திக்கு முந்து என்று சொல்வது போல இணையதளங்களை பொருத்தவரை தேடியந்திரங்களில் முந்து என்பதே வேத வாக்காக இருக்கிறது.காரணம்...

Read More »