Tag Archives: hollywood

திரைப்படங்களுக்கான தேடியந்திரம்.

கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது.திரைப்படங்கள் ,மட்டும் அல்ல டிவி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது.

திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.

எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்த படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்த தளம் பட்டியல் போடுகிறது.எங்கே எல்லாம் என்பது அமேசானிலா,நெட்பிலிக்சிலா,ஐடியூன்சிலா,ஹுலுவிலா என்பதாகும்.

இவை எல்லாமே படங்களை ஸ்டிரிமிங் அல்லது டவுண்லோடு முறையில் இணையத்திலேயே பார்க்க உதவும் சேவையை வழங்கும் இணையதளங்கள்.நெட்பிலிக்ஸ் அனுமதிக்கப்பட்ட புதிய படங்களை கூட ஸ்டிரிமிங் முறையில் வழங்குகிறது.அமேசான் தளத்திலும் படங்களை வாங்கலாம்.யூடியூப்பின் போட்டி தளமான ஹுலுவிலும் படங்களை பார்க்க முடியும்.

ஆப்பிளின் ஐடியூன்ஸ் பிரதானமாக் பாடல் விற்பனை கடை என்ற போதிலும் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளையும் இதில் வாங்க முடியும்.

திரையரங்கிற்கு போகாமல் டிவிடியும் வாங்காமல் இருந்த இடத்திலிருந்தே லேப்டாப் அல்லது கம்ப்யூட்டடில் விரும்பும் படத்தை பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இந்த தளங்கள் ஏதாவது ஒன்றில் அந்த படம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கி கொள்வார்கள்.பல படங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

சில நேரங்களில் எந்த படம் எங்கே கிடைக்கிறது என்று தெரியாது.நெட்பிலிக்சில் ஒரு படத்தை தேடிக்கொன்டிருந்தால் அந்த படம் ஹுலுவில் கிடைக்கும் .இந்த விஷயம் தெரியாமல் நெட்பிலிக்ஸ் ரசிகர்கள் தவித்து கொண்டிருப்பார்கள்.அதே போல சில படங்கள் அமேசான் இனைய கடையில் கிடைக்கலாம்.சில ஐடியூன்சில் கிடைக்கலாம்.

எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொரு தளமாக நுழைந்து தேடிப்பார்க்க வேண்டும்.அந்த கஷ்டம் ரசிகர்களுக்கு எதற்கு என கேட்டு படத்தை சொன்னால் அது கிடைக்குமிடத்தை தானே தேடி தருகிறது வாட்ச்லே தளம்.

படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படதை எந்த திரைப்பட சேவை தளங்களில் இருந்து வாங்கி கொள்ளலாம் என்று காட்டுவதோடு அப்படி வாங்குவதற்கான இணைப்பையும் அருகிலேயே தருகிறது.தேடியவுடன் அப்படியே கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு இலவசமாக மட்டும் பார்க்க கூடிய இடங்களை காட்ட சொல்லலாம்.காசு கொடுக்க தயார் என்றால் கட்டணத்தின் வரம்பையும் குறிப்பிட்டு தேடலாம்.

இதே போலவே டிவி நிகழ்ச்சிகளையும் தேடலாம். டிவி நிகழ்சிச்சிகளை அவை ஒலிபர்ப்பாகும் பொதே பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வடிவில் கிடைக்கின்றன.எப்போது விருப்பமோ அப்போது டவுண்லோடு செய்து பார்க்கலாம்.அத்தகைய நிகச்சிகள் கிடைக்கும் இடத்தையும் இந்த தளம் காட்டுகிறது.

திரைப்படங்கள் எந்த தளங்களில் எல்லாம் எந்த வடிவில் கிடைக்கின்றன என்பதை தேடுவதற்காக என்றே தேடியந்திரங்கள் உதயமாகின்றன என்றால் ,திரைப்படங்கள் ரசிகர்களை சென்றடையும் வழிகள் எந்த அளவுக்கு பரந்து விரிந்து இருக்கின்றன என்று பார்த்து கொள்ளுங்கள்.

இணையதள முகவரி;http://www.watchily.com/

அசத்துகிறது ஹாலிவுட்;தூங்குகிறது கோலிவுட்.

ஹாலிவுட் எங்கேயோ போய் கொண்டிருக்கிறது.கோலிவுட் எங்கேயோ பின்தங்கி நிற்கிறது என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது கேன் ஐ ஸ்டிரிம் இட் தளத்தை பார்க்குபோது.கூடவே ஒருவித பட்சாதாபமும் கோலிவுட் மீது உண்டாகிறது.

நிச்சயமாக இந்த கருத்து கோலிவுட் படங்களின் தொழில்நுட்பம் அல்லது அவற்றின் தரம் சார்ந்ததோ அல்ல!கோலிவுட் படங்கள் விநியோகிக்கப்படும் விதம் தொடர்பான ஏக்கம் இது.

கோலிவிட்டில் வெளியாகும் படங்களில் நூற்றில் பத்து கூட வெற்றி பெறுவதில்லை என்னும் நிலை.தியேட்டர்களிலோ கூட்டம் இல்லை.வெள்ளி விழா படங்கள் 100 நாள் படங்களை எல்லாம் கோலிவுட் மறந்து பல வருடங்களாச்சு!

இரண்டாவது வாரத்திற்கு வந்தாலோ படம் வெற்றி என நிம்மதி பெருமூச்சு விடுகிறது கோலிவுட் வட்டாரம்.இந்த நிலைக்கு திருட்டு விசிடியும்,இப்போது இண்டெர்நெட்டும் காரணமாக சொல்லப்படுகிறது.படம் ரீலிசான அன்றே இண்டெர்நெட்டில் டவுண்லோடுக்கு வந்துவிட்டால் தியேட்டருக்கு யார வருவார்கள் என்று கோலிவுட் புள்ளிகள் ஆவேசமாக கேட்பது வழக்கமாக உள்ளது.

இதில் உண்மை இருக்கலாம்,ஆனால் தொழில்நுட்பம் திரைப்பட விநியோகத்திற்கு திறந்து விட்டிருக்கும் மாற்று வழிகளாக இவற்றை பார்க்க துவங்கினால் இதே நெட்டை வைத்து வருவாயும் பார்க்கலாமே!ஹாலிவுட்டில் இதை தான் செய்கின்றனர்.

படம் ரீலிசான குறிப்பிட்ட காலத்தில் அவர்களே தரமான டிவிடியையும் சந்தையில் அனுமதிக்கின்றனர்.எஹ் டி,புளு ரே என அசத்தலான தரத்திலான டிவிடி எல்லாம் வந்துவிட்டன.எனவே திரையரங்குகளில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பிரதிகளை விட இந்த டிவிடிக்கள் சூப்பராக இருக்கும்.அதே போல நெட்பிலிக்ஸ் போன்ற திரைபட சேவை தளங்களின் மூலம் ஸ்டிரிமிங் என்று சொல்லப்படும் முறையில் படங்களை காணச்செய்கின்றனர்.

எல்லாமே அனுமதிக்கப்பட்டவை.கட்டணம் வசூலித்து தருபவை.இன்னும் பல வழிகளில் இணையம் மூலமே புதிய படங்கள் ரசிகர்களை வந்தடைகின்றன.

இப்படி எத்தனை வழிகளில் எல்லாம் இருக்கின்றன என்னும் வியப்பை தான் கேன் ஐ ஸ்டிரிம் தளம் ஏற்படுத்துகிறது.

ஒருவிதத்தில் இந்த தளத்தின் பெயரோ பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது.ஸ்டிரீமிங் என்றால் திரைப்படங்கள் இண்டெர்நெட்டில் பாய்ந்தோடச்செய்வது என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது டவுண்லோடு செய்யும் தேவை இல்லாமால் திரைப்படங்களை அப்படியே பார்த்து மகிழ்வது.

ரசிகர்கள் ,திரை உலகினர் இருவருக்குமே இது சாதகமானது.ரசிகர்களை பொருத்தவரை ப்டம் டவுண்லோடு ஆக காத்திருக்காமல் விரும்பியவுடன் பார்த்து ரசிக்கலாம்(கட்டணம் செலுத்தி தான்).டவுன்லோடு செய்யப்படாததால் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதது என்பது திரை உலகிற்கு சாதகம்.

நெட்பிலிக்ஸ் போன்ற தளங்கள் இந்த வசதியை தருகின்றன.

ஆனால் இந்த வசதிகள் எல்லாம் படம் வெளியானவுடன் கிடைத்துவிடுவதில்லை.படம் வெளியான குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவற்றின் டிவிடியும்,இணைய வடிவமும் வெளியாக துவங்குகின்றன.இவை படத்திற்கு படம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம்.

எனவே ஒரு படத்தின் ஸ்டிரீமிங் எப்போது கிடைக்கும் என்பது தான் ஹாலிவுட் ரசிகர் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.அதாவது தியேட்டருக்கு போகாமல் விட்டில் இருந்தே படம் பார்க்க விரும்புகிறவர்கள்.

இந்த கேள்விக்கான விடை அளிக்கும் வகையில் தான் கேன் ஐ ஸ்டிரிம் இட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த படத்தை காண விருப்பமோ அந்த படத்தின் பெயரை இந்த தளத்தில் டைப் செய்தால் அந்த படம் எப்போது முதல் எந்த எந்த வடிவில் கிடைக்கும் என்ற தகவல் வந்து நிற்கிறது.

ஒவ்வொரு படத்திற்கும் வரிசையாக ஸ்டிரிமிங் எப்போது,டிவிடி ரீலிஸ் எப்போது,டிஜிட்டல் விற்பனை எப்போது,வாடகை ஸ்டிரிமிங் எப்போது என்ற தகவல்கள் தரப்படுகிறது.அப்படியே நெட்பிலிக்ஸ்,அமேசான்,மற்றும் ஹூலு போன்ற தளங்களில் எப்போது வாங்கலாம் என்ற விவரமும் தரப்படுகிறது.

ஹாலிவுட் ரசிகர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தளம் என்றாலும் ஹாலிவுட் படங்களின் விநியோகிக்க்ப்படும் பலவிதமான வழிகளை பார்த்தால் பிரம்மிப்பாக தான் இருக்கிறது.

இணையதள முகவரி;http://www.canistream.it/