Tag Archives: house

ஆன் –லைன் விற்பனையில் வீடு வாங்கலாமா?

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதோடு,மின் வணிகம் மூலம் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் விரிவடைந்திருக்கிறது.

இந்த பட்டியலில் இப்போது ரியல் எஸ்டேட்டும் சேர்ந்திருக்கிறது. ஆம், லட்சக்கணக்கில் மதிப்பு உள்ள வீடுகளையும் இப்போது மவுஸ் கிளிக்கில் வாங்கும் நிலை வந்திருக்கிறது.ஸ்மார்ட்போன்களுக்கும் ,ஆடைகளுக்கும் ஆன் –லைனில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது போல வீடுகளும் ஆன் –லைன் மூலம் அதிரடியாக விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 99 ஏக்கர்ஸ்.காம் நிறுவனம் இந்தியன் ரியாலிட்டி பிளேஷ் சேல் எனும் விற்பனையை நடத்தியது. பெரும் தள்ளுபடியில் வீடுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது மேஜிக்பிரிக்ஸ்.காம் நிறுவனம் ஜூலை 18 ம் தேதி முதல் 10 நாள் கிரேட் ஆன் –லைன் ஹோம் பெஸ்டிவலை அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் சந்தை தேக்க நிலையில் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட வீடுகள் பல விற்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் புதிய திட்டங்களின் வேகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆன் –லைன் வழியை தேர்வு செய்துள்ளன.அவற்றை பொறுத்தவரை இது கூடுதலான ஒரு விளம்பரம் போல தான். அதோடு வீடு வாங்க தீர்மானித்து முடிவு எடுக்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க அதிரடி உத்திகள் உதவும் என்று எதிர்பார்க்கின்றன.தள்ளுபடி அளிக்கவும் தயாராக இருக்கின்றன.

ஆனால் இணைய விற்பனையில் வீடு வாங்குவது சரியாக இருக்குமா? நேரில் வாங்குவதாக இருந்தாலும் சரி ,இணையம் மூலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மாறுவதில்லை என்று வல்லுனர்கள் சொல்கின்றனர். வில்லங்கம் இல்லாமல் இருப்பது, பத்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது ஆகியவை வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்கின்றனர். அதே போல கட்டுப்படும் வீட்டை நேரில் பார்த்து திட்டத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் மாற்றம் இல்லை என்கின்றனர்.

மேலும் இந்த விற்பனையை குடியிருப்பு திட்டங்கள் பற்றி தகவல்களை திரட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். குறிப்பிட்ட பகுதியில் வீடுகளின் விலை மற்றும் தள்ளுபடி அளவை தெரிந்து கொண்டு நேரில் சென்று பார்த்துப்பேசி சாதகமான விலையை குறைக்கலாம் என்றும் வல்லுனர்கள் சொல்கின்றனர்.
ஆனால் ஒன்று பல குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விட, வாங்கியவுடன் குடியேறக்கூடிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதே சரியாக இருக்கும் என்கின்றனர். அதோடு புக் செய்த பிறகு வீடு பிடிக்கவில்லை என்றால் முதலில் செலுத்திய தொகை திருப்பு அளிக்கப்படும் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கின்றனர்.விதிகள் மற்றும் நிபந்தனைகள், ப்ணத்தை செலுத்தும் காலம் மற்றும் டீலை முடிப்பதற்கு உள்ள அவகாசம் ஆகிய அம்சங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறனர்.

சூறாவளிக்கு பின் இணையத்தில் துளிர்த்த மனிதநேயம்.


‘ஏர்பிஎன்பி’ இணைய உலகின் நவீன வெற்றிக்கதைகளில் ஒன்று.இணையவாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுக்கு இணையம் மூலம் தங்கி கொள்ள தற்காலிகமாக வாடகைக்கு விட வழி செய்யும் தளம் இது.அதே போல இணையவாசிகள் ஓட்டல் விடுதி போன்றவற்றில் தங்குவதற்கு பதிலாக இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்களின் வீடுகளில் தங்கி கொள்ளலாம்.

தற்காலத்தில் பயணங்களின் போது தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் வித்ததையே மாற்றியமைத்து இருப்பதாக கருதப்படும் ஏர்பிஎன்பி இணையதளம் அறிமுகமில்லாதவர்களை வீடுகளில் தங்க வைப்பது பாதுக்கப்பானது தானா என்னும் கேள்வியை மீறி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

இணைய உலகில் இதன் தாக்கமும் வீச்சும் பற்றி நிறையவே அலசி ஆராயலாம்.

புறக்கணிக்க முடியாத இணைய சக்தியாக உருவெடுத்துள்ள இந்த தளம் அமெருக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளி தாக்குதலுக்கு பின் மனிதநேயத்தை துளிர்க்க வைத்து மனதார பாராட்டுக்க்களையும பெற்றிருக்கிறது.

சூப்பர் புயல் என்று வர்ணிக்கப்பட்ட சாண்டி புயல் நியூயார்க்,நியூஜெஸ்ஸி உள்ளிட்ட நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது.இதன் கோரத்தாண்டவத்தின் போது நகரமே வெள்ளத்தில் மிதந்ததோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

புயலின் தீவிரம் ஓய்ந்த பிறகும் பாதிப்பு குறைந்து விடவில்லை.வெள்ளம் சூழந்த பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இப்படி வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு தங்குவதற்கான கூறையை ஏற்படுத்தி தரும் முயற்சியில் தான் ஏர்பிஎன்பி தளம் ஈடுபட்டுள்ளது.

கூடுதலாக உள்ள அறைகளை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பவர்களோடு தங்குவதற்காக இடம் தேடுபவர்களை இணைத்து வைப்பது போல சூறாவளியால் வீடிழந்து தவிப்பவர்களுக்கு தங்களிடம் கூடுதலாக உள்ள அறையை அளிக்க முன்வருபவர்களை இணைத்து வைப்பதன் மூலம் காலத்தின் செய்த உதவியை அளித்து வருகிறது இந்த தளம் .

வழக்கமாக அறைகளுக்கு என்று குறிப்பிட்ட கட்டணம் வாடகையாக வசூலிக்கப்படும் .ஆனால் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடகை இல்லாமல் இலவசமாக அறைகள் அளிக்கப்படுகிறது.

நியூயார்க் பகுதியில் உள்ள தளத்தின் உறுப்பினர்கள் தங்களிடம் உள்ள கூடுதல் அறையை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச‌மாக வழங்க முன வந்து அதனை பட்டியலிடலாம்.தற்காலிக தங்குமிடத்தை தேடி கொண்டிருப்பவர்கள் இவற்றில் இருந்து தங்களுக்கான இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.அவர்களும் தங்களுக்கு இடம் தேவை என்னும் கோரிக்கையை பட்டியலிடலாம்.

பேரிடர் காலங்களில் அரசாங்கம் வழங்கும் உதவிகள் மட்டும் நிச்சயம் போதாது.மனிதருக்கு மனிதர் பரஸ்பரம் செய்யும் உதவிகளே நிலைமையை சமாளிக்க பேருதவியாக அமையும்.

அதிலும் இணைய உலகில் இணையதங்கள பரஸ்பர உதவிக்கான புதிய வாயில்களை அகல திறக்கும் ஆற்றல் படைத்தாதாக இருக்கின்றன.

அந்த வகையில் ஏர்பினெபி தளம் சாண்டி சூறாவளியால் வீடிழ்ந்தவர்களுக்கு நியூயார்க் நகரவாசிகள் தங்கள் வீடுகளின் கதவை அகல திறந்து விட வழி செய்து மகத்தான உதவி செய்து வருகிறது.

பகிர்ந்து கொள்வோம்,நல்லது செய்வோம் என அழைப்பு விடுக்கும் இந்த தளம் இது வரை 400 க்கும் மேற்ப்படவ்ர்களுக்கு இலவச தங்குமிடம் பெற்றுதந்த்துள்ளது.

ஆபத்து காலத்தில் கைகொடுக்க கூடிய ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு இருப்பதை உணர்த்தும் மற்றொரு அழகான உதாரணம் இது.

இணையதள முகவரி;https://www.airbnb.com/sandy