Tagged by: internet

யூடியூப்பில் புதிய பயணம்

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக யூட்யூப் பயணத்தை துவங்கியிருக்கிறேன். முதல் வீடியோ தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியாகியுள்ளது. இணைய வரலாற்றில் இருந்து துவங்கும் வகையில், புகழ் பெற்ற இணைய கார்ட்டூன் தொடர்பான விளக்கத்தில் இருந்து துவங்கியுள்ளேன்.1993ல் வெளியான இந்த கார்ட்டூன் இன்னமும் பொருத்தமாக இருப்பது தான் வியப்பானது. நண்பர்கள் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். சானலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறேன். […]

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக...

Read More »

பேஸ்புக், ஸ்னேப்சாட் கணக்கு வைத்திருக்கும் இணைய நாய்

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி கேட்பது பொருத்தமானது என்பது மட்டும் அல்ல, மிகவும் பொருள் பொதிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இணைய நாய் உணர்த்தும் இந்த அர்த்தத்தை உணர வேண்டும் என்றால், இணைய நாய் கார்ட்டூன் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை வழிகாட்டும். இந்த கார்ட்டூன் தொடர்புடைய ரெட்டிட் விவாத சரடு இதை இன்னும் அழகாக உணர்த்துகிறது. நிற்க, இணைய நாய் […]

எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி க...

Read More »

இணையம் என்பது ரெயில் நிலையம் தெரியுமா?     #இணையம், #சொற்கள்

புரோசோவிஸ்கியின் பெயரையும், புரவுசரையும் இணைத்து கேலி செய்தால் நிச்சயம், அவர் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார் என்றே நினைக்கிறேன். ஏனெனில், மொழியியல் அறிஞரான எரிகா புரோசோவிஸ்கி, ஆங்கில சொற்களின் வரலாற்றிலும், அவற்றின் புதுயுக பயன்பாட்டில் ஆர்வமும், நிபுணத்துவமும் உள்ளவர். டாக்டர் எரிகா புரோசோவிஸ்கி என்றே குறிப்பிடப்படுபவர், அமெரிக்காவின் பிபிஎஸ் தொலைக்காட்சியில் அதர் வேர்ட்ஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேயர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்நிகழ்ச்சியில் புரோசோவிஸ்கியிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை, லாபிங் ஸ்குவிட் இணையதளம் அழகாக […]

புரோசோவிஸ்கியின் பெயரையும், புரவுசரையும் இணைத்து கேலி செய்தால் நிச்சயம், அவர் அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார் என்றே நின...

Read More »

ஏஐ. என்பது சமையல் குறிப்புகளின் அறிவியல்

செய்யறிவு ( ஏஐ.) என்றால் என்ன? எனும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன. அதே போல பலவிதமான வரையறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வரையறையும், ஏஐ நுட்பத்தை புரிந்து கொள்ள தேவையான பல அம்சங்களை வலியுறுத்துகின்றன. ஒவ்வொன்றிலும் சில விடுபடல்களும் உண்டு. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் சிக்காகோ பல்கலைக்கழகம் சார்பிலான வரையறை மற்றும் விளக்கத்தை இங்கே பார்க்கலாம். ஏஐ, என்பது மனித புத்திசாலித்தனம் தேவைப்படும் செயல்களை செய்வதற்கு ஏற்ற இயந்திரங்களை உருவாக்கும் கம்ப்யூட்டர் அறிவியலின் ஒரு பிரிவு’ என்கிறது இந்த […]

செய்யறிவு ( ஏஐ.) என்றால் என்ன? எனும் கேள்விக்கு பலவிதமான பதில்கள் இருக்கின்றன. அதே போல பலவிதமான வரையறைகள் இருக்கின்றன. ஒ...

Read More »

இந்திய இல்லங்களில் சாட்ஜிபிடி பயன்பாடு!

சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்கும், ஆய்வுத்துறையை எப்படி பாதிக்கும்? என்பது போன்ற கேள்விகளையும் விட்டுவிடலாம். சாட்ஜிபிடி நம்முடைய இல்லங்களில் என்ன விதமாக பயன்படும், அவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம். ஒரு இல்லத்தலைவிக்கு சாட்ஜிபிடி எப்படி பயன்படும்? என்று யோசித்துப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் பெண்கள், சமையல் குறிப்பை தேட சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம். ( பாலின சார்பு பார்வைக்கு மன்னிக்கவும்). பிள்ளைகளுக்கு […]

சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்...

Read More »