Tag Archives: life

டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்யும் இணையதளம்.


டிவிட்டர் பதிவுகள் கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வித்திட்டுகின்ற‌ன.டிவிட்டர் பதிவுகள் புதிய செய்திகளை தெரிவிக்கின்றன.டிவிட்டர் செய்திகள் விவாதத்திற்கு வழி வகுக்கின்றன.டிவிட்டர் பதிவுகள் பங்குகளின் ஏற்ற இரக்கத்தை யூகிக்க உதவுகின்றன.

எனவே தான் டிவிட்டர் பதிவுகளையும் போக்குகளையும் ஆய்வு செய்வது புதிய ஜன்னல்களையும் வாயில்களையும் திறக்கின்றன.டிவிட்டர் ஆய்வில் பல்கலைகளும் பேராசிரியர்களும் தான் ஈடுபட வேண்டும் என்றில்லை நீங்களும் கூட டிவிட்டர் போக்குகளை ஆய்வு செய்யலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் டிவீட் ஆப் லைப் இணையதள‌ம் பக்கம் செல்வது தான்.இந்த தளம் டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்ய உதவுகிற‌து.டிவிட்டரின் அறிவியல் என்னும் கோஷத்தோடு இந்த ஆய்வை முன வைக்கிறது.

ஆய்வு என்றால் பரந்து விரிந்த ஆய்வு அல்ல;இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இதில் ஆய்வு செய்யலாம்.ஒன்று பாலினம்.மற்றொன்று நேரம்.

அதாவது டிவிட்டர் பதிவுகள் ஆண்கள் பெண்கள் மத்தியில் அவ்வாறு வேறுபடுகின்ற‌ன என்றும் ,காலை,பதியம்,மாலை நேரங்களின் அடிப்படையில் எப்படி மாறுப‌டுகின்ற‌ன எனறும் தெரிந்து கொள்ளலாம்.

உதாரண‌த்திற்கு தொழில்நுட்பம் அல்லது அறிவியல் ஆகிய தலைப்புகளில் யார் அதிக டிவீட் செய்கின்ற‌ன என்று அறிய விரும்பினால் ,அந்த தளத்தில் அந்த சொல்லை சமர்பித்தால் போதும் டிவிட்டர் பதிவுகளில் அலசிப்பார்த்து ஆண்கள் அதனை அதிகம் பயன்ப‌டுத்தியுள்ளனரா பெண்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனரா என்று வரைபடம் போட்டு காட்டிவிடுகிறது.இப்படி எந்த தலைப்பு குறித்தும் தகவல் பெற முடியும்.

மாதிரிக்கு பல சொற்களின் ஆய்வு விவரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன.

இதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து காலை அல்லது மாலை நேரங்களில் பதிவுகள் எந்த அளவு வெளியாகி உள்ளன என்டும் தெரிந்து கொள்ளலாம்.காலைஉணவு,மதிய உணவு,மற்றும் இரவு உணவு நேரங்களுக்கான பகுப்பு தரப்படுகிறது.

ஆய்வாளர்கள் மற்றும் மார்க்கெட்டிங் துறையினருக்கு இந்த‌ சேவை மிகவும் பயன் தரக்கூடும்.டிவிட்டரின் போக்கு குறித்து அறிய விரும்பும் எவரும் இந்த சேவையை பயன்ப்டுத்தலாம்.அதன் மூலம் டிவிட்டர் வெளி தொடர்பாக பல சுவாரஸ்ய‌மான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

இணைய‌தள முகவரி;http://www.tweetolife.com

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்?

நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த தளம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் கவனித்து மாத இறுதியில் நீங்கள் செயல்பட்ட விதம் குறித்த அறிக்கையையும் அளிக்கிறது.

உங்களின் எந்த செயல் கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு நீங்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வந்தால் அதனை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறீர்கள் என அறிக்கை கேட்கலாம்.

அதே போல புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட விரும்பினால் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி அறிக்கை கேட்கலாம்.

இப்படி உங்கள் வாழ்கையின் எந்த செயலையும் நீங்கள் இந்த தளத்தின் மூலம் அலசி ஆராய்ந்து கொள்ளலாம்.

எப்படி என்றால் இந்த தளம் தினந்தோறும் உங்களிடம் கேள்வி கேட்டு அதற்கான பதிலை பெற்று அந்த பதில்களின் அடிப்படையில் புள்ளி விவரங்களை சேகரித்து அவற்றை வரைபட வடிவில் அறிக்கையாக தருகிறது.

எந்த கேள்வியை எப்போதெல்லாம் கேட்கப்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளலாம்.உடற்பயிற்சி செய்பவர் என்றால் இன்று எத்தனை மணிநேரம் பயிற்சி மேற்கொண்டீர்கள் என்று கேட்க சொல்லலாம்.தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் என்றால் ஒவ்வொரு நாளும் எத்தனை நேரம் படித்தீர்கள் என்று கேட்க சொல்லலாம்.

இப்படி கேட்க சொல்வதற்கு முன் செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு கேள்விகள் எஸ் எம் எஸ் மூலம் வந்து சேரும்.பதிலையும் எஸ் எம் எஸ் மூலம் அனுப்பி வைக்கலாம்.

இந்த பதில்களை கொண்டு உங்கள் இலக்கு பற்றிய அறிக்கையை அழகாக தயார் செய்து தரும் வேலையை இந்த தளம் பார்த்து கொள்ளும்.

என்ன தான் முயற்சி செய்தாலும் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறோம் என்பதை குறித்து வைப்பது சாத்தியமில்லை.அப்படியே குறித்து வைத்தாலும் மாத இறுதியில் அவற்றை புரட்டிப்பார்த்து புள்ளி விவரங்களாக தொகுத்து புரிந்து கொள்ள முயல்வது சாத்தியம் இல்லை.

ஆனால் இந்த தளம் நமக்கான உதவியாளர் போல செயல்பட்டு நம்முடைய செயல்களை புள்ளிவிவரமாக தொகுத்து தருகிறது.

வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் வரைபடங்கள் மூலம் விளக்கப்படுவது போல ,தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு விகிதம் வரைபடமாக சுட்டிக்காட்டப்படுவது போல இந்த தளம் உங்கள் வாழ்க்கையை செய்ல்பாடுகளை வரைபடமாக புரிய வைக்கிறது.

குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்கள் அதனை நோக்கிய முன்னேற்றத்தை பின்தொடரவும்,சிரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோமா என தெரிந்து கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

செலவுகளை குறித்து வைத்து சேமிப்பை கண்காணிக்க உதவும் இணையதளங்களை போல இந்த தளம் மிக அழகாக தனிநபர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து கொள்ள உதவுகிறது.

செல்போன் சர்ந்தது என்பதால் நிச்சயம் அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது மட்டுமே ஒரே குறை.

இணையதள முகவரி;http://www.askmeevery.com/