Tag Archives: location

வரைபடத்தில் விக்கிபீடியா

geopedia sunday river
கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம்.

இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம்.

நாம் தேர்வு செய்த இடத்தில் இருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ள இடம் பற்றி கட்டுரைகள் வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல கட்டுரைகளின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கலாம்.
சுவாரஸ்யமான வழி என்பதோடு இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணையத்தில் தேடும் போது இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

பயனாளிகள் இருப்பிடம் சார்ந்த கட்டுரைகளை தேடலாம். விக்கிபீடியா போலவே தன்னார்வலர்கள் பங்களிப்பால் உருவான வரைபட சேவையான ஓபன்ஸ்டீரிட் மேப் வசதியை பயன்படுத்தி இந்த ஜியோபீடியா உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://www.geopedia.de/

map

கூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்

Screen shot 2011-01-25 at 2.38.26 PMகூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால் அதற்கு வரைபடம் மூலம் வழிகாட்டுகிறது நியூஸ்பேப்பர்மேப் ( ) இணையதளம்.

கூகுல் வரைபடம் சார்ந்த வரைபட மாஷ் அப் சேவைகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது கூகுலின் பூமி வரைபடம் மீது இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணைத்து வழங்குவது. பொருத்தமான இந்த இணைப்புகள் வரைபடத்தில் குறிப்பிட்ட இடங்கள் மீது சின்ன டிஜிட்டல் பலூன்களாக இடம்பெற்றிருக்கும். நியூஸ்பேப்பர்மேப் இணையதளம், உலக நாளிதழ்களை இப்படி வரைபடம் மீது ஒட்ட வைத்திருக்கிறது.

இந்த வரைபடம் மீது பலவண்ண டிஜிட்டல் பலூன்களை பார்க்கலாம். (சில நாடுகள் மீது அடர்த்தியாக) அவை எல்லாம் அங்கிருந்து வெளியாகும் நாளிதழ்கள். அந்த இணைப்பை கிளிக்செய்து படிக்கலாம். உங்கள் இருப்பிடம் மற்றும் மொழியை தேர்வு செய்து நீங்கள் படிக்க விரும்பும் நாளிதழை தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது குறிப்பிட்ட நாட்டின் மீது ஒட்டப்பட்டுள்ள பலூனில் கிள்க் செய்து நாளிதழை தேர்வு செய்யலாம்.

ஏதோ ஒரு காரணத்தால் உலகில் வெளியாகும் நாளிதழ்களை தேட விரும்பினால் மற்ற எந்த வழியை காட்டிலும், இப்படி வரைபடம் சார்ந்து நாளிதழ்களை தேட் முற்படுவது மிகவும் சிறப்பானது.

உலகில் உள்ள 199 நாடுகளை சேர்ந்த பெரும்பாலான நாளிதழ் இந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 39 நாடுகளின் நாளிதழ்கள் அவை வெளியாகும் இடங்களுக்கு ஏற்ப சரியாக பொருத்தப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுப்பட்டுள்ளவை மற்றும் தவறானவை குறித்து தகவல் தெரிவிக்கலாம்.மொத்தம் 10,000 நாளிதழ்கள் இருக்கின்றன.

ஆங்கிலம் தவிர பிற மொழி நாளிதழ்களும் உள்ளன்.தமிழும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழ் நாளிதழுக்கான பிரிதிநித்துவம் அத்தனை சிறப்பாக இல்லை.

சுவாரஸ்யமான சேவை. மிகவும் பயனுள்ளது. நாளிதழ் சேர்க்கை மற்றும் தகவல் திருத்ததில் இணையவாசிகள் பங்கேற்றால் இன்னும் மெருகேற்றலாம். அதற்கு இந்த வரைபட சேவை காணாமல் போய்விடாமல் தொடர் வேண்டும். எப்படியும் கூகுல் வரைபடத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான அழகான உதாரணம்.

——–
i(பி.கு: இந்த வரைபட சேவை பற்றி விவரிக்கும் போது உலக நாளிதழ்களின் அருங்காட்சியகமாக விளங்கும் நியூசியம் சேவை பற்றி நினைவுக்கு வருகிறது. இந்த இணையதளம் பற்றி எனது இணையத்தால் இணைய்வோம் புத்தகத்தில் விரிவான அறிமுகம் இடம்பெற்றுள்ளது.
அதே போல உலக நாவல்களை அவற்றின் கதைககளம் சார்ந்து கூகுல் வரைபடத்தில் அடையாளம் காட்டும் நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம் பற்றியும் இந்த புத்தகத்தில் விரிவான அறிமுகம் உள்ளது.

ஆன்லைனில் வாங்க : http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

2;http://nammabooks.com/buy-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-Inaiyathal-Inaivom-Mathi-Nilayam

பி.கு 2. எனது இரண்டாவது புத்தகமான நெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு தயாராகி கொண்டிருக்கிறது. இணையம் மூலம் புகழ் பெற்றவர்களின் வெற்றிக்கதைகள் இவை.

அன்புடன் சிம்மன்

புதிய நாவல்களை அறிய உதவும் இணையதளம்.

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள சுவாரஸ்யமான வழியை முன் வைக்கிறது நாவல்ஸ் ஆன் லொகேஷன் இணையதளம்.

நாவலின் தலைப்பு தான் அதன் உள்ளடக்கமே.நாவலின் லொகேஷன் அதாவது இருப்பிடம் எதுவோ அதனடிப்படையில் நாவலை அடையாளம் கண்டு கொள்ள இந்த தளாம் உதவுகிறது.மிக அழகாக கூகுல் வரைப்படத்தின் மீது நாவல்களில் வரும் இருப்பிடத்தை பொருத்தி அந்த இடத்தில் கிளிக் செய்தால் நாவலை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் பற்றிய விவரம் தோன்றுகிறது.அந்த எழுத்தாளரின் பிற நாவல்களையும் அறிந்து கொள்ளலாம்.அதோடு அந்த இடத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பிற நாவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

எந்த நகரம் பற்றி படிக்க விருப்பமோ அந்த நகரின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.

நாவல்கள் எல்லாமே இருப்பிடம் சார்ந்தவை தான்.ஜாய்ஸின் யுலிசஸ் என்றதுமே டப்ளின் தான் நினைவிக்கு வரும்.தி.ஜானகிராமன் என்றதுமே தஞ்சாவூர் நினைவுக்கு வருவது போல வண்ணதாசன் என்றதுமே நெல்லை நினைவுக்கு வருவது போல.ஆக இருப்பிடத்தை தொடக்கப்புள்ளியாக வைத்து கொண்டு நாவலை தேடுவது நல்ல விஷயம் தான்.

புதிய நாவல்களை அறிமுகம் செய்து கொள்ள இது புதிய வழி தான்.

இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம் உறுப்பினர்கள் தாங்களும் நாவல்களை சமர்பிக்கலாம் என்பது தான்.

நாவ்ல்களை தேட;http://novelsonlocation.com/