டிஜிட்டல் டைரி: உங்கள் இணைய ஷாப்பிங்கை பின் தொடரும் கூகுள்!

getty_1087036132_2000133320009280297_392316உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கிறேன், அவற்றை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கூகுள் இதை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா?

ஆம், உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்து, அதோடு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தால், நீங்கள் எப்போது, என்ன வாங்கினீர்கள் என்பதை எல்லாம் கூகுள் குறித்து வைத்திருக்கிறது. ஜிமெயிலில் உள்ள ’பர்சேசஸ்’ பக்கத்திற்கு சென்று பார்த்தால், இதை நீங்களே புரிந்து கொள்ளலாம். – myaccount.google.com/purchases.

இந்த தகவல் ஒரே நேரத்தில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்க கூடியது. பொதுவாக இ-காமர்ஸ் தளங்களில் வாங்கும் பொருட்களை எல்லாம் பெரும்பாலானோரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத போது, கூகுள் அவற்றை எல்லாம் சேகரித்து பட்டியல் போட்டு வைத்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கலாம்.

ஆனால், அதே நேரத்தில் இணையத்தில் பொருட்கள வாங்குவது எல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என நினைத்துக்கொண்டிருந்தால், கூகுள் எப்படி இதை எல்லாம் தெரிந்து கொள்கிறது? இது இணைய கண்காணிப்பின் கீழ் வராதா? போன்ற கேள்விகள் எழும் போது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

எல்லாம் வல்ல கூகுள் ஏற்கனவே பலவிதங்களில் பயனாளிகளின் இணைய அடிச்சுவட்டை பின் தொடர்ந்து, அவர்களின் இணைய பழக்கம் தொடர்பான எண்ணற்ற தகவல்களை சேமித்து வைக்கும் வழக்கம் கொண்டுள்ளது. இது தொடர்பான பிரைவஸி கவலைகள் தொடர்ந்து இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவதையும் கூகுள் அறிந்து வைத்திருப்பது என்று சொல்லப்படுவது, இணைய உலகில் பயனாளிகளின் பிரைவஸிக்கு கிடைத்த இன்னொரு அடி என்று சொல்லலாம். இது தொடர்பான செய்தி முதலில் சிஎன்.பிசி தளத்தில் வெளியானது.

ஆனால், இ-காமரஸ் தளங்களில் எல்லாம் உங்களை பின் தொடர்வதாக சொல்ல முடியாது. கூகுள் என்ன செய்கிறது என்றால், இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்கும் போது ஜிமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் ரசிதுகளை எல்லாம் கண்டறிந்து, பர்சேஸ் பகுதியில் பட்டியலிட்டு வைக்கிறது.

இதற்காக கூகுள் ஒரு அல்கோரிதமை உருவாக்கி, ஜிமெயில் செய்திகளை எல்லாம் படித்துப்பார்த்து, ஷாப்பிங் தொடர்பான மெயில்களை மட்டும் இனம் கண்டு கொள்கிறது. இதன் பொருள் கூகுள் உங்கள் மெயில்களை எல்லாம் படித்து பார்க்கிறது என்பதாகும். இந்த தகவலும் உங்களை திடுக்கிட வைக்கலாம்.

ஆனால், ஜிமெயில் அறிமுகமான காலத்தில் இருந்து கூகுள் இதை செய்து கொண்டிருக்கிறது. இமெயில் உள்ளடக்கத்திற்கு ஏற்ற விளம்பரங்களை இடம்பெற வைத்து கூகுள் வருவாய் ஈட்டு வந்திருக்கிறது. இவ்வாறு செய்வதை 2017 ல் நிறுத்திக்கொண்டு விட்டதாக கூகுள் தெரிவித்ததுள்ளது.

இந்த நிலையில் தான் ஜிமெயில் ரசீதுகள் மூலம் பயனாளிகள் இணையத்தில் வாங்கிய பொருட்களின் விவரம், கூகுளால் சேமித்து வைக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவலை சம்பந்தப்பட்ட பயனாளிகள் மட்டுமே பார்க்க முடியும் என்றும், இந்த தகவல்களை மூன்றாம் நிறுவனங்கள் எதற்கும் விற்பதில்லை என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பயனாளிகள் விரும்பினால் இந்த தகவல்களை டெலிட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு இ-காமர்ஸ் ரசீது மெயில்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே டெலிட் செய்ய வேண்டும். பயனாளிகள் விரும்பினால், இந்த வசதியை முடக்கி வைக்கலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

எல்லாம் சரி, கூகுள் எதற்கு இப்படி பயனாளிகளின் இ-காமரஸ் வாங்குதல்களை எல்லாம் சேகரிக்க வேண்டும். கூகுள் டிஜிட்டல் உதவியாளர் சேவை அல்லது கூகுள் ஹோம் சேவையில், என் பேக்கேஜ் என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டால் அதற்கான பதிலை அளிக்கத்தான் என்று இதற்கு பதில் சொல்லப்படுகிறது.

எப்படி பார்த்தாலும், இணையத்தில் பயனாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும், எண்ணற்ற விதங்களில் கவனிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனும் திகிலான போக்கின் இன்னொரு முகமாக இந்த செயல் அமைகிறது.

இதனிடையே, கூகுள் பயனாளிகள் விரும்பினால் தங்கள் இணைய பிரைவசியை கொஞ்சம் போல மீட்டுக்கொள்ளும் வசதியை அளித்துள்ளது. கூகுள் தனது எண்ணற்ற சேவைகள் வாயிலாக பயனாளிகளின் இருப்பிடம் மற்றும் இணைய வரலாறு தொடர்பாக தகவல்களை சேகரித்து வைக்கிறது. இனி பயனாளிகள் விரும்பினால், இந்த தகவல்கள் தானாக நீக்கப்பட ஏற்பாடு செய்து கொள்ளலாம். கூகுள் தரும் வசதியை கொண்டு, 3 மாதல் அல்லது 18 மாதங்களுக்குள் தங்களைப்பற்றிய தகவல்கள் தானாக நீக்கப்படுமாறு அமைத்துக்கொள்ளலாம்.

இதற்கு முன்னர், பயனாளிகள் தங்கள் கூகுள் கணக்கு பக்கத்திற்கு சென்று சேகரிக்கப்பட்ட தகவல்களை மெனக்கெட்டு நீக்க வேண்டும்.  இப்போது, தானாக இந்த தகவல்கள் நீக்கப்பட கூகுள் வழி செய்துள்ளது.

டைம் இதழ் பட்டியலில் இந்திய இளம் யூடியூப் நட்சத்திரம்

இந்தியரான அஜய் நேகருக்கு 19 வயது ஆகிறது. ஆனால் இதற்குள் டைம் பத்திரிகையின், அடுத்த தலைமுறை தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இசை, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் புதிய பாதை வகுத்து வருபவர்களில் இருந்து மணி மணியான பத்து பேரை தேர்வு செய்து டைம் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரான அஜய் நேகர், கேரி மினாட்டி எனும் யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்தி மொழியில் வெளியாகும் இவரது வீடியோக்களுக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே இருப்பதாக தெரிகிறது. இவருக்கு கிட்டத்தட்ட எழுபது லட்சம் சந்தாதாரர்கள் இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த எண்ணிக்கையும், இது அளிக்கும் செல்வாக்கும் தான் டைம் பத்திரிகை கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக ஊடக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு வீடியோக்களை உருவாக்கி வரும் நேகர், தனது 10 வது வயதில் முதல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கி, தனக்கான ரசிகர் பட்டாளத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.

டாம் குரூசின் மிஷன் இம்பாசிபில் துவங்கி பப்ஜி இணைய விளையாட்டு உள்பட பல விஷயங்களுக்காக வீடியோ உருவாக்கியுள்ள நேகர், யூடியூப் முதலிடத்திற்கு ஸ்வீடன் யூடியூப் நட்சத்திரம் பியூடைபை மற்றும் இந்தியாவின் டி-சிரீஸ் சேனல் இடையே பலத்த போட்டி நிலவிய போது, பியூடைபை இந்தியர்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்திய கலாச்சாரத்தை கிண்டலடிக்கு எவருக்கும் பதிலடி தருவது தான் தனது வேலை என நேர்க உற்சாகமாக கூறியிருக்கிறார். இணையத்தில் நீங்கள் நீங்களாக இருந்தால் வெற்றி பெறலாம் என்றும் உற்சாகமாக கூறியிருக்கிறார்.

நேகரின் யூடியூப் சேனல்: https://www.youtube.com/watch?v=ncPdCL3aafc&feature=youtu.be

இனி எல்லாம் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மயம்

’கோம் ஆப் த்ரோன்ஸ்’ எனும் தொலைக்காட்சி தொடர் வெகு பிரபலமாக இருக்கிறது. இந்த தொடருக்கு எக்கச்சக்கமான ரசிகர்களும் இருக்கின்றனர். இணையத்திலும் இந்த தொடர் பிரபலமாக இருக்கிறது.

இப்போது கேம் ஆப் த்ரோன்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில், சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இண்டெர்நெட் ஆப் த்ரோன்ஸ் எனும் அந்த தளத்தில், நீங்கள் எந்த இணையதள முகவரியை சமர்பித்தாலும், அந்த தளத்தை கேம் ஆப் த்ரோன்ஸ் தளமாக மாற்றிக்காட்டுகிறது.

மாற்றப்பட்ட தளத்தில் எல்லா படங்களும் செய்திகளும் கேம் ஆப் த்ரோன்ஸ் தொடர்பானதாக இருக்கும்.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில், விக்கிபீடியா, ரெட்டிட், யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் என பிரபலமான தளங்களை எல்லாம் கேம் ஆப் த்ரோன்ஸ் தளமாக மாற்றி தோன்றச்செய்துள்ளனர்.

தளத்தை பார்த்து ரசிக்க: https://internet-of-thrones.herokuapp.com/

நன்றி மின்னம்பலம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.