Tagged by: microsoft

இமோஜியாக மீண்டும் வருகிறது ’கிளிப்பி’

90 ஸ் கிட்ஸ் மட்டுமே அறிந்திருக்க கூடிய இணைய சேவையான கிளிப்பியை (Clippy ) மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பேப்பர் கிளிப் சேவை, இமோஜியாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. கிளிப்பி சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டுமா என மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவிட்டர் மூலம் நடத்திய போட்டியில், பயனாளிகளிடம் இருந்து கிளிப்பிக்கு ஆதரவாக லைக்குகள் குவிந்ததால், வழக்கமான பேப்பர் கிளிப்பிற்கு பதிலாக கிளிப்பியை இமோஜியாக அறிமுகம் செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் […]

90 ஸ் கிட்ஸ் மட்டுமே அறிந்திருக்க கூடிய இணைய சேவையான கிளிப்பியை (Clippy ) மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய...

Read More »

எல்லோருக்குமான மெயில்- ஹாட்மெயில் செய்த மாயம்

இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் போது ஹாட்மெயிலும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்களாக மின்னிக்கொண்டிருப்பதை உணர்லாம். அதிலும் குறிப்பாக 1990 களின் பின் பகுதியில் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களுக்கு ஹாட்மெயிலும், சபீர் பாட்டியாவும், மறக்க முடியாத பெயர்கள். ஹாட்மெயில் அறிமுகமான காலத்தில், அதில் கணக்கு வைத்திருப்பது எத்தனை பெருமையான விஷயமாக இருந்தது என்பதை இப்போது நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கும். ஹாட்மெயில் முகவரி பெருமைக்குறியதாக இருந்தது மட்டும் அல்ல, இணையவாசிகளை உற்சாகத்தில் […]

இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் போது ஹாட்மெயிலும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்களாக மின்னிக்க...

Read More »

டெக் டிக்ஷனரி- 23 லாண்டிங் பேஜஸ் (landing pages ) – குதிக்கும் பக்கம் அல்லது அறிமுக தளங்கள்

நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் புதிய சேவை துவங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு லாண்டிங் பக்கம் இருப்பது நலம். நீங்கள் இணைய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக இருந்தால் லாண்டிங் பக்கம் இருப்பது கட்டாயம். இவ்வளவு ஏன், நீங்கள் எழுத்தாளராக இருந்து புதிய புத்தகம் அல்லது மின்னூலை வெளியிடுவதாக இருந்தால் அதற்கென பிரத்யேக லாண்டிங் பக்கம் இருப்பது நல்லது. அதென்ன லாண்டிங் பேஜஸ் ? கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பொருள் சொல்வது என்றால், குதிக்கும் பக்கம் என்று […]

நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் புதிய சேவை துவங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு லாண்டிங் பக்கம் இருப்பது நலம். நீங்கள் இண...

Read More »

ஒரு பழைய மென்பொருளின் டிஜிட்டல் மறு அவதாரம்!

மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய விண்டோஸ் இயங்குதளத்திலும், ’மேக் ஓஎஸ்’ மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் இந்த செயலியை பயன்படுத்தி விண்டோஸ் 95 அனுபவத்தை மீண்டும் பெறலாம். புதியவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம், கொஞ்சம் வயதானவர்களை இது டிஜிட்டல் மலரும் நினைவுகளில் மூழ்க வைக்கலாம். எப்படி பார்த்தாலும், இது முக்கியமான ஒரு மீட்டெடுத்தல் தான். விண்டோஸ் 95 ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருந்த […]

மென்பொருள் வல்லுனர் ஒருவர் ’விண்டோஸ் 95’ இயங்குதளத்தை செயலி வடிவில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய...

Read More »

அமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்?

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏதாவது ஒன்றை சொல்கிறார் என்றால் அதை காது கொடுத்து கேட்டாக வேண்டும். அதிலும் நிர்வாக விஷயமாக பெசோஸ் சொல்வதை நிச்சயம் கவனித்தாக வேண்டும். அதனால் தான், பவர்பாயிண்ட் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக பெசோஸ் தெரிவித்த கருத்து பரவலாக கவனத்தை ஈர்த்து விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பவர்பாயின்ட் மென்பொருள் பயன்பாட்டிற்கு அமேசான் நிறுவனத்தில் அனுமதி இல்லை என்பது தான் பெசோஸ் கூறிய கருத்தின் சாரம்சம். இதற்கான காரணங்களையும் பெசோஸ் விளக்கி கூறியிருக்கிறார். பவர்பாயிண்ட் மைக்ரோசாப்ட் […]

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏதாவது ஒன்றை சொல்கிறார் என்றால் அதை காது கொடுத்து கேட்டாக வேண்டும். அதிலும் நிர்வாக விஷயமாக...

Read More »