டெக் டிக்ஷனரி- 23 லாண்டிங் பேஜஸ் (landing pages ) – குதிக்கும் பக்கம் அல்லது அறிமுக தளங்கள்

lநீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் புதிய சேவை துவங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு லாண்டிங் பக்கம் இருப்பது நலம். நீங்கள் இணைய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக இருந்தால் லாண்டிங் பக்கம் இருப்பது கட்டாயம். இவ்வளவு ஏன், நீங்கள் எழுத்தாளராக இருந்து புதிய புத்தகம் அல்லது மின்னூலை வெளியிடுவதாக இருந்தால் அதற்கென பிரத்யேக லாண்டிங் பக்கம் இருப்பது நல்லது.
அதென்ன லாண்டிங் பேஜஸ் ? கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பொருள் சொல்வது என்றால், குதிக்கும் பக்கம் என்று கூறலாம். நேரடியாக பொருள் எனில் வந்து நிற்கும் பக்கம் எனலாம். எனினும் லாண்டிங் பேஜசை அறிமுக தளங்கள் அல்லது அறிமுகம் பக்கம் என்று கொள்வதே சரியாக இருக்கும்.
ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகில் லாண்டிங் பெஜஸ் கருத்தாக்கம் மிகவும் பிரபலமானது. பக்காவான லாண்டிங் பேஜஸ் அமைத்து தருவதற்கு என்றே பல்வேறு இணைய சேவைகளும் இருக்கின்றன.
எல்லாம் சரி, லாண்டிங் பேஜ்ஸ் எதற்காக? இணையத்தில் எதையாவது விற்க வேண்டும் என்றால் அதற்கான அறிமுக அல்லது தகவல் பக்கமாக இவை அமைகின்றன. அடிப்படையில் பார்த்தால், இவையும் இணையதளங்கள் தான். ஆனால், ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதும், நெத்தியடியாக குறிப்பிட்ட நோக்கிலான தகவல்களை கொண்டிருப்பதும் இவற்றின் சிறப்பம்சம்.
பெரும்பாலும் இவை ஒரு பொருள் அல்லது சேவைக்கான எதிர்கால வாடிக்கையாளர்களை கொக்கி போட்டி இழுக்க அமைக்கப்படுகிறது. இமெயில் அல்லது வேறுவடிவங்களில் இணையவாசிகளுக்கு விளம்பரம் செய்து, அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணைய பக்கத்திற்கு வரவைக்க வேண்டும். அப்படி வருகை தருபவர்களை ஈர்க்ககூடிய தகவல்கள் கச்சிதமாக அந்த பக்கத்தில் இருக்க வேண்டும். அதோடு, தகவல்களை படித்ததும் செய்வதற்கான நடவடிக்கை தூண்டுதலும் இருக்க வேண்டும். அதாவது, வாங்குவதற்கான அல்லது சந்ததாரராவதற்கான வழி இருக்க வேண்டும்.
இப்படி அமைக்கப்படும் பக்கத்தை தான் லாண்டிங் பேஜ் என்கின்றனர். சும்மாயில்லை, “ ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகில், லேண்டிங் பேஜ் என்பது, தேடியந்திரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட மார்க்கெட்டிங் திட்டத்தின் பயனாக கிளிக் செய்து வருவதற்கு பதிலாக அமைக்கப்படும் ஒரு பக்க இணையதளம் என்பது இதற்காக விக்கிபீடியா அளிக்கும் விளக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
ஆன்லைன் மார்க்கெட்டிங், தேடியந்திரத்திற்கு ஏற்ற பிரச்சாரம், தேடி வருபவர்களுக்கு தகவல் அளிக்கும் பக்கம் ஆகியவை இதில் முக்கியமாக அமைவதை கவனிக்கலாம். இந்த வகை மார்க்கெட்டிங் வார்த்தைகளை எல்லாம் நீக்கிவிட்டு பார்த்தால், ஒரு பொருளை வாங்க வைப்பதற்கான முயற்சியாக தகவல் அளிக்க அமைக்கப்படும் இணைய பக்கம் என புரிந்து கொள்ளலாம். இதற்கென இணையதளத்தையும் அமைக்கலாம் தான். ஆனால், ஒற்றை நோக்கிலான இணைய பக்கம் எனில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை கச்சிதமாக வழங்கி கவரும் சாத்தியம் இருக்கிறது.
சிறந்த இமெயில் மார்க்கெட்டிங் உத்தியை வகுத்துவிட்டு, பக்கவான ஒரு இணைய அறிமுக பக்கத்தை உருவாக்கிவிட்டால், இபுக் அல்லது புதிய சேவையை இணையத்தில் வெற்றி பெறச்செய்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
லேண்டிங் பேஜ் உருவான பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பதையும் அறிய முடிகிறது. புத்தாயிரம் ஆண்டின் துவக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பிரதான சேவையான ஆபிஸ் மென்பொருளுக்கான விற்பனை தேக்கமடைந்ததை உணர்ந்து அதை ஊக்க்விக்க, அறிமுக பக்க உத்தியை கையாண்டதாம். அதன் பிறகு, அன்பவுன்ஸ் எனும் நிறுவனம் இதற்காக என்றே ஒரு சேவையை அறிமுகம் செய்தது. பின்னர் பல சேவைகள் வந்துவிட்டன.
இப்போது கேன்வா போன்ற சுய வடிவமைப்பு தளங்களில் நீங்களே கூட ஒரு அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
நிற்க அண்மையில், பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்வதற்காக அறிமுக பக்கம் அமைக்க புதிதாக ஒரு சேவை அறிமுகமாகியுள்ளது: https://we.fo/?ref=producthunt
முந்தைய டெக் டிக்ஷனரி: http://cybersimman.com/2018/06/02/file-2/
பாட்காஸ்டிங் பற்றி அறிய விரும்பினால்: http://cybersimman.com/2018/12/25/twitter-227/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.