Tag Archives: play

பின்னணியில் பாட்டு கேட்க ஒரு இணையதளம்

http _www.getworkdonemusic.com_http _www.getworkdonemusic.com_அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது. இத்தகைய இசைப்பிரியர்களுக்காக பின்னணி பாடல்களை தானாக ஒலிக்கச்செய்யும் சேவையை அளிக்கிறது கெட் ஒர்க் டன் மியூசிக் இணையதளம். அதாவது பாட்டு கேட்டபடி வேலையை பாருங்கள் என ஊக்குவிக்கும் இந்த தளம் என்ன பாட்டு பாட என்று கேட்காமல் கேட்டு உங்களுக்கான பாடல்களை ஒலிபரப்புகிறது.

ஒலிபரப்பாகும் பாடல்கள் பிரபல ஆடியோ சேவையான சவுண்ட் கிலவுடுடன் உபயத்துடன் வழங்கப்படுகிறது. பின்னணியில் கேட்கும் பாடகளின் வேகத்தையும், பாடல்களையும் விரும்பினால் மாற்றியும் கொள்ளலாம்.

கேட்டுப்பாருங்கள்; http://www.getworkdonemusic.com/#.

இளையராஜா வந்தால் சொல்லுங்கள்!

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

http _greatlanguagegame.com_உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக!

உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். இப்படி வெவ்வேறு மொழிகளின் ஒலிகளை கேட்பதே சுவாரஸ்யமான அனுபவம் தான். ஆடத்தயார் என்று தெரிவிததுமே ஒலிபெருக்கியில் ஏதேனும் ஒரு மொழியின் பேச்சை கேட்கலாம்.அதன் கீழ் இரண்டு மொழிகள் குறிப்பிடப்பட்டு அவற்றில் எந்த மொழி நீங்கள் கேட்ட மொழி என தேர்வு செய்ய வேண்டும். தேர்வு சரியாக இருந்தால் மதிப்பெண் உண்டு. சரியோ தவறோ அடுத்தடுத்து மொழிகளை கேட்டு கொண்டே இருக்கலாம்.

larsஆடி முடித்த பின் இதற்கு முன் கேட்டிராத பல புதிய மொழிகளை கேட்டு ரசித்திருக்கலாம். அது மட்டும் அல்ல, தவறாக சொன்ன மொழிகளை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம். இதன் மூலம் அந்த மொழியை ஓரளவுக்கு பரிட்சயம் செய்து கொள்ளலாம். அப்படியே அந்த மொழி எங்கெலாம் பேசப்படுகிறது.எத்தனை பேரால் பேசப்படுகிறது போன்ற அதன் மொழி குடும்பம் என்ன ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதோடு அந்த மொழி தொடர்பான விக்கிபீடியா கட்டுரை மற்றும் மொழியியல் களஞ்சியமான எத்னோலேஜ் தளத்தின் கட்டுரைக்கான இணைப்பும் இருக்கிற‌து.

மொழி சார்ந்த அனுபவம் விரிய இந்த தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.ஆஸ்திரே;லியாவை சேர்ந்த லாரஸ் யென்ச்கன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.பொறியியல் வல்லுனரான அவர் மொழி மற்றும் இயந்திர கற்றல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.மொழிகளின் மீது அவருக்கு தீராத காதல் இருக்கிரது.

இணையதள முகவரி: http://greatlanguagegame.com/

தளத்தை உருவாக்கியவரின் முகவரி:http://lars.yencken.org/

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் அட நம்மூர் பாடல்களுக்கும் இதே போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தளம் என்பதால் இந்த பதிவை மேலே படியுங்கள்.ஆனால் ஒன்று இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானது.

கெஸ் யுவர் சாங் என்னும் இந்த தளம் ஒரு இசை விளையாட்டு இணையதளம்.

விநாடி வினா போன்ற நிகழ்ச்சிகளிலும் இன்னும் பிற டிவி கேம் ஷோக்களிலும் ஏதாவது ஒரு பாடலின் வீடியோ அல்லது ஆடியோவை போட்டு காட்டிவிட்டு அதல் வரும் பாடலை கண்டுபிடிக்க சொல்வது உண்டல்லவா?அதே போல இந்த தளமும் இசை கோப்புகளை கேட்டு அதில் வரும் பாடல்களை கண்டு பிடிக்க சொல்கிறது.

இதை ஒரு விளையாட்டாகவே விளையாடலாம்.

இந்த இசை விளையாட்டை ஆடத்துவங்க முதலில் உங்களுக்கு பிடித்தமான அல்லது மிகவும் பரிட்சயமான இசை வகையை(ராக்,பாப்,ஆர் அன்டு பி,நாட்டுபாடல்) தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு என் பாடலை ஒலிக்க செய்யவும் என்னும் இடத்தில் கிளிக் செய்தால் அந்த பாடலின் ஒரு துண்டு இசைக்கப்படுகிறது.ஒலிக்கும் பாடலை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் ஊகிக்க தயார் என்னும் பகுதியை கிளிக் செய்து பதில அளிக்கலாம்.

பாடலுக்கான மூன்று பதில்களும் முன்வைக்கப்படுவதால் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.உங்கள் தேர்வு சரி என்றால் அடுத்த பாடலை கேட்டு யூகிக்க முன்னேறலாம்.தவறு என்றாலும் கவலைப்படாமல் அடுத்த பாடலை கேட்கலாம்.இப்படியாக அலுக்கும் வரை பாடலை கேட்டு எந்த பாடல் என கண்டு பிடித்து கொண்டே இருக்கலாம்.

ஆனால் ஒன்று இந்த விளையாட்டு அலுத்து போகவே வாய்ப்பில்லை.காரணம் யூகிக்க முயலும் பாடலை சரியாக சொன்னால் அதை முழுவதும் கேட்டு ரசிக்கலாம்.அந்த பாடல் பிடித்திருந்தால் அப்படியே ஐடியூன்ஸ் மூலம் வாங்கி கொள்ளலாம்.

அதோடு ஒவ்வொரு கட்டமாக முன்னேற புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.கூடவே நமது இசை பரிட்சயம் குறித்தும் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.எப்போது வேண்டுமானாலும் இசை வகையை மாற்றியும் விளையாடலாம்.

பேஸ்புக் வழியேவும் இந்த விளையாட்டை விளையாடலாம்.விநாடி வினா பாணியிலும் விளையாடலாம்.விநாடி வினா சுற்று முடிந்ததும் பேஸ்புக் நண்பர்களோடு சவாலிலும் ஈடுபடலாம்.அப்படியே பேஸ்புக் நண்பர்களை சவாலுக்கு அழைத்து அவர்களோடு பாடல்களை யூகிக்கும் விளையாட்டில் ஈடுபடலாம்.

நண்பர்களும் இந்த தளத்தில் உறுப்பினராக இருந்தால் அவர்கள் கேட்ட பாடல்கள் யூகித்த பாடல்களின் பட்டியலையும் பார்க்கலாம்.கேடு ரசிக்கலாம்.இதன் மூலம் மேலும் புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

வினாடி வினா நிகழ்ச்சிகளில் பரிசளிக்கப்படுவது போல இந்த விளையாட்டிலும் சரியாக யூகித்தால் அதற்கான சாதனை பட்டயங்களை பெற்று நமது பக்கத்தில் இடம் பெறச்செய்யலாம்.

யோசித்து பாருங்கள் தமிழி பாடல்களுக்காக இதே போன்ற தளம் இருந்தால் இளையராஜா பாடல்களையும் எமெஸ்வி பாடல்களையும் இசைப்புயல் பாடல்களையும் கேட்டு யூகித்து மகிழலாம்.கர்நாடக் இசை மற்றும் நாட்டு பாடல் போன்ர பிரிவுகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

தமிழில் திரைப்பாடல் போன்ற தளங்களை நடத்தி வருபவர்கள் முயன்று பார்க்கலாம்.

இசை விளையாட்டிற்கான இணைய முகவரி;http://www.guessyoursongs.com/

குறுக்கெழுத்து புதிர்களுக்கான இணையதளம்.

குறுக்கெழுத்து புதிர்கள் ஆங்கில நாளிதழ்களில் பிரிக்க முடியத ஒரு அங்கம்.தினசரி நாளிதழ் கையில் கிடைத்ததும் குறுக்கெழுத்து புதிர்களை விடுவிக்கும் செயலில் ஆர்வத்தோடு இறங்கி விடுபவர்களும் கனிசமாக இருக்கின்றனர்.

இத்தகைய குறுக்கெழுத்து பிரியர்கள் தினமும் நாளிதழ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றில்லை;அவர்கள் விரும்பும் நேரத்தில் குறுக்கெழுத்து புதிர்களை விளையாடலாம்.ஆன்லைன் கிராஸ்வேர்ட்ஸ் நெட் இணையதளம் இதற்கான வாய்ப்பை த‌ருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச குறுக்கெழுத்து புதிர்களின் இருப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது.அதோடு தினமும் புதுப்புது குறுக்கெழுத்துபுதிர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.எனவே குறுக்கெழுத்து பிரியர்கள் இந்த தளத்தில் எப்போது வேண்டுமானாலும் குறுக்கெழுத்து புதிர் விளையாட்டில் ஈடுபடலாம்.

பேனாவும் கையுமாக குறுக்கெழுத்து புதிர்களை விடுவித்து பழகியவர்கள் தங்களுக்கு தேவையான புதிரை தேர்வு செய்து அச்சிட்டு கொள்ளும் வசதியும் இருக்கிற‌து.விரும்பிய வடிவமைப்பில் அச்சிட்டு கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

அது மட்டுமா ஆர்வத்தோடு விடுவித்து கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட ஒரு வார்த்தை பிடி கொடுக்காமால் போக்கு காட்டி கொண்டிருந்தால் அதற்கு விடை காண்பதற்கான வழிகாட்டி பகுதியும் இதில் உள்ளது.ஏற்கன‌வே விடுவிக்கப்பட்ட புதிர்களின் விடை பட்டியலையும் பார்த்து தெளிவு பெறலாம்.

வலைப்பதிவாளர்கள் இந்த புதிர்களை தங்கள் பக்கத்திலும் இடம் பெற வைத்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

குறுக்கெழுத்து பிரியர்களுக்கு சரியான விருந்து இந்த தளம்.எல்லாம் சரி ஆங்கில தெரிந்த்வர்களுக்கு தானே இது தமிழில் இதே போல குறுக்கெழுத்து தளங்கள் இல்லையா என்று கேட்கலாம்.

தமிழ் குறுக்கெழுத்து புதிர்களை த‌ரும் தளங்களும் இருக்கின்றன.இவற்றில் அட்டகாசமாக இருப்பது தமிழ் பசில்ஸ் டாட் காம்.கொஞ்சு தமிழ்ல் கொஞ்சம் விளையாட என் அழைப்பு விடுக்கும் இந்த தளம் குறுக்கெழுத்து புதிர்களை பட்டியல் போடுவதோடு புதிர் பூங்கா,சொல்லாங்குழி என வேறு பல விளையாட்டு பகுதிகளையும் வழங்குகிறது.எல்லாமே தமிழ் மொழி சார்ந்த விளையாட்டுக்கள்.

சொலாங்குழி விளயாட்டு உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கிறது.ம்ரை சொல்லும் என அழைக்கப்ப‌டும் நினைத்திருக்கும் வார்த்தையை கண்டு பிடிக்கும் விளையாட்டு இது.

இதே போல குறள் வளையில் களைத்து போடப்பட்டிருக்கும் திருக்குறளில் இருந்து சரியான குரளை கண்டு பிடிக்க வேண்டும்.இதற்கான குறிப்புகளும் சுவாரஸ்ய்மாகவே இருக்கின்றன.ஒரு குறளுக்கான குறிப்பில் திமுகவை சொல்லவில்லை சூதாடும் மன்னனை சொல்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர பிற‌ குறுக்கெழுத்து புதிர் தளங்களுக்கான இணைப்பு பட்டியலும் இருக்கிறது.இவற்றில் ஒன்று புதிர்மயம் டாட் காம்.குறுக்கெழுத்து புதிர்களை விளையாடுவதோடு அவற்றை உருவாக்கி கொள்ளவும் வாய்ப்பு தருகிறது.

புதிர்மயத்துக்கான அறிமுக பகுதியில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்களின் தென்றல் இதழ் வாஞ்சிநாதன் முன்னோடி என்பதை அறிய முடிகிற‌து.இந்த புதிர்களை தொடர்ந்து விடுவித்த ஊக்கத்தில் எஸ் பார்த்தசாரதி என்பவர் குறுக்கெழுத்து புதிர்களுக்கான தளத்தை அமைத்திருக்கிறார்.

பொதுவாகவே இக்கால தலைமுறையினர் மத்தியில் தமிழில் படிப்பத்தற்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் இத்தகைய தளங்கள் தமிழ் மீதான ஆர்வத்தை வள்ர்த்தெடுக்க உதவும் என நம்பலாம்.

இணையதள முகவரி;

http://www.onlinecrosswords.net/

http://www.tamilpuzzles.com/

http://www.puthirmayam.com/index.php

http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html