மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

http _greatlanguagegame.com_உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக!

உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். இப்படி வெவ்வேறு மொழிகளின் ஒலிகளை கேட்பதே சுவாரஸ்யமான அனுபவம் தான். ஆடத்தயார் என்று தெரிவிததுமே ஒலிபெருக்கியில் ஏதேனும் ஒரு மொழியின் பேச்சை கேட்கலாம்.அதன் கீழ் இரண்டு மொழிகள் குறிப்பிடப்பட்டு அவற்றில் எந்த மொழி நீங்கள் கேட்ட மொழி என தேர்வு செய்ய வேண்டும். தேர்வு சரியாக இருந்தால் மதிப்பெண் உண்டு. சரியோ தவறோ அடுத்தடுத்து மொழிகளை கேட்டு கொண்டே இருக்கலாம்.

larsஆடி முடித்த பின் இதற்கு முன் கேட்டிராத பல புதிய மொழிகளை கேட்டு ரசித்திருக்கலாம். அது மட்டும் அல்ல, தவறாக சொன்ன மொழிகளை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம். இதன் மூலம் அந்த மொழியை ஓரளவுக்கு பரிட்சயம் செய்து கொள்ளலாம். அப்படியே அந்த மொழி எங்கெலாம் பேசப்படுகிறது.எத்தனை பேரால் பேசப்படுகிறது போன்ற அதன் மொழி குடும்பம் என்ன ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதோடு அந்த மொழி தொடர்பான விக்கிபீடியா கட்டுரை மற்றும் மொழியியல் களஞ்சியமான எத்னோலேஜ் தளத்தின் கட்டுரைக்கான இணைப்பும் இருக்கிற‌து.

மொழி சார்ந்த அனுபவம் விரிய இந்த தளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.ஆஸ்திரே;லியாவை சேர்ந்த லாரஸ் யென்ச்கன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.பொறியியல் வல்லுனரான அவர் மொழி மற்றும் இயந்திர கற்றல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.மொழிகளின் மீது அவருக்கு தீராத காதல் இருக்கிரது.

இணையதள முகவரி: http://greatlanguagegame.com/

தளத்தை உருவாக்கியவரின் முகவரி:http://lars.yencken.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

  1. அன்பின் சிம்மன் – அரிய தகவல் – தளங்களைத் தேடிப் பிடித்து விளக்கங்களுடன் பதிவிடுவது நற்செயல் – நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி நண்பரே.

      Reply
  2. நல்லதொரு அறிமுகம் நன்றி

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி நண்பரே. பயன்படுத்தி பார்த்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். விரும்பினால் பதிவாக கூட எழுதுங்கள்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.