Tag Archives: privacy

பேஸ்புக் நட்பு இலக்கணம்

People are seen as silhouettes as they check mobile devices whilst standing against an illuminated wall bearing Facebook Inc.s logo in this arranged photograph in London, U.K., on Wednesday, Dec. 23, 2015. Facebook Inc.s WhatsApp messaging service, with more than 100 million local users, is the most-used app in Brazil, according to an Ibope poll published on Dec. 15. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

திருவிளையாடல் திரைப்படத்தின் சிவபெருமான் –புலவர் தருமி உரையாடலை இணைய யுகத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய வேண்டும் எனில், பேஸ்புக்கில் செய்யக்கூடிவையும், செய்யக்கூடாதவையும் என தருமி கேட்பதாக சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு பேஸ்புக் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. புதிய நட்பை தேடிக்கொள்ளவும், நண்பர்களோடு உரையாடவும் பேஸ்புக் அருமையான வழி தான். ஆனால் பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் நட்பையும், விருப்பங்களையும் (லைக்ஸ்) மட்டும் பெற்றுத்தருவதில்லை. பல நேரங்களில் வில்லங்கத்தையும் தேடித்தரலாம்.

பேஸ்புக் நட்புக்கான வலைப்பின்னல் சேவை என்றாலும், பெரும்பாலானோரால் அது ஒரு வெளியீட்டு சாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மனதில் உள்ள எண்ணங்களை பகிரவும், நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவும் பேஸ்புக் சுவற்றை பயன்படுத்துவது என்பது அதன் பயனாளிகளுக்கு இயல்பாக இருக்கிறது. பலரும் ஆழமான கருத்துக்களை நீள் பதிவுகளாக வெளியிடவும் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். வலைப்பதிவு உலகில் இயங்கி வந்தவர்களில் பலர் பேஸ்புக்கிற்கு மாறிவிட்டதாகவும் தெரிகிறது.

மிகை பகிர்வு!

எதை எடுத்தாலும் பேஸ்புக்கில் வெளியிடுவது என்பது மிகை பகிர்வு பழக்கமாக மாறி இருப்பது மற்றும் கலாய்த்தால், கேலி செய்தல், சண்டையிடுதல், துவேஷம் கக்குதல், தனிமனித தாக்குதல் உள்ளிட்டவை பேஸ்புக் பயன்பாடு தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேஸ்புக்கில் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு எனும் நிலையில், அந்த சேவையை சரியாக பயன்படுத்துவது என்பது பயனாளிகளின் கைகளில் தான் இருக்கிறது.

பேஸ்புக் நிலைத்தகவல்களை எப்படி வெளியிடுவது என்பதும், மற்றவர்கள் தகவல்களுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவதும் அவரவர் விருப்பமும், உரிமையும் சார்ந்தது. பேஸ்புக் சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக விதிமுறைகளை எல்லாம் உருவாக்க முடியாது என்றாலும், பயனாளிகள் தங்கள் நலன் கருதி (மற்றவர்கள் நலனுக்காகவும் தான்) பேஸ்புக்கில் சில அடிப்படையான நெறிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது என இணைய வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நண்பர்கள் மட்டும்

முதல் விஷயம், சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக்கின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். பேஸ்புக்கை நண்பர்களின் இருப்பிடம் என நீங்கள் கருதினாலும், உங்கள் பதிவுகளை கவனித்துக்கொண்டிருப்பது நண்பர்கள் மட்டும் அல்ல; அறிமுகம் இல்லாதவர்களும் தான். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என விரியும் நட்பு வலையில் நேரடியாக அறிமுகம் இல்லாதவர்களும் இருக்கலாம். எனவே பொதுவெளியில் எதை எல்லாம் பகிர்வோமோ அவற்றை மட்டுமே பேஸ்புக் சுவற்றில் பகிர்வது சரியாக இருக்கும். புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதையே எடுத்துக்கொள்வோம். ஒருவர் தன்னுடைய திருமண ஆல்பத்தை சாலையில் சென்று கொண்டிருப்பவர்களிடம் எல்லாம் காண்பிக்க விரும்புவாரா, என்ன? ஆனால் பேஸ்புக்கில் இதற்கு நிகரான செயலை தான் பலரும் செய்கின்றனர். ஊருக்கு போன படத்தையும், வீட்டில் பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடிய படத்தையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இப்படி படத்தை பகிர்வதன் நோக்கத்தை விமர்சிப்பதோ, கேலி செய்வதே அல்ல நம் நோக்கம்; இந்த பகிர்வால் ஏற்படக்கூடிய வில்லங்களும், விபரீதங்களும் தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. எத்தனையோ படங்களை இதுவரை வெளியிட்டிருக்கிறோம், எந்த பிரச்சனையும் வந்தது இல்லையே என நீங்கள் கேட்கலாம். வராத வரை சந்தோஷம் என நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் தனிப்பட்ட படங்களை பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பகிர்வது எப்போதுமே ஆபத்தானது தான். எப்போது என்ன நோக்கில் அவை பயன்படுத்தப்படலாம் எனத்தெரியாது.

உதாரணத்திற்கு கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் ஒருவர் உற்சாகமாக மது அருந்தும் புகைப்படத்தை தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்த படத்தை அலுவலக மேலதிகாரி பார்க்கும் நிலை ஏற்பட்டால் என்னாகும் யோசித்துப்பாருங்கள். அதிலும், அவர் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி அலுவலகத்தில் விடுப்பு கோரியிருந்தால், நிலைமை மோசமாகிவிடும் அல்லாவா! அது மட்டும் அல்ல, இந்த புகைப்படம் காப்பீடு நிறுவனத்தின் பார்வையில் பட்டாலும் சிக்கலாகலாம். குடிப்பழக்கம் என்பது காப்பீடு கோரிக்கை நிராகரக்கப்படுவதற்கான காரணமாக கூட அமையலாம். நிஜ வாழ்க்கையில் இப்படி பாதிப்பு ஏற்பட்டதற்கான கதைகள் இருக்கின்றன. அது மட்டும் அல்ல, புகைப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் எங்கங்கோ டேக் செய்யப்படுவதும், முகம் உணர் தொழில்நுட்பம் காரணமாக, புகைப்படங்களில் உள்ளவர்கள் அடையாளம் காணப்படும் சாத்தியத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

புகைப்படம் பகிரும் முன்!

எனவே, புகைப்படங்களை பகிரும் முன், இது அவசியமா? என ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள், புகைப்படத்தை வேறு மாற்று வழியில் நண்பர்களுடன் பகிரலாமா? என்றும் யோசித்துப்பாருங்கள். பல நேரங்களில் நண்பர்களுக்கு இமெயில் மூலம் படங்களை அனுப்பி வைப்பது சரியாக இருக்கும்.

இதே போலவே பணி நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வெளியூர் பயணங்களுக்கு செல்லும் போது, எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல அந்த செய்தியை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் ஒருவர் ஊரில் இல்லை என்பதை அவரது நண்பர்கள் மட்டும் அல்ல, விஷமிகள் யாரேனும் கூட தெரிந்து கொண்டு அந்த தகவலை தவறாக பயன்படுத்த முற்படலாம். பேஸ்புக்கில் வெளியூர் சென்ற தகவலை பார்த்துவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் எல்லாம் மேலைநாட்டில் நடந்திருக்கின்றன.  பொதுவாகவே இருப்பிடத்தை காட்டும் தகவல்களை பேஸ்புக்கில் மட்டும் அல்ல, இணையத்தில் பகிராமல் இருப்பதே நல்லது. எப்படியும் இணைய நிறுவனங்களும், உளவு மென்பொருள்களும் ஓயாமல் இணையவாசிகளை பின் தொடர்ந்து அவர்கள் இணைய சுவடுகளை கண்காணித்து தகவல்களை சேகரிக்கின்றன. இதில் நம் பங்கிற்கு நாமும் இருப்பிடம் சார் தகவல்களை இணைய சுவடாக பதிவு செய்ய வேண்டுமா?

இருப்பிடம் சார் தகவல்களை தவிர்ப்பது போலவே, தொலைபேசி எண் அல்லது இல்ல முகவரியையும் டைம்லைனில் பகிரக்கூடாது. தொலைபேசி எண் போன்றவை தேவை எனில், இன்பாக்ஸ் வழியே தனியே செய்தி அனுப்பிக்கொள்ளலாம்.

நம்மைப்பற்றிய தகவல்களை பகிர்வதில் கவனமாக இருப்பது போலவே நண்பர்கள், உறவினர்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதிலும் கவனம் தேவை. அவர்கள் பொதுவெளியில் பகிர விரும்பாத தகவல்களை நாம் வெளியிடாமல் இருப்பதே சரியானது.

துவேஷம் வேண்டாம்

பொதுவாக மற்றவர்கள் மீது துவேஷம் கொண்ட கருத்துகள், மிரட்டல், சீண்டல் கருத்துக்களை வெளியிடாமல் இருக்க வேண்டும். எதிர் கருத்தை கூறினாலும், கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத கேலி, கிண்டலை தவிர்த்தல் நல்லது.

ஒரே விஷயம் தொடர்பாக பதிவுகளை வெளியிடுவதும் ஏற்றதல்ல. இது நண்பர்களை வெறுப்புக்குள்ளாக்கும். உங்கள் ஆர்வம் சார்ந்த கருத்துகள் நிறைய இருந்தால் அதற்கென தனியே ஒரு பேஸ்புக் பக்கம் துவங்கி பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

அதே போல், அறிமுகம் இல்லாதவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டாம். முதலில் அவர்களைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு முடிவு செய்யுங்கள். நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை பெருமையாக கருத வேண்டாம். அர்த்தமுள்ள உரையாடல் சாத்தியமாக வேண்டும் என்பதே முக்கியம்.

பேஸ்புக்கில் எட்டிப்பார்க்கும் சுவாரஸ்யமான விளையாட்டுகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தும் முன், அவை உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க கூடியவை என்பதை மனதில் கொள்ளுங்கள். 20 வருடம் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் அளிப்பீர்கள் அல்லது நீங்கள் எந்த பிரபலம் போல இருக்கிறீர்கள் என உணர்த்தும் செயலிகள் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் அந்த செயலிகளை பயன்படுத்தும் போது உங்கள் முழு டைம்லைனையும் அவற்றின் வசம் ஒப்படைக்கு நிலை இருக்கலாம் என்பதை பலரும் கவனிப்பதில்லை.

மேலும் பணியிடத்து சிக்கல்கள் குறித்து புலம்புவதும் தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்றது தான்.

இவைத்தவிர, பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங் வசதி பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நிலைத்தகவல்கள் பொது வெளியில் பகிரப்பட வேண்டியவையா அல்லது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் தெரிய வேண்டியவையா என்பதை தீர்மானிக்கும் வசதி செட்டிங் பகுதியில் இருக்கிறது. தனிப்பட்ட பகிர்வு எனில் அவற்றை நண்பர்கள் வட்டத்தில் மட்டுமே பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும். பேஸ்புக் வழங்கும் பிரைவஸி அமைப்புகள் பற்றி தெரிந்து கொள்வதோடு, பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு பேஸ்புக்கின் பிரைவசி கொள்கை பற்றியும் கூட படித்துப்பார்ப்பது பல விஷயங்களை புரிய வைக்கும்.

நன்றி; புதிய தலைமுறை இதழில் நிறைவடைந்த எண்டெர்.நெட் தொடருக்கான எழுதியது.

பேஸ்புக்கில் நீங்கள் கண்காணிக்கப்படுவது தெரியுமா?

facebook-change-visibilityநீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளி என்றால் ஸ்டாக்ஸ்கேன் இணையதளம் உங்களை லேசாக திகைப்பில் ஆழ்த்தும். பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு பேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களை பொதுவெளியில் தோன்றும் வித்ததை தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.

ஸ்டாக்ஸ்கேன் தளம் அப்படி என்ன செய்கிறது என்றால், உங்கள் பேஸ்புக் பக்கத்தை வேறு யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதை புரிய வைக்கிறது. என் பேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் அதுவல்ல, ஒருவரது பேஸ்புக் பயன்பாட்டை இன்னொருவரால் எட்டிப்பார்க்க முடியும் என்பதையே இந்த இணையதளம் உணர்த்துகிறது.

நட்பு வளையம்

பேஸ்புக்கில் நட்பு வளையத்தில் இருப்பவர்கள் தானே நாம் பகிரும் தகவல்களை பார்க்க முடியும், அப்படியிருக்க யாரோ ஒருவரால் எப்படி நம் பேஸ்புக் செயல்பாட்டை அறிய முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள ஸ்டாக்ஸ்கேன் தளத்தை ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள். யாரோ ஒரு பேஸ்புக் பயனாளி தொடர்பான எத்தனை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்ற வியப்பு ஏற்படும். இதற்கு, குறிப்பிட்ட பயனாளியின் பேஸ்புக் முகவரியை மட்டும் இருந்தால் போதுமானது.

ஸ்டாக்ஸ்கேன் தளத்தில் பேஸ்புக் பயனாளி முகவரியை டைப் செய்து தேடினால், அவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட தகவல்களை எவை எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன என்பதை இந்த தளம் காண்பிக்கிறது. பொதுவெளியில் இருக்கிறது என்றால், அந்த தகவல்கள் வேறு யாரால் வேண்டுமானாலும் பார்க்கப்படலாம் என பொருள்.

எந்த வகையான விவரங்கள் எல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஒருவரது ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள், காணொலிகள், கலந்து கொண்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். ஒருவருடைய வயது, உறவு நிலை, பாலினம் போன்ற தகவல்கள், அவர் மற்ற ஒளிப்படங்களில் டேக் செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அறியலாம். அதே போல ஒருவர் இதற்கு முன்னர் எந்த படங்கள் அல்லது விஷயங்களை எல்லாம் லைக் செய்திருக்கிறார், யாருடைய பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டம் அளித்திருக்கிறார், எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருக்கிறார், உறவினர்கள் யார், உடன் பணியாற்றியவர்கள் யார்?, எந்த குழுக்களில் எல்லாம் உறுப்பினராக உள்ளார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் அறிய முடியும்.

பேஸ்புக் தேடல்

பேஸ்புக் உறுப்புனர் முகவரியை சமர்பித்ததுமே, அந்த முகவரி தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திக்காட்டுகிறது. ஒவ்வொரு வகையாக தேர்வு செய்து ஆய்வு செய்துப்பார்க்கலாம்.

பொதுவாக பேஸ்புக்கை நண்பர்களும், நண்பர்களின் நண்பர்கள் சூழ்ந்த அறையாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த உணர்வுடன் தான் தகவல்களையும், ஒளிப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். விவாவிதிக்கிறோம், உரையாடுகிறோம். நட்பு வளையத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்னத்தெரியப்போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் எந்த அளவுக்கு பொது வெளியில் சிதறிக்கிடக்கின்றன என்பதை பலரும் அறிவதில்லை. இதை தான் ஸ்டாக்ஸ்கேன் இணைய சேவை அம்பலப்படுத்துகிறது. பேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் அணுகுவது எளிது என்பதையும் புரிய வைக்கிறது.

ஆனால், ஸ்டாக்ஸ்கேன் அத்துமீறி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது பிரமாதமாக எதையுமே செய்யவில்லை. பேஸ்புக் தகவல்களில் பொதுவெளியில் காண கூடியவற்றை அது அடையாளம் காட்டுகிறது அவ்வளவே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த அடையாளம் காட்டுதலையும் பேஸ்புக் வழங்கும் தேடல் வசதி கொண்டே சாத்தியமாக்குகிறது.

அதாவது இந்த தேடலுக்கு ஸ்டாக்ஸ்கேன் தேவை என்றில்லை. 2013 ம் ஆண்டு பேஸ்புக் அறிமுகம் செய்ய கிராப் சர்ச் தேடல் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் இது போன்ற தகவல்களை தேட முடியும். அப்படி தேடக்கூடிய தகவல்களை எல்லாம் ஒரே இடத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாக அணுக்ககூடிய வகையில் ஸ்டாக்ஸ்கேன் அளிக்கிறது என்பதே அதன் சிறப்பு.

நல்லெண்ண தாக்காளர்

பேஸ்புக் பயன்பாட்டின் தனியுரிமை அம்சம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை செய்கிறது. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த Inti De Ceukelaire  எனும் நல்லெண்ண தாக்காளர் இந்த சேவையை உருவாக்கியிருக்கிறார். கிராப் சர்ச் தேடலின் வீச்சும், பிரச்சனையும் பரவலாக அறியப்படாமல் இருப்பதால், சாதாரண இணையவாசிகளும் இதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த சேவையை உருவாக்கியதாக மதர்போர்ட் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

பெரும்பாலான சாமானியர்களுக்கு தாங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்பவை பற்றிய புரிதால் இல்லாத நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பயனாளிகளுக்கு நட்பான இந்த சேவையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராப் சர்ச் அறிமுகமான போது அதன் அந்தரங்க மீறல் தன்மைக்காக பெரும் சர்ச்சை உண்டானது. பின்னர் பேஸ்புக் இந்த தேடல் சேவையை அதிகம் முன்னிறுத்துவதில்லை. மற்ற தேடல் அம்சங்களிலேயே கவனம் செலுத்துகிறது. எனினும் விஷயம் அறிந்தவர்கள் கிராப் சர்ச் தேடலை பயன்படுத்தி தகவல் வேட்டை நடத்திக்கொள்ளலாம். இதை தான் ஸ்டாக்ஸ்கேன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால், இந்த சேவை பேஸ்புக்கின் தனியுரிமை கொள்கையை மீறவில்லை என்றும், பொதுவெளியில் பார்க்க கூடிய, ஆனால் மறைந்திருக்கும் தகவல்களை மட்டுமே காட்டுவதாகவும் தளத்தின் முகப்பு பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, ஒரு பேஸ்புக் பயனாளி தான் பகிரும் தகவல்களை நண்பர்கள் பார்வைக்கு மட்டும் என அமைத்திருந்தால் என்றால் அதற்குள் யாரும் எட்டிப்பார்க்க முடியாது. ஆனால் எப்படி பகிர்ந்து கொள்கிறோம் என அறியாமல் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டவர்களின் தகவலை எல்லோரும் பார்க்க முடியும்.

நீங்களும் உஷார்

நீங்களும் கூட இந்த தளத்தில் உங்கள் பேஸ்புக் முகவரியை டைப் செய்து பார்த்தால், உங்கள் பேஸ்புக் விவரங்களில் எத்தகைய தகவல்கள் மற்றவர் பார்வைக்கு கடை பரப்பி வைக்கப்படுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிக தகவல்கள் இல்லை எனில், நீங்கள் தனியுரிமை அமைப்பை நன்றாக பயன்படுத்துகிறீர்கள் என திருப்தி பட்டுக்கொள்ளலாம். மாறாக, உங்களை திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அல்லது சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல்கள் எல்லாம் தேடலில் கிடைக்க கூடியதாக இருந்தால் உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கான தனியுரிமை பாதுகாப்பு போதுமானதல்ல என உணர வேண்டும்.

உடனடியாக, உங்கள் பேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி அமைப்பை ஆய்வு செய்து, எவற்றை எல்லாம் நண்பர்கள் பார்க்கலாம், எவை எல்லாம் பொது வெளியில் தோன்றலாம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஒவ்வொரு முறை நிலைத்தகவல் பதியும் போது, அல்லது பின்னூட்டம் அளிக்கும் போதும் கூட இதை நினைவில் கொள்வது இன்னும் நல்லது. இதற்கான இணைய முகவரி: https://www.facebook.com/help/443357099140264

இணையதள முகவரி: https://www.stalkscan.com

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளி என்றால் ஸ்டாக்ஸ்கேன் இணையதளம் உங்களை லேசாக திகைப்பில் ஆழ்த்தும். பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு பேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களை பொதுவெளியில் தோன்றும் வித்ததை தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.

இணையதள முகவரி: https://www.stalkscan.com/

  • நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது!

saythanksபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள பேஸ்புக் இந்த நட்பை கொண்டாட உதவும் புதிய வழிகளை உருவாக்கித்தர முயன்று வருவதாகவு குறிப்பிட்டுள்ளது . இப்படி உருவாகி இருக்கும் சமீபத்திய வசதி தான் சே தேங்ஸ்.

இதன் மூலம் நண்பர்களுக்கோ சக ஊழியருக்கோ பேஸ்புக் மூலம் ஒரு தேங்யூ வீடியோவை அனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கலாம். ஒருவர் முக்கியமாக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வீடியோவை உருவாக்கி அனுப்பலாம்.

இந்த வீடியோவை எப்படி உருவாக்க, facebook.com/thanks பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு நன்றி சொல்ல உள்ள பேஸ்புக் நண்பரை தேர்வு செய்தால் உடனே பேஸ்புக்கே உங்கள் டைம்லைனில் இருந்து ஒரு வீடியோவை உருவாக்கித்தரும். அந்த வீடியோவில் உங்கள் நட்பை அடையாளப்படுத்தும் புகைப்படங்களும் பதிவுகளும் இருக்கும். பேஸ்புக் பரிந்துரைக்கும் வீடியோவை உங்கள் விருப்பம் போல திருத்தி அமைக்கலாம். பொருத்தமான தீமை தேர்வு செய்து அதில் இடம் பெறும் புகைப்ப்டங்களையும் பதிவுகளையும் எடிட் செய்யலாம். எல்லாம் தயாரான பிறகு அதனுடன் நன்றி தெரிவிக்கும் வாசகத்தை எழுதி தனிப்பட்ட டச்சுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ உங்கள் டைம்லைனில் தோன்றும் .அதில் உங்கள் நண்பரும் டேக் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் டைம்லைனிலும் தோன்றும்.
அடிப்படையில் , இந்த தேங்க்யூ வீடியோ வசதி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட லுக் பேக் வீடியோ தொகுப்பு வசதியின் இன்னொரு வடிவம் தான் என்று ஒரு கருத்து இருக்கிறது.
டைம்லைனில் தோன்றும் வீடியோ பொதுப்பார்வைக்கு வரும் போது எப்படி தனிப்படதாக இருக்கும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
அதோடு தேங்க்யூ வீடியோ பெற்றவர்கள் பதிலும் தேங்க்யூ வீடியோ அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவார்களா? என்றும் கேட்கப்படுகிறது.

பயனாளிகளுக்கு எப்படியோ பேஸ்புக்கிற்கு இந்த சேவை முக்கியம். சமீபத்தில் வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்புடன் பேஸ்புக் போட்டி போடக்கூடிய அளவுக்கு அதன் வழியே வீடியோக்கள் பகிரப்படுவதாக செய்தி வெளியானது. பேஸ்புக் இந்த நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாம்.
தேங்க்யூ வசதி பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகிறதா என்பதையும் அதைவிட முக்கியமாக ப்யனுள்ளதாக இருக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதிய இடங்களை அறிய

தேங்க்யூ வசதியை தவிர பேஸ்புக் புதிய இடங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியையும் சத்தமில்லாமல் அறிமுகம் செய்திருக்கிறது தெரியுமா?
பேஸ்புக் பிலேசஸ் எனும் இந்த வசதி மூலம் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்ளலாம். பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் சுற்றுப்பார்க்க வேண்டிய இடங்கள் மட்டும் அல்ல, ரெஸ்டார்ண்ட்கள்,ஹோட்டல்கள், பார்கள், சுற்றுலா இடங்கள், பள்ளிகள், கலைக்கூடங்கள் என சகல விதமான இடங்களையும் பரிந்துரைக்கிறது. இவை எல்லாமே பேஸ்புக் வலைப்பின்னலில் பகிரப்படும் தகவல்களின் அடிப்படையில் திரட்டப்பட்டு அவற்றின் லைக் அளவுக்கு ஏற்ப பட்டியலிடப்பட்டவை. இந்த பட்டியலை தாண்டியும் பரிந்துரைகளை பார்க்கலாம். அப்படியே நண்பர்களின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். விரும்பிய நகரை குறிப்பிட்டும் தேடும் வசதியும் பிரதானமாக இருக்கிறது.
நீங்கள் விரும்பும் நாட்டையும் நகரையும் தேர்வு செய்து அங்குள்ள இடங்களை அலசத்துவங்கலாம். நம்முரான சென்னை துவங்கி அநேக உலக நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இடங்களுக்கான பேஸ்புக் கையேடு என்றும் இது வர்ணிக்கப்படுகிறது.
சுற்றுலா செல்வதாக இருந்தாலும் சரி, டின்னருக்கு செல்வதாக இருந்தாலும் சரி அல்லது வீக் எண்டை திட்டமிடுவதாக இருந்தாலும் இந்த சேவையை முயன்று பார்க்கலாம்.

முயன்று பாருங்கள்; https://www.facebook.com/places

பேஸ்புக் பிரைவஸி
பேஸ்புக் தொடர்பான இன்னொரு முக்கிய செய்தி , அதன் பிரைவசி அறிக்கை புதுப்பிக்கப்பட்டு தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக் பிரைபசி கொள்கை தொடர்பாக பல காட்டமான விமர்சனங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இந்த அறிக்கை சிக்கலாக, குழப்பமாக புரியாமல் இருக்கிறது என்பது. இதை சரி செய்யும் வகையில் அறிக்கை அல்லது விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
எல்லோரும் புரிந்து கொள்ளகூடிய வகையில் இது அமைந்திருப்பதாக சொல்லப்படுகிரது. ஆனால் சர்ச்சைக்குறிய பல அம்சங்கள் தொடர்கின்றன. பேஸ்புக் பிரைவசி கொள்கையை நீஙக்ள் சரியாக புரிந்து கொள்ளலாம் ஆனால் உங்களை பிரைவசையை கட்டுப்படுத்த அல்லது உங்கள் கையில் எடுத்துக்கொள்ள அதிகம் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. எதற்கும் படித்துப்பார்த்து உங்கள் பேஸ்புக் உரிமை மற்றும் உரிமையின்மையை தெரிந்து கொள்ளுங்கள்: http://newsroom.fb.com/news/2014/11/updating-our-terms-and-policies-helping-you-understand-how-facebook-works-and-how-to-control-your-information/

நன்றி; விகடன்.காமில் எழுதியது

பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

zuckerberg-640x426மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் ஜர்க்கர்பர்கை ஆய்வுக்குள்ளாக்குவது.

ஜக்கர்பர்க் பற்றி ஆய்வு செய்ய விரும்பினால் என்ன தேவை? அவர் என்ன எல்லாம் சொன்னார் ,சொல்லி வருகிறார் என்று தெரிய வேண்டும் அல்லவா? ஆதை தான் இந்த தளம் செய்கிறது.

பேஸ்புக் நிறுவனர் என்ற முறையில் ஜக்கர்பர்க் இது வரை பேசிய பேச்சுக்கள் , அளித்த பேட்டிகள் வெளியிட்ட செய்தி குறிப்புகள் எல்லாவற்றையும் இந்த தளம் தொகுத்து வைத்திருக்கிறது. இவ்வாறு ஜக்கர்பர்க தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் இந்த தளத்தின் தொகுப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கின் பதிவுகளும் இதில் அடங்கும்.

இவை அனைத்துமே ஜக்கர்பரக் பொது மேடைகளில் பகிர்ந்து கொண்டவை. இணையத்தில் பொதுவெளியில் இருப்பவை. இவை அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தேடப்படக்கூடிய வகையில் இந்த தளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. முழு அள்விலான தொகுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது , ஜக்கர்பர்கின் பேட்டி என்றால் அதற்கான முழு வரி வடிவம், பேட்டி என்றால் எப்போது பேசினார், என்ன குறிப்பிட்டார் என்பது போன்ற துணை விவரங்கள் அனைத்தும் இருக்கின்றன. குறிப்பிட்ட பேட்டி அல்லது பேச்சின் நோக்கத்தை புரிந்து கொள்ள கூடிய மெட்டா டேட்டா எனும் மேலதிக விவரங்களும் தொகுப்பில் உள்ளன.

ஜக்கரபர்கை ஆய்வுக்கு உட்படுத்த விரும்புகிறவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் இந்த தளம் வழங்கும். தனியே கோரிக்கை சமர்பித்து இந்த வசதியை பயன்படுத்த வேண்டும்.

ஜக்கர்பர்க் என்ன ஆய்வு செய்யப்படும் அளவுக்கு பெரிய நபரா என்று கேட்கலாம். ஜக்கர்பர்க் பெரிய நபரா ? என்பது வேறு விஷயம். ஆனால் பேஸ்புக் பெரிய தளம் !. அந்த காரணத்தினால் ஜக்கர்பர்க் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய நபர். அப்படி தான் மைக்கேல் ஜிம்மர் சொல்கிறார்.

யார் இந்த ஜிம்மர்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் இன்பர்மேஷன் ஸ்டடீஸ் உதவி பேராசிரியர் ஜிம்மர். இவர் தான் ஜக்கர்பர்க் பைல்ஸ் இணையதளத்தை அமைத்திருக்கிறார். பேஸ்புக் நிறுவனரும்,சி.இ.ஓவுமானஜக்கர்பர்கின் அனைத்து பொது கருத்துக்களையும் தேடக்கூடிய டிஜிட்டல் கோப்புகளாக இந்த தளத்தை இவர் அமைத்திருப்பதாக பாஸ்ட் கம்பெனி (http://www.fastcompany.com/3020831/most-creative-people/the-man-turning-the-privacy-tables-on-mark-zuckerberg ) வர்ணித்துள்ளது.

பேஸ்புக்கிறகு எதிராக அந்தரங்க மேஜையை ஜிம்மர் திருப்பி போட்டிருப்பதாகவும் இந்த இதழ் பாராட்டியுள்ளது.

எனக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
எனக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
குடியிருக்கிற வீட்டை இடிப்பது என்றால் என்ன என்று சேட்டுக்கு காட்டுவோம் ‘ என்பது போல நாயகன் படத்தில் வேலுநாயக்கர் பேசும் வசனம் வரும் அல்லவா? அதே போல தான்,

’உங்கள் தகவல்கள் எல்லாம் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை ஜக்கர்பர்கிற்கு காட்ட விரும்புவதாக ஜிம்மர் பாஸ்ட் கம்பெனிக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.’ நீங்கள் நினைத்து பகிர்ந்து கொண்டதற்கு மாறாக தகவல்கள் பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதையும் அவருக்கு புரிய வைத்தால் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

விஷயம் இது தான், பேஸ்புக்கில் நாம் எல்லோரும் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். அந்த தகவல் சுரங்கத்தை வைத்து கொண்டு பேஸ்புக் கோடிகளை சம்பாதிக்கிறது. பயனாளிகளின் தகவல்களை தேடி ரகம் பிரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது. இதில் பயனாளிகளின் அந்தரங்கம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது தான் 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனை.

பேஸ்புக் பயனாளிகள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட விஷயங்கள் பேஸ்புக்கிறகு சொந்தமாக இருக்கிறது. அந்த தகவல்களை தோண்டி எடுத்து , ஆய்வு செய்து பயன்படுத்தி கொள்கிறது பேஸ்புக்.

இதையே பேஸ்புக் நிறுவனருக்கு செய்து பார்ப்போமே என்கிறார் ஜிம்மர். இது ஏதோ விளையாட்டுத்தனமான நோக்கமோ அல்லது ஜக்கர்பர்க் மீது பொறாமை கொண்ட செயலோ அல்ல. இந்த காலத்திற்கான தார்மீக கேள்வி.

பேஸ்புக் வசம் பயனாளிகளின் அந்தரங்க தகவல்கள் குவிந்து கொண்டே வரும் நிலையில் அவற்றை பேஸ்புக் எப்படி கையாள்கிறது என்பது எல்லோருக்கும் முக்கியமானதாகிறது. அதை தெரிந்து கொள்ள ஜக்கர்பர்கிடம் நேரடியாக கேள்வி கேட்டு பதில் பெறுவது சாத்தியமல்ல. அவர் சொல்லும் பதில் திருப்திகரமாக இருக்க போவதில்லை. தவிர, அவர் சொல்வது தான் உண்மை என எப்படி நம்புவது.

பேஸ்புக் நோக்கில் தான் அவர் பதில் சொல்லப்போகிறார். பயனாளிகள் அந்தரங்கம் பற்றி அவருக்கு என்ன கவலை?

எனவே தான் பேஸ்புக் நிறுவனர் பொது வெளிகளில் என்ன சொல்கிறார் என்பதை கண் கொத்தி பாம்பாக கவனித்து அதன் உள்ளர்த்தங்களை தேடி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய ஆய்வுக்கு உதவி செய்வது தான் ஜக்கர்பர்க் பைல்ஸ் தளத்தின் நோக்கம் என்கிறார் ஜிம்மர்.

பேஸ்புக் நிறுவனரின் உரையாடல்களில் அந்தரங்கம் என்ற வார்த்தைக்கு பதிலாக, கட்டுப்பாடு மற்றும் அணுக முடிவது போன்ற வார்த்தைகளே அதிகம் இடம் பெறுவதை சுட்டிக்காட்டும் ஜிம்மர் , பேஸ்புக் நிறுவன ஊழியர்களிடம் பேசும் போதும் அவர்கள் மிகவும் கவனமாக அந்தரங்கம் என்ற வார்த்தையை தவிர்ப்பதாகவும் சொல்கிறார்.

பேஸ்புக் பகிர்வுகள் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அது தனிமனிதர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை புரிந்து கொள்வது அவசியம்தானே.

பி.கு: இந்த பதிவு பற்றி கொஞ்சம் தன்னிலை விளக்கம்
; கொஞ்சம் தற்பெருமை என்றும் வைத்து கொள்ளுங்களேன். மேக் யூஸ் ஆப் தளத்தில் இன்றைய இனையதளங்கள் பகுதியில் ஜக்கர்பர்க் பைல்ஸ் பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பார்க்கும் போது இதுவும் வழக்கமான இணையதளம் போல தோன்றும். அதாவது இந்த தளத்தின் உண்மையான நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து சட்டென விளங்கவில்லை. ஆனால் , ஜக்கர்பர்க் பைல்ஸ் தளத்திற்கு போய் பார்த்து விட்டு ,அதில் இருந்து பாஸ்ட் கம்பெனி செய்தி மற்றும் அர்ஸ் டெக்னிகா செய்தி இணைப்புகளை படிக்கும் போது தான் இந்த தளத்தின் பரிமானம் புரிகிறது. அதை தான் பதிவாக்கி இருக்கிறேன்.

பி கு.2; பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பகிரப்படும் தகவல்களின் அந்தரங்கம் நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை என்பதால் , இந்த பதிவை தயவு செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு பரிந்துரையுங்கள்.

பி.கு 3: நம்மூரில் உள்ள ஆய்வு மாணவர்கள் பேஸ்புக் பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொள்ளலாம். இங்கு பயனாளிகளும் அதிகம். பாதிப்பும் அதிகம்.

பி.கு4: விஸ்கான்சின் பல்கலையின் ஆதரவுடன் இந்த தளம் செய்லப்டுகிறது. தகவல்கள் டிஜிட்டல் காமென்ஸ் முறையில் பகிரப்படுகிறது.

பி.கு5 ; பேஸ்புக் தொடர்பாக இது எனது 50 வது பதிவு.