உக்ரைன் நெருக்கடியும், தேடியந்திர குழப்பமும்!

weinberg-cnbcஉக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், டக்டக்கோ நிறுவனர் என்ற முறையில் இத்தகைய எதிர்வினையை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே அதன் பயனாளிகள் கருதுவதற்கு இடம் இருக்கிறது. எப்படி இருந்தாலும், உக்ரைன் நெருக்கடி தொடர்பான நடவடிக்கையால் டக்டக்கோ தேடியந்திரம் சர்ச்சையில் சிக்கி இருப்பது இணைய தணிக்கை தொடர்பான விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த பிரச்சனையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். டக்டக்கோ, கூகுளுக்கு மாற்றாக கருதப்படும் தேடியந்திரங்களில் முதன்மையானது. கூகுள் போல பயனாளிகள் தனிப்பட்ட தகவல்களை விளம்பர நோக்கில் அறுவடை செய்யாமல் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் தேடல் சேவையை வழங்குவதாலேயே இந்த முதன்மை அந்தஸ்து கொண்டதாக கருதப்படுகிறது.

டக்டக்கோ தவிர இன்னும் பிற தனியுரிமை தேடியந்திரங்கள் இருந்தாலும், இந்த கருத்தாக்கத்தில் கூகுளை எதிர்கொள்ளலாம் என்பதை முதலில் உணர்த்திய தேடியந்திரமாக டக்டக்கோ அமைகிறது.

டக்டக்கோ பற்றி நிறைய கூறலாம் என்றாலும், பயனாளிகளின் தேடல் தொடர்பான தகவல்களை சேகரிக்காமல், சேமிக்காமல் இருக்கும் தனியுரிமை தேடியந்திரம் என்று புரிந்து கொள்ளலாம்.

கூகுல் தேடியந்திர பரப்பில் முன்னணியில் இருந்தாலும், தனியுரிமை நோக்கில் அதை டக்டக்கோ எதிர்கொண்டு வருகிறது. தனியுரிமையை முக்கியமாக கருதுபவர்கள் பலரும் டக்டக்கோவை பயன்படுத்தி வருகின்றனர். தேடலில் தனியுரிமை வேண்டும் என்றால், டக்டக்கோவிற்கு மாறுங்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

( கட்டுரையாளரான நானே கூட டக்டக்கோ ஆதரவாளர் தான்).

இப்போது பிரச்சனைக்கு வருவோம். உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போருக்கான புவி அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, மனிதநேய அடிப்படையில் பார்த்தால், ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கலும் இடர்களும் நெஞ்சம் பதைபதைக்க வைப்பவை தான்.

எனவே தான் பலரும் ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்துவதன் மூலம் அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆப்பிள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. சர்ச்சைக்குறிய பேஸ்புக்கும் ( மெட்டா) கூட கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இந்த வரிசையில், டக்டக்கோ தேடியந்திரம் ரஷ்யாவின் பிழை செய்திகள் தொடர்பான தேடல் முடிவுகளை பின்னுக்குத்தள்ளுவதாக அறிவித்துள்ளது. டக்டக்கோ நிறுவனர் வெயின்பர்கே இந்த தகவலை டிவிட்டரில் அறிவித்தார்.

மற்ற பலரையும் போலவே உக்ரைன் மீதான ரஷ்யா படையெப்பால் மிகவும் நொந்து போயிருக்கிறேன் என்று கூறியவர், உக்ரைனுடன் நிற்பதாக (#StandWithUkraine️ ) கூறியிருந்தார்.

மேலும், ரஷ்ய பிழை தகவல்களை கொண்ட இணையதளங்களை தேடல் பட்டியலில் பின்னுக்குத்தள்ளும் புதிய தேடல் அல்கோரிதம் அப்டேட்டை அறிமுகம் செய்வதாகவும் கூறியிருந்தார்.

இதை பாராட்டத்தக்க நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், உக்ரைன் போர் இணைய பரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சைபர் தாக்குதல்கள், ஹேக்கிங் போன்றவை ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றால் இன்னொரு பக்கம், தகவல் யுத்தமும் நடைபெற்று வருகிறது. போர் பாதிப்புகளை வெளிக்கொணர இணையம் பயன்படுத்தப்படும் நிலையில், இதை பொய் பிரச்சாரம் என இதை முறியடிக்கும் விதமாக ரஷ்ய தரப்பில் பிழை செய்திகள் பரப்ப படுவதாகவும் கருதப்படுகிறது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்ய இணைய விஷமிகள் பெருமளவில் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுவதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், ரஷ்யா இணையத்தில் பிழை செய்திகளை பரப்புவதில் தீவிரமாக இருப்பதை இது உணர்த்துகிறது.

பொதுவாகவே இணையத்தில் பொய்ச்செய்திகளையும், பிழை செய்திகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவதால், ரஷ்ய பிரச்சாரம் எடுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக, டக்டக்கோ ரஷ்ய பிழை செய்திகளை பின்னுக்குத்தள்ளுவதாக அறிவித்தது. இதனால், உக்ரைன் பக்கம் அல்லது உண்மையின் பக்கம் நிற்க முடியும் என டக்டக்கோ நிறுவனர் நினைத்திருக்கலாம்.

வழக்கமாக டக்டக்கோ அறிவிப்புகள் அதன் பயனாளிகள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு மாறாக, இந்த அறிவிப்பு அதன் ஆதார பயனாளிகளை அதிருப்தியில் ஆழ்த்தி எதிர்ப்பு தெரிவிக்க வைத்துள்ளது. எதிர்ப்புக்கு காரணம், டக்டக்கோவின் இந்த நடவடிக்கை இணைய தணிக்கயாக பார்க்கப்படுவது தான்.

தேடியந்திரத்தின் பணி நடுநிலையாக தேடல் முடிவுகளை அளிப்பது எனும் போது, ஒரு பக்கத்திற்கு சார்பாக நிலைப்பாடு எடுத்து, தேடல் முடிவுகளை தணிக்கை செய்வது ஏற்புடையது அல்ல என பலரும் கருதுகின்றனர்.

அதைவிட முக்கியமாக, கூகுள் தேடல் முடிவுகளை பயனர்களுக்கு ஏற்பட வடிகட்டுவதாக (“filter bubble.” ) டக்டக்கோ குற்றம் சாட்டி தனது முடிவுகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதாக கூறி வரும் நிலையில், இந்த நடவடிக்கையும் ஒரு விதமான வடிகட்டல் தானே என்றும் பயனர்கள் ஆவேசமாக கேட்டுள்ளனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.