Tag Archives: scan

ஐரோப்பாவுக்கு ஒரு இணைய உலா!

lead.c2e3a89d927140b5ac304bf7bc2e45a9-800x420ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி சார்ந்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். ஆனால் அப்போதும் கூட பல நாடுகளை தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்திற்கு சில இடங்களை பார்க்கலாம் அவ்வளவு தான். ஆனால் இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

நிற்க, ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்வது சாத்தியமோ இல்லையோ, நீங்கள் விரும்பினால் ஐரோப்பிய கலாச்சாரம் மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தில் மூழ்கி மகிழலாம் தெரியுமா? யூரோபியானா இணையதளம் (http://www.europeana.eu/portal/en# ) இதை சாத்தியமாக்கிறது. ஒரு அரை மணி நேரத்தை இந்த தளத்தில் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் கலாச்சார செழுமை முதல் பேஷன் பெருமைகள் வரை பலவற்றை ஒளிப்படங்களாக பார்த்து மகிழலாம், இசைக்கோர்வைகளாக கேட்டு ரசிக்கலாம். கலைப்பொருட்களாக பார்த்து வியக்கலாம்.

இணையம் ஒரு அற்புதம் என்பதை பலமுறை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில அரிய தருணங்களில் இந்த அற்புதத்தை நீங்களே உணர்ந்திருக்கலாம். யூரோபியானா இணையதளத்தில் நுழைந்ததுமே அத்தகைய தருணத்தை உணரத்துவங்கலாம். இந்த உணர்தலை ஒளிப்படங்களில் இருந்தே துவங்கலாம். ஏனெனில், மிகவும் அண்மையில் தான் இந்த பகுதி புதிய வசதியாக அறிமுகம் ஆகியிருக்கிறது. ’யூரோபியானா போட்டோகிராபி’ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பகுதி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று ஒளிப்படங்களை கொண்டிருக்கிறது. 34 ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் போன்ற அமைப்புகள் பங்களிப்புடன் இந்த புகைப்பட தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முகப்பு பக்கத்தில், ஐரோப்பிய கலை, ஐரோப்பிய பேஷன், ஐரோப்பிய இசை என வரிசையாக உள்ள பட்டியலில் ஐரோப்பிய ஒளிப்படங்கள் எனும் தலைப்பு மூலம் இந்த படங்களை பார்த்து ரசிக்கலாம். ஒளிப்படக்கலையில் விஷயம் தெரிந்தவர்கள் எனில், ஐரோப்பாவின் புகழ் பெற்ற ஒளிப்பட மேதைகளின் பெயரை தட்டச்சு செய்து அவர்களின் ஒளிப்படைப்புகளை தேடலாம். குறிப்பிட்ட தலைப்புகள் சார்ந்தும் ஒளிப்படங்களை அணுகலாம்.

சும்மா சொல்லக்கூடாது, ஐரோப்பிய ஒளிப்படக்கலையின் முதல் 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இந்தப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம். எதை பார்ப்பது, எப்படி பார்ப்பது என திகைத்து நிற்பவர்களுக்கு வழி காட்டும் வகையில் இந்த தளமே இணைய கண்காட்சிகளாக வழிகாட்டுகிறது. உதாரணத்திற்கு, ‘இயந்திரங்களின் யுகத்தில் எடுக்கப்பட்ட தொழில்கூட படங்கள் ’ கண்காட்சி மூலம் அந்த கால தொழிற்சாலைகள், இயந்திரங்கள், தொழிலாலர்கள் உள்ளிட்டவற்றை ஒளிப்படங்களாக பார்த்துபடி பின்னோக்கிச்செல்லலாம். இதே போல குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் கலைஞர்கள் சார்ந்த ஒளிப்படங்களையும் காணலாம்.

012uP2P1sayKஅந்த கால ஐரோப்பா எப்படி இருந்தது என பார்க்க விரும்பினாலும் சரி, கால வெள்ளத்தில் ஐரோப்பா எப்படி மாறி வந்திருக்கிறது என அறிய விரும்பினாலும் சரி, ஒளிப்படங்கள் வாயிலாக அந்த அனுபவத்தை பெறலாம். அவரவர் விருப்பம் அல்லது தேடலுக்கு ஏற்ப மிலன் அல்லது லண்டன் என நகரங்களின் பெயரை தட்டச்சு செய்து ஒளிப்படங்களை தேடலாம். ஐரோப்பிய பேஷனில் ஏற்பட்ட மாற்றங்கள், கலாச்சார சுவடுகள் , மனிதர்கள் என பலவிதங்களில் வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கலாம். உதாரணத்திற்கு நடன அறைகளில் அணியப்பட்ட ஆடைகளை சித்தரிக்கும் ஒளிப்படங்களை பார்த்து ரசிக்கலாம். அதே போல பிரபலங்களின் பேஷனை பார்க்கலாம்.

ஒளிப்படங்களை பயன்படுத்துவது தொடர்பான காப்புரிமை சார்ந்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள், காலவரிசை என பலவிதங்களில் தேடலை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட ஒளிப்படம் கவனத்தை ஈர்த்தால் அந்த படம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அதை பகிர்ந்து கொண்டுள்ள அருங்காட்சியக அமைப்பு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒளிப்படங்களின் தேடல் இந்த தளத்தின் ஒரு அம்சம் தான். இதே போல ஐரோப்பா தொடர்பான பலவிஷயங்களை இந்த தளத்தில் தேடலாம். குறிப்பிட்ட நாடு தொடர்பாக அறிய விரும்பினால், அந்த நாடு தொடர்பாக உள்ள ஒளிப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் பட்டியலாக தோன்றுகிறது. காணொலிகள், ஒலிக்கோப்புகள், புத்தகங்கள், கலை வடிவங்கள் என பலவகையான தகவல்கள் அணிவகுக்கின்றன. தேவை எனில், தேடலில் ஈடுபடும் போது எந்த வகையான தகவல் வேண்டும் என தேர்வு செய்து கொள்ளலாம். ஒளிப்படங்களை தேர்வு செய்தால் படங்கள் மட்டும் வரும். இசை அல்லது கலையை தேர்வு செய்தால் தொடர்புடைய தகவல்களை காணலாம்.

சோவியத் யூனியன் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட லெனினின் அரிய ஒளிப்படங்களை காணலாம். அதே போல உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ஒளிப்படங்களை காணலாம். லண்டன் நகர தெருக்களின் உலாவலாம். மிலன் பேஷன் போக்குகளை கண்டு வியக்கலாம்.

இப்படி அநேகமாக ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அருங்காட்சியகங்களில் பொக்கிஷமாக பாதுக்காக்கப்படும் கலைப்பொருட்கள், காணொலிகள், ஒளிப்படங்கள் அனைத்தையும் இந்த தளம் மூலம் அணுகலாம். இந்த தளத்தை பயன்படுத்த வரலாற்று ஆர்வம் கொண்டவராக அல்லது ஆய்வாளராக இருக்க வேண்டும் என்றில்லை, சாமானியர்களையும் எளிதில் கவரக்கூடிய அம்சங்களை இந்த தளத்தில் காணலாம். அதற்கேற்ப கலாச்சார ஆர்வலர்களே வாருங்கள் என்று தான் இந்த இணையதளம் அழைப்பு விடுக்கிறது. ஆய்வு பணிக்காக வந்திருந்தாலும் சரி, அல்லது அலுப்பை போக்கி கொள்ள வந்திருந்தாலும் சரி, உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது சில எங்களிடம் நிச்சயம் இருக்கும் என்றும் இந்த தளம் பெருமிதம் கொள்கிறது.

ஐரோப்பிய பாரம்பரியம் தொடர்பான தரவுகளை இணையம் மூலம் அனைவருக்கும் அளிக்கும் நோக்கில் யூரோபியானா அமைப்பு இந்த தளத்தை நடத்தி வருகிறது. பல ஐரோப்பிய அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய அறக்கட்டளை சார்பில் இந்த தளம் செயல்பட்டு வருகிறது. கலைப்படைப்புகளும், ஒளிப்படங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பகிரப்படும் போது என்னவெல்லாம் சாத்தியம் என்பதையும், கூட்டு முயற்சியின் அருமையையும் உணர்த்தும் வகையிலும் இந்த தளம் அமைந்துள்ளது.

யூரோபியானா திட்டம் பற்றிய அறிமுகம் : http://pro.europeana.eu/about-us/our-vision

-நன்றி; தமிழ் இந்து , இளமை புதுமை பகுதியில் எழுதியது.

பேஸ்புக்கில் நீங்கள் கண்காணிக்கப்படுவது தெரியுமா?

facebook-change-visibilityநீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளி என்றால் ஸ்டாக்ஸ்கேன் இணையதளம் உங்களை லேசாக திகைப்பில் ஆழ்த்தும். பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு பேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களை பொதுவெளியில் தோன்றும் வித்ததை தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.

ஸ்டாக்ஸ்கேன் தளம் அப்படி என்ன செய்கிறது என்றால், உங்கள் பேஸ்புக் பக்கத்தை வேறு யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதை புரிய வைக்கிறது. என் பேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் அதுவல்ல, ஒருவரது பேஸ்புக் பயன்பாட்டை இன்னொருவரால் எட்டிப்பார்க்க முடியும் என்பதையே இந்த இணையதளம் உணர்த்துகிறது.

நட்பு வளையம்

பேஸ்புக்கில் நட்பு வளையத்தில் இருப்பவர்கள் தானே நாம் பகிரும் தகவல்களை பார்க்க முடியும், அப்படியிருக்க யாரோ ஒருவரால் எப்படி நம் பேஸ்புக் செயல்பாட்டை அறிய முடியும் என நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள ஸ்டாக்ஸ்கேன் தளத்தை ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள். யாரோ ஒரு பேஸ்புக் பயனாளி தொடர்பான எத்தனை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்ற வியப்பு ஏற்படும். இதற்கு, குறிப்பிட்ட பயனாளியின் பேஸ்புக் முகவரியை மட்டும் இருந்தால் போதுமானது.

ஸ்டாக்ஸ்கேன் தளத்தில் பேஸ்புக் பயனாளி முகவரியை டைப் செய்து தேடினால், அவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட தகவல்களை எவை எல்லாம் பொதுவெளியில் இருக்கின்றன என்பதை இந்த தளம் காண்பிக்கிறது. பொதுவெளியில் இருக்கிறது என்றால், அந்த தகவல்கள் வேறு யாரால் வேண்டுமானாலும் பார்க்கப்படலாம் என பொருள்.

எந்த வகையான விவரங்கள் எல்லாம் தோன்ற வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஒருவரது ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள், காணொலிகள், கலந்து கொண்ட நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். ஒருவருடைய வயது, உறவு நிலை, பாலினம் போன்ற தகவல்கள், அவர் மற்ற ஒளிப்படங்களில் டேக் செய்யப்பட்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் ஆகியவற்றையும் அறியலாம். அதே போல ஒருவர் இதற்கு முன்னர் எந்த படங்கள் அல்லது விஷயங்களை எல்லாம் லைக் செய்திருக்கிறார், யாருடைய பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டம் அளித்திருக்கிறார், எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருக்கிறார், உறவினர்கள் யார், உடன் பணியாற்றியவர்கள் யார்?, எந்த குழுக்களில் எல்லாம் உறுப்பினராக உள்ளார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் அறிய முடியும்.

பேஸ்புக் தேடல்

பேஸ்புக் உறுப்புனர் முகவரியை சமர்பித்ததுமே, அந்த முகவரி தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திக்காட்டுகிறது. ஒவ்வொரு வகையாக தேர்வு செய்து ஆய்வு செய்துப்பார்க்கலாம்.

பொதுவாக பேஸ்புக்கை நண்பர்களும், நண்பர்களின் நண்பர்கள் சூழ்ந்த அறையாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்த உணர்வுடன் தான் தகவல்களையும், ஒளிப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். விவாவிதிக்கிறோம், உரையாடுகிறோம். நட்பு வளையத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு என்னத்தெரியப்போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், பேஸ்புக்கில் பகிரும் தகவல்கள் எந்த அளவுக்கு பொது வெளியில் சிதறிக்கிடக்கின்றன என்பதை பலரும் அறிவதில்லை. இதை தான் ஸ்டாக்ஸ்கேன் இணைய சேவை அம்பலப்படுத்துகிறது. பேஸ்புக் தகவல்களை மற்றவர்கள் அணுகுவது எளிது என்பதையும் புரிய வைக்கிறது.

ஆனால், ஸ்டாக்ஸ்கேன் அத்துமீறி எதையும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது பிரமாதமாக எதையுமே செய்யவில்லை. பேஸ்புக் தகவல்களில் பொதுவெளியில் காண கூடியவற்றை அது அடையாளம் காட்டுகிறது அவ்வளவே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த அடையாளம் காட்டுதலையும் பேஸ்புக் வழங்கும் தேடல் வசதி கொண்டே சாத்தியமாக்குகிறது.

அதாவது இந்த தேடலுக்கு ஸ்டாக்ஸ்கேன் தேவை என்றில்லை. 2013 ம் ஆண்டு பேஸ்புக் அறிமுகம் செய்ய கிராப் சர்ச் தேடல் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் இது போன்ற தகவல்களை தேட முடியும். அப்படி தேடக்கூடிய தகவல்களை எல்லாம் ஒரே இடத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் எளிதாக அணுக்ககூடிய வகையில் ஸ்டாக்ஸ்கேன் அளிக்கிறது என்பதே அதன் சிறப்பு.

நல்லெண்ண தாக்காளர்

பேஸ்புக் பயன்பாட்டின் தனியுரிமை அம்சம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை செய்கிறது. பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த Inti De Ceukelaire  எனும் நல்லெண்ண தாக்காளர் இந்த சேவையை உருவாக்கியிருக்கிறார். கிராப் சர்ச் தேடலின் வீச்சும், பிரச்சனையும் பரவலாக அறியப்படாமல் இருப்பதால், சாதாரண இணையவாசிகளும் இதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த சேவையை உருவாக்கியதாக மதர்போர்ட் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

பெரும்பாலான சாமானியர்களுக்கு தாங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்பவை பற்றிய புரிதால் இல்லாத நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பயனாளிகளுக்கு நட்பான இந்த சேவையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராப் சர்ச் அறிமுகமான போது அதன் அந்தரங்க மீறல் தன்மைக்காக பெரும் சர்ச்சை உண்டானது. பின்னர் பேஸ்புக் இந்த தேடல் சேவையை அதிகம் முன்னிறுத்துவதில்லை. மற்ற தேடல் அம்சங்களிலேயே கவனம் செலுத்துகிறது. எனினும் விஷயம் அறிந்தவர்கள் கிராப் சர்ச் தேடலை பயன்படுத்தி தகவல் வேட்டை நடத்திக்கொள்ளலாம். இதை தான் ஸ்டாக்ஸ்கேன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால், இந்த சேவை பேஸ்புக்கின் தனியுரிமை கொள்கையை மீறவில்லை என்றும், பொதுவெளியில் பார்க்க கூடிய, ஆனால் மறைந்திருக்கும் தகவல்களை மட்டுமே காட்டுவதாகவும் தளத்தின் முகப்பு பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, ஒரு பேஸ்புக் பயனாளி தான் பகிரும் தகவல்களை நண்பர்கள் பார்வைக்கு மட்டும் என அமைத்திருந்தால் என்றால் அதற்குள் யாரும் எட்டிப்பார்க்க முடியாது. ஆனால் எப்படி பகிர்ந்து கொள்கிறோம் என அறியாமல் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டவர்களின் தகவலை எல்லோரும் பார்க்க முடியும்.

நீங்களும் உஷார்

நீங்களும் கூட இந்த தளத்தில் உங்கள் பேஸ்புக் முகவரியை டைப் செய்து பார்த்தால், உங்கள் பேஸ்புக் விவரங்களில் எத்தகைய தகவல்கள் மற்றவர் பார்வைக்கு கடை பரப்பி வைக்கப்படுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிக தகவல்கள் இல்லை எனில், நீங்கள் தனியுரிமை அமைப்பை நன்றாக பயன்படுத்துகிறீர்கள் என திருப்தி பட்டுக்கொள்ளலாம். மாறாக, உங்களை திகைப்பில் ஆழ்த்தக்கூடிய அல்லது சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய தகவல்கள் எல்லாம் தேடலில் கிடைக்க கூடியதாக இருந்தால் உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கான தனியுரிமை பாதுகாப்பு போதுமானதல்ல என உணர வேண்டும்.

உடனடியாக, உங்கள் பேஸ்புக் பக்கத்தில் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள பிரைவசி அமைப்பை ஆய்வு செய்து, எவற்றை எல்லாம் நண்பர்கள் பார்க்கலாம், எவை எல்லாம் பொது வெளியில் தோன்றலாம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஒவ்வொரு முறை நிலைத்தகவல் பதியும் போது, அல்லது பின்னூட்டம் அளிக்கும் போதும் கூட இதை நினைவில் கொள்வது இன்னும் நல்லது. இதற்கான இணைய முகவரி: https://www.facebook.com/help/443357099140264

இணையதள முகவரி: https://www.stalkscan.com

நீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளி என்றால் ஸ்டாக்ஸ்கேன் இணையதளம் உங்களை லேசாக திகைப்பில் ஆழ்த்தும். பேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு பேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களை பொதுவெளியில் தோன்றும் வித்ததை தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.

இணையதள முகவரி: https://www.stalkscan.com/

  • நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது!

இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்!

best-email-tricks-you-arent-using-canned-emailsபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலக தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. பலர் இமெயிலிலேயே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடும் நிலையும் இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக இமெயில்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில:

* உடனடி மெயில் வாசகங்கள்

இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ’கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/# ) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இமெயிலுக்காக தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கலாம். எப்படி என்றால், எப்போதெல்லாம் வழக்கமான பதில்களை இமெயிலில் அனுப்ப நேருகிறதோ அப்போது இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, இதில் உள்ள வாசகங்களை அப்படியே நகலெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இமெயில்களை அனுப்பும் போது மெயிலின் உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். எனவே இதற்காக நேரம் ஒதுக்கி தனி கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி செய்ய வேண்டும் என்றில்லை. சில நேரங்களில் மிகவும் சம்பிரதாயமான பதிலை அனுப்பினால் போதும். இன்னும் சில நேரங்களில் வழக்கமான வாசகங்களை டைப் செய்தால் போதும். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். இது போன்ற நேரங்களில் ஒரே விதமான மெயிலை மீண்டும் டைப் செய்வது நேரத்தை வீணாக்கும் என்பதோடு, அலுப்பாகவும் அமையும்.
இந்த பிரச்சனைக்கான அழகான தீர்வாக தான் கேன்ட் மெயில் அமைகிறது. வழக்கமாக எதிர்கொள்ளக்கூடிய தருணங்களுக்கான மெயில் வாசகங்கள் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பிரச்சனைக்காக மன்னிப்பு கோருவது, சேவையை ரத்து செய்து பணம் திரும்ப கோருவது, முந்தைய மெயிலுக்கு நினைவூட்டல் அனுப்புவது, மன்னிக்கவும், விருப்பமில்லை என சொல்வது என வரிசையாக பல தருணங்களான ரெடிமேட் மெயில் வாசகங்களை இந்த தளத்தில் பார்க்கலாம். எது தேவை என தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லது ஒரு சில வார்த்தைகளை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் அமைந்திருப்பது மட்டுமே ஒரே குறை!
best-email-tricks-you-arent-using-thisemailxyz
* இமெயில் வடிவங்கள்

கேன்ட் மெயில் தளம் போலவே, ’காண்டாக்ட்வலி டெம்பிளேட்ஸ்’ (http://templates.contactually.com/ ) பொருத்தமான இமெயில் உள்ளட்டக்கத்தை தேர்வு செய்வதற்கான தளம் என்றாலும் அதைவிட மேம்பட்ட சேவை இது. சூழ்நிலைக்கு ஏற்ற மெயில்களை இதில் நாமாக உருவாக்கி கொள்ளலாம். இதற்கென சிறிய விண்ணப்ப படிவம் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இமெயில் அனுப்புவது யாருக்கு, அதன் நோக்க என்ன எனும் கேள்விகளுக்கான பதில்களை தேர்வு செய்தால் போதும் அதற்கேற்ற பொருத்தமான மெயில் மாதிரியை உருவாக்கித்தருகிறது.

* இணையதளமாகும் இமெயில்

உங்கள் இமெயிலை ஒரு இணையதள பக்கமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது திஸ் இமெயில் இணையதளம். ( http://www.thisemail.xyz/). உங்களுக்கு வரும் இமெயில்களில் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றும் போது, இந்த சேவை கைகொடுக்கும். மெயிலை பகிர்ந்து கொள்ள எளிய வழி அதை அப்படியே பார்வேர்டு செய்வது தானே என நினைக்கலாம். ஆனால் இப்படி செய்வதன் மூலம் உங்கள் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பலருக்கு அனுப்ப விரும்பினால் சிக்கல் தான். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் பகிர விரும்பும் மெயிலை இந்த தளத்திற்கு பார்வேர்டு செய்தால், அந்த மெயிலை ஒரு இணைய பக்கமாக மாற்றி, அதற்கென ஒரு இணைய முகவரியையும் உருவாக்கித்தருகிறது. இந்த இணைய முகவரியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் போதும். உறுப்பினராக பதிவு செய்து கொள்ளாமலேயே எளிதாக பயன்படுத்தக்கூடிய சேவை இது!

* இமெயில் பாதுகாப்பு!

பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள சேவைகளில் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் தேவை ஏற்படும் போது நேரடியாக முகவரியை டைப் செய்யாமல் ஸ்கிரிம் ( http://scr.im/) தளம் வழியே அதை செய்வது நல்லது. ஏனெனில் இணையத்தில் பொது வெளியில் பகிரப்படும் இமெயில் முகவரிகளை அறுவடை செய்வதற்கு என்றே விளம்பர நிறுவனங்கள் பாட்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. சமூக ஊடகங்களில் மெயில் முகவரிகளை வெளியிடும் போது இந்த பாட்கள் அவற்றை ஸ்கேன் செய்து சேகரிக்கின்றன. இதனால் ஸ்பேம் மெயில் தொல்லை அதிகமாகலாம். இதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஸ்கிரிம், இமெயில் முகவரியை பாட்கள் ஸ்கேன் செய்ய முடியாத வகையில் பாதுகாப்பாக மாற்றித்தருகிறது.

* இமெயில் சுருக்கம்

பை.சென்டன்சஸ் ( http://five.sentenc.es/) தளம் இமெயில் பயன்பாட்டில் நேரடியாக உதவக்கூடிய சேவை இல்லை. ஆனால் இமெயில் பயன்பாட்டில் நினைவு கொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையை இந்த தளம் வழங்குகிறது. இமெயிலுக்கு என அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கும் வகையில், ஐந்து வரிகளில் எல்லா மெயில்களையும் முடித்துக்கொள்ள்வும் என்பது தான் அந்த ஆலோசனை.
இமெயிலை அனுப்பவும், பதில் அளிக்கவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பது பிரச்சனை என குறிப்பிடும் இந்த தளம் இதற்கான தீர்வு, குறுஞ்செய்திகள் போல இமெயில் பதில்களுக்கும் ஒரு வரம்பு தேவை என வலியுறுத்துகிறது. இதற்காக, எல்லா மெயில்களுக்கும் ஐந்து வரிகள் அல்லது அதற்கு குறைவாக பதில் அளிக்க வேண்டும் எனும் கொள்கையை கடைபிடிக்கவும் என்றும் வலியுறுத்துகிறது.
இமெயில் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்க கூடிய சுவாரஸ்யமான இணையதளம்!.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது!

ரெஸ்யூமை சீராக்க உதவும் இணைய சேவைகள்ரெஸ்யூமை சீராக்க உதவும் இணைய சேவைகள்

last-resume-tools-you-will-need-CV-ATS-Real-Resumes
வேலைவாய்ப்பு தேடலில் முதல் படி ரெஸ்யூமை தயார் செய்வது தான். முக்கிய படியும் அது தான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி மற்றும் திறமைகளை சரியாக அடையாளம் காட்டும் வகையில் ரெஸ்யூம் அமைந்திருந்தால் நேரமுக தேர்வுக்கான அழைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே ரெஸ்யூமை சரியாக தயார் செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம்.

நல்ல ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையானகோட்பாடுகளும்,வழிகளும் இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கான பரிசீலனை முறைகளும் மாறி இருக்கின்றன. எனவே அதற்கேற்ப ரெஸ்யூம் தயாரிப்பையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கான விண்ணபங்களை மனிதர்கள் பரிசீலப்பதில்லை. இதற்காக என்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக மென்பொருள்கள் ரெஸ்யூம்களை பார்த்து, வடிகட்டி தேர்வு செய்கின்றன. இந்த முதல் கட்ட வடிக்கட்டலுக்குப்பிறகே நிறுவன மேலதிகாரி அல்லது மனிதவள அதிகாரி அவற்றை பரிசிலீக்கும் நிலை உள்ளது.

ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும் போது, அதிலும் அவை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் போது எல்லா ரெஸ்யூம்களையும் படித்து பார்த்து பொருத்தமானவற்றை தேர்வு செய்வது என்பது அலுப்பூட்டக்கூடியது மட்டும் அல்ல நேரத்தை விரயமாக்கவும் செய்யும். அதனால் தான் ரோபோ தேர்வாளர் என குறிப்பிடப்படும் மென்பொருள்களை கொண்டு வடிகட்டி விண்ணப்பக்குவியல்களில் இருந்து சரியான ரெஸ்யூம்களை அகழ்ந்தெடுக்கின்றனர். இவை ஆட்டமேட்டில் டிராக்கிங் சிஸ்டம் ( ஏடிஎஸ்) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

எனவே வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ரெஸ்யூமை தயார் செய்யும் போது, அது ரோபோ தேர்வாளர் வடிகட்டலில் தப்பி பிழைக்க கூடியதாகவும் இருக்கும் வகையில் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் இதை நினைத்து அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், ரெஸ்யூம் அப்டேட்டான தன்மையுடன் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும், அதற்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளவும் உதவும் இணையதளங்களும், செயலிகளும் இருக்கின்றன.

பொதுவாக ரோபோ தேர்வு மென்பொருள்கள் ரெஸ்யூம்களில் குறிப்பிட்ட வார்தைகள் மற்றும் பதங்களை தேடம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேலைக்கான தகுதி, அனுபவம், படிப்பு ஆகியவற்றை உணர்த்தக்கூடிய சொற்களை அவை தேடி கண்டுபிடிக்கின்றன. அதோடு மோசமான அமைப்பு மற்றும் எழுத்து பிழைகளையும் கண்டுணர்ந்து அதனடைப்படையில் வடிகட்டி விடுகின்றன.

எனவே, ரோபோக்களின் கடைக்கண் பார்வையை பெற முதல் வழி ரெஸ்யூம் எளிமையாக புரியும் படி இருக்க வேண்டும் என்பது தான். அலங்கார அமைப்புகளையும், வார்த்தை ஜாலங்களையும் தவிர்த்துவிட வேண்டும். முடிந்தால் வேர்டு பைலாக இருந்தால் நல்லது. முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்ட புல்லட் புள்ளிகளை பயன்படுத்தலாம். இப்படி நிறைய அம்சங்களை கவனிக்க வேண்டும். வேலைக்கான விவரிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான முகவரி ஆகியவற்றையும் தெளிவாக குறிப்ப்டுவது அவசியம் என்று வேலைவாய்ப்பு தேர்வு வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த முறையில் ரெஸ்யூம் தயார் செய்ய உதவி தேவை என்றால், எச்லூம் ( http://www.hloom.com/ats-resume-samples/) தளத்திற்கு சென்று பார்க்கலாம். இந்த தளத்தின் பலவிதமான ரெஸ்யூம் மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக மென்பொருள் பார்வைக்கு ஏற்ற வகையிலான ரெஸ்யூம் மாதிரிகள் ஏடிஎஸ் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரெஸ்யூம் அருகிலும் அதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை பார்த்து பரிசிலீத்து பொருத்தமான ரெஸ்யூம் மாதிரியை தேர்வு செய்து கொள்ளலாம். அப்படியே நகெலெடுக்க வேண்டும் என்றில்லை, ஆனால் இவற்றை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம்.
last-resume-tools-you-will-need-CV-JobScan
ரெஸ்யூமை எப்படி வடிவமைப்பது என தெரிந்து கொண்ட பின், அதில் முக்கிய விவரங்களை எப்படி இடம்பெறச்செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். என்ஹான்ஸ்சிவி (https://www.enhancv.com/ ) இணைதளம் இதற்கு வழிகாட்டுகிறது. ரெஸ்யூமில் இடம் பெற வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்வதோடு, மாதிரி ரெஸ்யூம்களையும் பார்க்கலாம். ரெஸ்யூம்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இந்த தளம் உதவும்.

இதே போல ஜாப்ஸ்கேன் ( https://www.jobscan.co/) இணையதளம், ரெஸ்யூமில் ரோபோ தேர்வாளர் கவனிக்க கூடிய குறிச்சொற்கள் இருக்கின்றனவா? என கண்டறிந்து சொல்கிறது. இந்த தளத்தில் ரெஸ்யூம் விவரம் மற்றும் அதன் அருகே விண்ணப்பிக்கும் பணிக்கான விவரங்களை சமர்பித்தால் இரண்டையும் பரிசிலீத்து அந்த ரெஸ்யூம் எப்படி இருக்கிறது எனும் தகவல் தந்து வழிகாட்டுகிறது. ஆனால் இது கட்டண சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ரெஸ்யூமை கவனமாக தயார் செய்த பிறகு அதன் தன்மை குறித்து உறுதி செய்து கொள்ள விரும்பினால், ரெஸ்ஸ்கோர் (http://rezscore.com/ ) தளம் வழிகாட்டுகிறது. அடிப்படையில் இந்த தளம் ரெஸ்யூமிற்கான மதிப்பெண்களை அளிக்கிறது. அதாவது ரெஸ்யூமின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராயந்து அதற்கு மதிப்பெண் கொடுக்கிறது. ரெஸ்யூமை இந்த தளத்தில் பதிவேற்றி அது எந்த அளவு சிறந்ததாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் வழிகாட்டுதல் தேவை எனில் ரியல் ரெஸ்யூம் ( https://www.visualcv.com/resume-samples) தளத்தில் ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்களை பார்வையிடலாம். எல்லாமே தொழில் வல்லுனர்களின் ரெஸ்யூம் மாதிரிகள். பல்வேறு துறைகளை சேர்ந்த பணிகளுக்கான ரெஸ்யூம் மாதிரிகளையும் பார்க்கலாம்.

இவற்றில் உள்ள ரெஸ்யூம் மாதிர்கள் பிடித்திருந்தால் அதையே பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ரெஸ்யும் பற்றி இன்னமும் தெளிவு தேவை என்றால் கேள்வி பதில் தளமான குவோராவில் ரெஸ்யூம் வடிவமைப்பு தொடர்பான கேள்விகளை படித்துப்பார்க்கலாம். – https://www.quora.com/topic/Resumes-and-CVs வேலைவாய்ப்பு துறையில் நிபுணத்துவம் மிக்க வல்லுனர்கள் விரிவான பதில்கள் நிச்சயம் புதிய பார்வையை அளிக்க கூடியதாக இருக்கும். இன்னொரு முக்கிய குறிப்பு, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தொழில்முறை வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தளத்தில் கணக்கு இருந்தால் இன்னும் நல்லது. பலவிதங்களில் அது உதவியாக இருக்கும். பேஸ்புக் கணக்கு நட்புக்கும்,அரட்டைக்கும் வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம், ஆனால் தொழில்முறையாக நீங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றால் லிங்க்டுஇன் நல்ல தேர்வாக இருக்கும்.

இது தவிர, ஒரு ரெஸ்யூமில் தவிர்க்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியம். குறிப்பிட்ட சில பணிகள் தவிர மற்றவைக்கு புகைப்பட்த்தை இணைக்க வேண்டாம், உயரம், எடை போன்ற தனிப்பட்ட விவரங்களையும் தவிர்க்க வேண்டும் போன்ற 17 அமசங்களை இந்த வரைபட சித்திரம் மூலம் அறியலாம்: http://www.resumetiq.com/17-things-to-avoid-in-resume-infographic/

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

சாப்ட்வேருக்கும் சார்பு உண்டு!

software
பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை எல்லாம் முதலில் சாப்ட்வேர் தான் படித்துப்பார்த்து முதல் கட்டமாக தேர்வு செய்கின்றன. வேலைக்கு பொருத்தமான தகுதியை உணர்த்தக்கூடிய குறிச்சொற்களை அடிப்படையாக கொண்டு சாப்ட்வேர்கள் விண்ணப்பக்குவியலை வடிகட்டித்தருகின்றன. இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். வேலைவாய்ப்பு என்றில்லை, கடனுக்கான விண்ணபங்களையும் கூட சாப்ட்வேர் தான் வடிகட்டித்தருகின்றன. அதனால் தான் சாப்ட்வர் அடையாளம் காணக்கூடிய குறிச்சொற்கள் விண்ணபத்தில் இருந்தால் நல்லது என்கின்றனர்.

விண்ணப்பங்களை பரிசிலித்து பிரித்தரியும் பொறுப்பு சாப்ட்வேரிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கவலை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மனிதர்கள் போலவே சாப்ட்வேர்களும் கூட தேர்வில் சார்புத்தன்மையை வெளிப்படுத்தலாம் என்பது தான் அந்த தகவல்.

இந்த பணிக்காக உருவாக்கப்படும் சாப்ட்வேர்களுக்கு, தரவுகள் அளிக்கப்பட்டு அவற்றில் இருந்து அடிப்படையான அம்சங்களை கண்டறிந்து செயல்படுவதற்கான குறிப்புகள் அலோகோரிதமாக வழங்கப்படும். அதே முறையில் அவையும் விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து வடிகட்டித்தருகின்றன.தகுதிக்கான அம்சங்கள் அடிப்படையில் எப்படி மனிதர்கள் தேர்வு செய்கின்றனரோ அதே போலவே அல்கோரிதம்களும் செயல்படுகின்றன.
ஆனால்,மனித தேர்வில் சார்புகள் உண்டாக வாய்ப்பு இருப்பது போலவே சாப்ட்வேர் தேர்விலும் நிகழலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் உட்டா, அரிசோனா மற்றும் ஹாவர்போர்டு உள்ளிட்ட பல்கலைகழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தங்கள் ஆய்வு முடிவுகளை சமீபத்தில் சிட்னியில் நடைபெற்ற இயந்திர புரிதல் தொடர்பான மாநாட்டில் வெளியிட்டுள்ளனர். இந்திய அமெரிக்கரான சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன் எனும் பேராசிரியர் தலைமையில் தான் இந்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது.

இந்த ஆய்வு மூலம் சாப்ட்வேர்களின் தேர்வில் அவற்றை அறியாமல் சார்பு உண்டாக வாய்ப்பிருக்கிறதா? என கண்டுபிடிக்கும் சோதனை ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பரிசிலிக்கும் அல்கோரிதம்களை இந்த சோதனைக்கு உட்படுத்தினால் அவை தங்களை அறியாமல் விண்ணப்பதாரர்களின் இனம் அல்லது பாலினம் தொடர்பான தகவல்களை, அவை மறைந்திருந்தாலும் ஊகித்தறிய முடிந்தது என்றால் அது சார்பு நிலைக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளதும் ஒரு அல்கோரிதம் தான்.

சாப்ட்வேர்கள் இவ்வாறு செய்வதாக கூறவில்லை, ஆனால் இதற்கான வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன் கூறியுள்ளார். முரண் என்ன என்றால், மனிதர்களை செயல்படும் விதத்தை போலி செய்யும் வகையில் சாப்ட்வேர்களை உருவாக்கும் போது , செயற்கை அறிவு நம்மை போலவே செயல்பட முற்படும் போது நம்மை போலவே சார்பு கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
விண்ணப்பங்களை சாப்ட்வேர் மூலம் வடிகட்டுவதை மையமாக கொண்டு ஒரு தொழில் துறையே உருவாகியுள்ள நிலையில் , அது செயல்படும் வித்த்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான தன்மை இருக்கும் என்றால் அது நியாயமாக இருக்காது என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால் நல்லவேளையாக, இது போன்ற சார்பு சாப்ட்வேரிடம் இருப்பது தெரியவந்தால் அதை சீராக்கும் தரவுகளை சமர்பித்து சாப்ட்வேர் செயல்பாட்டை சரி செய்துவிடலாம் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஆக, சாப்ட்வேர் தவறு செய்தாலும் திருத்திக்கொண்டு விடும்! மனிதர்கள்?

—–
hதளம் புதிது: வாசிப்பு காலம் என்ன?

புத்தக பிரியர்களுக்கான புதுமையான இணையதளம் இது. படிக்க விரும்பும் புத்தகத்தை படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கணித்து சொல்வது தான் இந்த தளத்தின் சிறப்பு. அதுவும் எப்படி உங்கள் வாசிப்பு வேகத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப தகவல் தருகிறது. எப்படி?
நீங்கள் எந்த புத்தகத்தை படிக்க விரும்புகிறீர்களே அதன் தலைப்பை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த தலைப்பிலான புத்தகம் மற்றும் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய விவரங்களை காண்பிக்கிறது.புத்தகத்தில் உள்ள மொத்த வார்த்தைகள் தொடர்பான தகவலும் இடம்பெறுகிறது. இந்த பட்டியலில் இருந்து உங்களுக்கான புத்தகத்தை தேர்வு செய்த்தும், அந்த புத்தகத்தில் இருந்து ஒரு மாதிரி பக்கம் வருகிறது. அதை நீங்கள் படித்துக்காட்ட வேண்டும். நீங்கள் படிக்கும் வேகத்தை கொண்டு அந்த முழு புத்தகத்தையும் படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கணித்து சொல்கிறது.
துல்லியமான கணிப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் சுவாரஸ்யமான சேவை. பயணங்களின் போது கையில் எடுத்துச்செல்ல வேண்டிய புத்தகத்தை தீர்மானிக்க இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம். அதே நேரத்தில் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாகவும் கூட இதை கருதலாம். புத்தக தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் ஒரு கோடிக்கு மேற்பட்ட புத்தகங்களின் விவரங்களை கொண்டுள்ளது. புத்தகங்களை அமேசான் தளத்தில் வாங்கிக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி; http://www.howlongtoreadthis.com

———

செயலி புதிது; போனுக்குள் ஒரு தோழன்

அலுப்பாக உணர்கிறீர்களா? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லையா? இது போன்ற நேரங்களில் ஸ்மார்ட்போனில் பதில் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? ’ஷபிள் மை லைப்’ செயலி இதை தான் செய்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான இந்த செயலி, பொழுதுபோக்க வழி தெரியாத நேரங்களில் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை சொல்கிறது. அருங்காட்சியகத்திற்கு செல்லலாம் அல்லது யூடியூப்பில் கான் அகாடமி கல்வி வீடியோவை பார்க்கலாம் என்பது போல இந்த பரிந்துரைகள் அமைகின்றன. சும்மாயில்லை அன்றைய தினத்தின் வானிலை மற்றும் பயனாளிகளின் இருப்பிடம் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் இருக்கின்றன. பரிந்துரைக்கப்படும் செயல்களின் தன்மை பற்றிய விளக்கம் மற்றும் அவற்றுக்கு ஆகக்கூடிய செலவு பற்றிய விவரங்களும் இடம்பெறுகின்றன. இப்போதைக்கு 250 க்கும் மேற்பட்ட செயல்களின் பட்டியல் இருக்கிறது. பயனாளிகளும் புதிய செயல்களை இந்த செயலியிடம் பரிந்துரைக்கலாம்.
Shuffle My Life
தரவிறக்கம் செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.gadsby.shufflemylife&hl=en

—–

பிடிஎப் கோப்பாக இ-மெயில்

முக்கிய மெயில்களாக இருந்தால் சில நேரங்களில அவற்றை அச்சிடும் தேவை ஏற்படலாம். இவ்வாறு மெயில்களை அச்சிட்டுக்கொள்வது எளிதானது தான். ஆனால் காகித வடிவில் இல்லாமல் மெயில்களை கோப்பு வடிவில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்வது? அதாவது மெயில்களை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள விரும்பினால்,டஃப்பல் பிரவுசர் நீட்டிப்பு சேவை அதற்காக வழி காட்டுகிறது. குரோம் பிரவுசர்களுக்கான இந்த நீட்டிப்பு சேவையை டவுண்லோடு செய்து கொண்டு ஜிமெயிலில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை இன்பாக்சை ஓபன் செய்து மெயில்களை படிக்கும் போது, மெயிலின் மேல் பகுதியில் உள்ள டூல்பாரில் டவுண்லோடு எனும் ஐகான் எட்டிப்பார்க்கும். அதை கிளிக் செய்தால் பார்த்துக்கொண்டிருக்கும் மெயில் பிடிஎப் கோப்பாக மாற்றப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்களை செலக்ட் செய்து அவற்றை கோப்புகளாக மாற்றவும் இதே முறையை பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய: https://getduffel.com/

——–

வை-பை குப்பைத்தொட்டி

wi-fi-binபொது (புது) இடங்களுக்கு செல்லும் போது அருகே வை-பை வசதி எங்கே இருக்கிறது என அறிந்து கொள்ளும் ஆர்வமும் தேவையும் உண்டாகும். ( இலவச சேவையாக இருந்தால் இன்னும் நல்லது!). இந்த கேள்விக்கு விடையாக மட்டும் அல்ல போனசாக பரிசு அளிக்கும் வகையில் புதுமையான யோசனையை மும்பை இளைஞர்கள் பரதீக் அகர்வால் மற்றும் ராஜ் தேசாய் முன்வைத்துள்ளனர். இருவரும் வை-பை வசதி கொண்ட குப்பைத்தொட்டியை வடிவமைத்துள்ளனர். இந்த குப்பைத்தொட்டியில் குப்பையை போடும் ஒவ்வொரு முறையும் அதில் ஒரு எண் பளிச்சிடும். அந்த எண்ணை கொண்டு இலவச வை-பை இணைப்பு வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
டென்மார்க் போன்ற நாடுகளில் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதை பார்த்து வியந்த போது அதே போன்ற நிலையை இந்தியாவில் உண்டாக்க வேண்டும் என்றால் மக்கள் அணுகுமுறையில் மாற்றம் தேவை என உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் குப்பை போட்டால் வை-பை புள்ளிகளாக பரிசளிக்கும் இந்த நவீன குப்பைத்தொட்டி மாதிரியை வடிவமைத்ததாக இருவரும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் வை-பை இணைப்பு தொடர்பான தேடலுக்கும் இது தீர்வாகும் என்கிறனர். அதாவது வை-பை இணைப்பையும் அளிக்கும், குப்பைத்தொட்டியில் குப்பை போடும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும். இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் நன்றாக தான் இருக்கும் அல்லவா?

=–

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது