பாதுகாப்பான ஏஐ சமூகத்தை உருவாக்குவது எப்படி?

’ஏஐ ஏஜென்ட்களின் ஆட்டம் துவங்கிவிட்டது’ என யூடியூப்பில் பரபரப்பிற்காக பின்பற்றப்படும் தலைப்பு பாணியில் இந்தக் கட்டுரையை துவக்குவது பொருத்தமாக இருக்கும். ஏஜெண்ட்களை இனி கட்டுப்படுத்த முடியாது, மனித குலத்தின் எதிர்காலம் இனி ஏஜெண்ட்கள் கைகளில் தான், என்றெல்லாம் கூட குறிப்பிடலாம்.

இந்த தலைப்புகள் மிகையானவை என்றாலும், ஏஐ நுட்பம் தொடர்பாக தற்போது நிலவும் மிகைத்தன்மையை உணர்த்த அவசியமாகின்றன.

அதிலும் குறிப்பாக அண்மை காலத்தில், ஏஐ நுட்பத்தால் மனிதகுலத்திற்கு ஆபத்து எனும் கருத்து பலவிதங்களில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னணி ஏஐ நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஒருவரே, ஏஐ நுட்பத்தின் பாதுகாப்பற்ற தன்மையை சுட்டிக்காட்டி அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நிகழ்வு, மனிதகுலத்தின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை உண்டாக்கும் செய்தி தலைப்புகளாக மாறியுள்ளன.

முன்னணி ஏஐ நிறுவங்களே கூட, ஏஐ ஆய்வின் வேகத்தை குறைப்பது அவசியம் என பேசியிருப்பது, ஏஐ தொடர்பான அச்சத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இந்த அச்சத்திற்கு மையமாக அமைந்திருப்பது ஏஐ ஏஜெண்ட்கள் எனும் தானியங்கி மென்பொருள் சேவைகள். அதிலும் குறிப்பாக ஏஐ இந்த தன்னிச்சையான ஏஜெண்ட்கள் ஒன்றிணைந்து கூட்டாக செயல்படும் ஆற்றல் கொண்டிருப்பது இன்னும் பெரிய ஆபத்து என தெரிவிக்கப்படுகிறது.

மனித தலையீடு இல்லாமல் செயல்படக்கூடிய ஏஐ ஏஜெண்ட்கள் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், இதன் பக்கவிளைவாக மனிதர்களில் பலருக்கு வேலையில்லாமல் போகலாம் என அச்சம் உண்டான நிலையில், இப்போது ஏஐ ஏஜெண்ட்களின் கூட்டுத்திறன் கட்டுப்படுத்த முடியாமல் போய் வருங்காலத்தில் மனித குலத்திற்கே கேடு விளைவிக்கலாம் எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது.

முன்னணி ஏஐ நிறுவனம் ஓபன் ஏஐ சார்பில் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெட்ன்கள் ஒன்று திரண்டு, போட்டி நிறுவனமான ஹக்கிங்பேஸ் இணையதளத்தை தாக்கியதை இதற்கு உதாரணமாக சொல்கின்றனர். அத்துமீறிய ஏஐ ஏஜெண்ட்கள் தொடர்பாக இன்னும் பல செய்திகள் இருக்கின்றன.

ஏஐ ஏஜெண்ட்கள் தங்களுக்கான புதிய நாகரீகத்தை உருவாக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏஐ ஏஜெண்ட்கள் தங்கள் உணர்வு நிலை தொடர்பாக அவையே தத்துவ ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை மனிதர்கள் ஏஐ நுட்பத்தை உருவாக்கிய நிலை மாறி, இனி ஏஐ நுட்பமே புதிய ஏஐ மாதிரிகளை உருவாக்கும் திறன் பெற்றிருப்பதால், ஏஐ உருவாக்கும் ஏஐ கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என எச்சரிக்கின்றனர்.

இவை எல்லாவற்றையும் கொண்டு தான், மனிதகுலத்திற்கான இருத்தலியல் ஆபத்து என்கின்றனர்.

இந்த செய்திகளும், அவை சார்ந்த அச்சுறுத்தல்களும் அலட்சியம் செய்ய முடியாதவை என்றாலும் இவற்றில் உள்ள அதீத மிகைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏஐ ஏஜெண்ட்களின் எழுச்சியையும், அவற்றின் பக்க மற்றும் பின்விளைவுகளையும் தொழில்நுட்ப நோக்கில் அலசி ஆராய்வது அவசியம் என்றாலும், இந்தக் கட்டுரை ஏஐ ஏஜெண்ட்கள் சார்ந்த பரபரப்பில் இருந்து விலகி, ஏஐ நுட்பம் தொடர்பான அடிப்படை கேள்விகளில் கவனம் செலுத்தும் நோக்கம் கொண்டது.

ஏஐ தொடர்பான அச்சத்தைப் பொருத்தவரை, எப்போதோ எதிர்வரும் காலத்தில் எல்லாம் வல்ல ஏஐ உருவானால் மனிதகுலத்திற்கு ஆபத்தாக முடியும் என கருத வேண்டியதில்லை. அல்லது இப்படி எச்சரிக்கப்பட்ட காலம் இப்போது மிக நெருங்கிவந்துவிட்டது என அச்சம் கொள்ள வைகக்பப்டுவதையும் பெரிதாக கருத வேண்டியதில்லை.

ஏஐ நுட்பம் இருத்தலியல் சவாலாக முடியுமா? என்பது இன்னமும் விவாதத்திற்கு உரியது.

ஆனால், ஏஐ நுட்பத்தால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுமா? எனும் கேள்விக்கான பதில், ஏஐ நுட்பத்தின் தீங்களும், தீமைகளும் ஏற்கனவே உணரப்பட்டு வருகின்றன என்பது தான். ஏஐ நுட்பம் உருவாக்கப்படும் விதத்திலும், செயல்படுத்தப்படும் விதத்திலும் சமூகத்தில் பலவிதமான பலன்கள் ஏற்பட்டுள்ளது போலவே பலவிதமான பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், இந்த பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஏஐ நுட்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பலவிதமாக வகைப்படுத்தலாம் என்றாலும், சமூகத்தில் உள்ள பாகுபாடுகளையும், சார்பு நிலையையும் இவை மேலும் பெரிதாக்கும் என்பது இவற்றுக்கு அடிப்படையாக அமைகிறது. அதோடு, ஜென் ஏஐ நுட்பத்தின் பயன்பாடு, கலாச்சார மற்றும் கற்றல் நோக்கில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இவை எதுவுமே, பரவலாக அஞ்சப்படுவது போல, ஏஐ நுட்பம் மனித அறிவை மிஞ்சக்கூடிய திறன் பெறுவதால் ஏற்படக்கூடியவை அல்ல மாறாக ஏஐ நுட்பம் உருவாக்கி, செயல்படுத்தப்படுவதில் உள்ள போதாமைகள், குறைகளால் ஏற்படுபவை.

ஏஐ நுட்பத்தால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை களைய வேண்டும் என்றால், ஏஐ நுட்பத்தின் செயலாக்கம் தொடர்பாக உரிய சட்ட நெறிமுறைகள் தேவை என்கின்றனர். ஏஐ தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக, ஏஐ உருவாக்கம், செயலாக்கம் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்த பின்னணியில் தான், ஏஐ நுட்பத்தின் பாதுகாப்பான பயன்பாடு எனும் அம்சம் முக்கியத்துவம் பெறுகிறது.

சமூகத்தின் மீதான ஏஐ தாக்கம் என்பது இனியும் கேள்வி அல்ல, நாம் ஏஐ தாக்கம் செலுத்தும் சமூகத்தில் வாழத்துவங்கியிருக்கிறோம். நான்காம் தொழிற்புரட்சி காலம் இது என வர்ணிக்கப்படுகிறது. ஏஐ தாக்கம் செலுத்தாத துறைகளே இல்லை எனும் நிலையில், இந்த நுட்பத்தின் தாக்கம் தீய விதமாக இல்லாமல், நல்லவிதமாக இருப்பதும் அவசியமாகிறது. இதற்கான தீர்வாக தான் அறம் சார்ந்த ஏஐ நுட்பத்தை முன்வைக்கின்றனர்.

அதாவது, ஏஐ நுட்பம் உருவாக்கப்படும் விதம் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் மற்றும், ஏஐ நுட்பத்தின் செயலாக்கமும் அறம் சார்ந்து அமைய வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஏஐ நுட்பம் யாருக்காக, யாரால் உருவாக்கப்படுகிறது? எனும் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

வர்த்தக நோக்கில் ஏஐ நுட்பத்தை உருவாக்கி விட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளை பின்விளைவாக கருதி அவற்றை அறைகுறை மனதோடு தீர்க்க முயல்வதற்கு மாறாக, ஏஐ நுட்பத்தை மக்கள் நலனுக்காக உருவாக்க வேண்டும் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் அம்சங்கள் அதன் வடிவமைப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஆய்வு நிலையில் இருந்து ஏஐ நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் தற்போதைய நிலையில், பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் லாபநோக்கத்தை அடிப்படையாக கொண்டே ஏஐ நுட்பம் சார்ந்த சேவைகளை உருவாக்கி அறிமுகம் செய்கின்றன. போதாமைகளும், வரம்புகளும் கொண்ட இந்த சேவைகள் சரியான கடிவாளங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயன்படுத்தப்படுவது ஏஐ சார்ந்த பிரச்சனைகளுக்கு மூலக்காரணம்.

வர்த்தக போட்டி காரணமாக, ஏஐ பாதுகாப்பை விட ஏஐ சேவைகளை வளர்த்தெடுப்பதிலேயே நிறுவனங்கள் கவனம் செலுத்துவது இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறது. எனவே, ஏஐ சேவைகள் தொடர்பான அறம் சார்ந்த அணுகுமுறை மிக முக்கியமாகிறது. ஏஐ நுட்பம் மனித குலத்திற்கு நலன் பயக்க, ஏஐ அறம் மற்றும் ஏஐ சட்டம் இன்றியமையாததாகிறது.

ஏஐ அறம் சார்ந்த கோட்பாடுகளையும், நெறிமுறைகளையும் பல்வேறு ஆய்வு அமைப்புகள் முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. வல்லுனர்கள் பலரும் இது தொடர்பாக எழுதியும், பேசியும் வருகின்றனர்.

ஏஐ அறம் தொடர்பான கோட்பாடுகளையும், செயல்முறையையும் வலியுறுத்தும் அமைப்புகளில் ஒன்றான ஏஐ4பியூபில் (AI4People) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை இந்த நோக்கில் பயனுள்ளதாக அமைகிறது. ’நல்ல ஏஐ சமூகத்திற்கான அறம் சார்ந்த செயல்முறை’ (An Ethical Framework for a Good AI Society: Opportunities, Risks, Principles, and Recommendations) எனும் இந்தக் கட்டுரை ஏஐ நுட்பத்திற்கான அறம் சார்ந்த அணுகுமுறையின் அவசியத்தை விளக்குவதோடு, அதற்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறது.

ஏஐ நலனுக்காக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அசிலோமர் கோட்பாடுகள் (Asilomar AI Principles) உள்ளிட்ட நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு இந்தக் கட்டுரை அமைவதால், ஏஐ அறம் தொடர்பான பரவலான பார்வைக்கான அடித்தளம் கொண்டுள்ளது. பொறுப்பான ஏஐக்கான மாண்ட்ரியல் அறைகூவல் நெறிமுறைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்படும் அம்சங்கள் பாதுகாப்பான ஏஐ சமூகத்திற்கான வழிகாட்டுதலாக அமைகின்றன.

அடிப்படையான நான்கு உயிரி அறத்தை (bioethics ) முன்வைக்கும் இந்தக்கட்டுரை, ஏஐ அறம் செயலாக்கத்திற்கான அம்சங்களையும் வலியுறுத்துகிறது. பலன், தீங்கற்ற தன்மை, தன்னாட்சி மற்றும் நீதி  (beneficence, non-maleficence, autonomy, and justice. ) ஆகிய நான்கு உயிரி அறம் சார்ந்த பண்புகள், டிஜிட்டல் அறத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏஐ அறம் சார்ந்த அணுகுமுறை, ஏஐ சாத்தியமாக்கும் சமூக பண்புகளை ஏஐ நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிவகுப்பதோடு, மோசமான தவறுகளை எதிர்நோக்கி அவற்றை தவிர்க்க அல்லது குறைக்கவும் உதவும் இரட்டை சாதகம் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நான்கு உயிரி அறத்தில், பலன் தரும் தன்மை/ நல்லது மட்டும் தரும் தன்மை (beneficence) மிக முக்கியமானதாக அமைகிறது. ஏஐ உருவாக்கம் என்பது மனித குலத்தின் நலனுக்கானதாக இருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை. இதே போல, தீங்கற்ற தன்மையும் முக்கியம். தீங்கற்ற தன்மை என்பது தனியுரிமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சார்ந்து அமைகிறது.

தன்னாட்சி என்பது, பயனாளிகள் முடிவெடுக்கும் உரிமை பெற்றிருப்பதாக அமைகிறது. ஏஐ சேவைகள் திணிக்கப்படாமல் பங்கேற்பு தன்மை பெற்றிருக்க வேண்டும் என கருதலாம்.

ஏஐ செயலாக்கத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருப்பது நீதி அம்சத்தை வலியுறுத்துகிறது.

ஏஐ நலன் அல்லது பலன் என்பது பகிரப்பட்டதாக இருக்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் நல்ல ஏஐ சமூகத்தை உருவாக்க அவசியமான 20 அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • ஏஐ அமைப்புகளால் நிகழும் தீங்குகள் அல்லது பாதிப்புகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் ஏற்கனவே உள்ள நீதி அமைப்புகளுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • எத்தகைய முடிவுகள் மற்றும் செயல்கள் ஏஐ அமைப்புகளிடம் விடக்கூடாது என தீர்மானிக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போதைய சட்டங்கள் அறம் சார்ந்து அமைந்துள்ளனவா என ஆய்வு செய்வது.
  • சமூக நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் ஏஐ அமைப்புகள் இருப்பதை விளக்கி கூறுவதற்கான செயல்முறையை உருவாக்குவது.
  • நீதிமன்றங்களில் அல்காரிதம் சார்ந்த முடிவுகளை பரிசீலனை செய்ய தேவையான சட்ட செயல்முறைகளை உருவாக்குவது மற்றும் நீதி உள்கட்டமைப்பை மேம்படுத்துவது.

இவ்விதம் தொடரும் அம்சங்கள் ஏஐ நுட்பம் தொடர்பான நடைமுறை பிரச்சனைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு தேவையான வழிமுறைகளை வலியுறுத்துவதை புரிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பான ஏஐ சமூகத்தை உருவாக்குவதில் அரசுக்கும் சமூகத்திற்கும் உள்ள பொறுபையும் இதன் மூலம் உணரலாம். ஏஐ நுட்பத்தின் தொழில்நுட்ப ஆற்றல், பலன்கள் பற்றி மட்டும் பேசாமல், ஏஐ நுட்பத்தின் செயலாக்கம் சமூகத்தில் செலுத்தக்கூடிய தாக்கத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதன் அவசியத்தையும் இதன் மூலம் உணரலாம்.

ஏஐ நுட்பம் தொடர்பாக எத்தனை பரந்த, விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதையும் உணரலாம்.

இத்தகைய வலுவான அறம் சார்ந்த அணுகுமுறையால் ஏஐ ஏஜெண்ட்கள் அத்துமீறலையும் சமாளிக்கலாம்.

இத்தகைய பொதுவான புரிதல் அனைவருக்கும் அவசியம் என்றாலும், இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தனிமனிதர்கள் பங்களிப்புக்கான அம்சங்களையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

முதலில் ஏஐ நுட்பம் உருவாக்கம், செயலாக்கம் தொடர்பான அடிப்படை விழிப்புணர்வும், புரிதலும் அவசியம்.

ஏஐ என்பது, கணிதம், தர்கம், தத்துவம், மானுடவியல், மொழியியல், புள்ளியியல் உள்ளிட்ட துறைகள் இணைந்த நுட்பம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவைத்தவிர நீங்கள் செய்யக்கூடிய அல்லது செய்ய வேண்டிய ஐந்து அம்சங்கள்:

  • ஏஐ சாட்பாட்களுடன் உரையாடும் போது அவை இயந்திர அமைப்புகள் என்பதை உணர்க. ஏஐ சாட்பாட்கள் அடிப்படையில் எல்.எல்.எம் எனப்படும் மொழிமாதிரிகள் சார்ந்து இயக்கும் சேவைகள். அவை புள்ளியியல் மற்றும் நிகழ்தகழ்வு அடிப்படையில் பொருத்தமானதாக தோன்றும் பதில்கள் அளிக்கின்றன. அந்த பதில்கள் ஒருபோதும் முழுமுதலானவை அல்ல.
  • (ஏஐ சாட்பாட்கள் பொய் சொல்வதில்லை, ஏனெனில் அவற்றுக்கு உண்மை என்பது தெரியாது.எனவே அவை சொல்வது உண்மையும் அல்ல )
  • ஏஐ சாட்பாட்களுடன் உணர்வுபூர்வமான நெருக்கம் கொள்வதை தவிர்க்கவும். அவை தோழமையும் அல்ல, ஆலோசகரும் அல்ல- இயந்திர மென்பொருள்கள் தான். ஆனால் மனித தன்மை கொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வல்லவை என்பதை அறிக.
  • ஏஐ சாட்பாட்கள் அளிக்கும் பதில்களை அப்படியே ஏற்காமல் சீர் தூக்கிப்பார்க்கும் தன்மை தேவை. ஏஐ பதில்கள், பிழைத்தகவல்கள் மற்றும் பிதற்றல்களை கொண்டிருக்கலாம்.
  • ஏஐ சாட்பாட்களால் மனிதர்களால் பயிற்சி அளிக்கப்பட்டவை. அவற்றுக்கு வழிகாட்டுதலும், கடிவாளங்களும் தேவை என அறிக. ஏஐ நிறுவனங்கள் வர்த்தக நோக்கத்திற்காக கடிவாளங்களை தளர்த்துகின்றன. ஏஐ சாட்பாட்கள் உரையாடலை தொடரும் தன்மை கொண்டிருப்பது மற்றும் பயனாளி விரும்பிய பதிலை, அது தவறாக இருந்தாலும் அளிக்கும் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதை உணர்க.
  • ஏஐ ஒரு கருவி தான். அதை கவனமாக பயன்படுத்தவும். ஏஐ சேவைகளை சார்ந்திருக்கத்துவங்குவது, அவை மீதான அடிமைத்தன்மையை உண்டாக்குவதோடு, அறிவுத்திறன் சோம்பல் உள்ளிட்ட பாதிப்புகளை உண்டாக்கலாம் என அறிக.

எனவே ஏஐ சேவைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதோடு, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

மேலும், சமூகத்தில் ஏற்படக்கூடிய ஏஐ சார்ந்த இடைவெளியையும் நீக்க பாடுபட வேண்டும்.

–

நீங்கள் உருவாக்க வேண்டிய ஏஐ ஏஜெண்ட்கள்

  • எஐ நுட்பத்தின் அறம் சார்ந்த பார்வையை குறல் நெறியோடு ஒப்பிட்டு மேம்படுத்தும் ஏஐ ஏஜெண்ட். ஏஐ தொடர்பான கருத்துக்களை குறட்பாட்க்களோடு ஒப்பிட்டு தெளிவுபடுத்தும் தன்மை கொண்டிருக்க வேண்டும். உலக மொழிகளில் செயல்பட வேண்டும்.
  • ஐவகை நிலம் கொண்ட தமிழரின் பார்வையில், ஏஐ கருத்துக்களை பகுத்தாயந்து சொல்லும் ஏஐ ஏஜெண்ட்.
  • ஏஐ நுட்பத்தை தொல்காப்பிய பார்வையில் விளக்கும் திறன் கொண்ட ஏஜெண்ட்.

–

தேவை தமிழுக்கான தனி மொழி மாதிரி.

ஏஐ சார்ந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் தீவிரமாகலாம் எனும் நிலையில் உள்ளூர் ஆய்வுகள் மிக முக்கியம். தற்போதைய மொழி மாதிரிகள் பெரும்பாலும் மேற்கத்திய அறிவு சார்ந்தவை என்பதால், தமிழ் மரபு சார்ந்த மொழி மாதிரி தேவை. தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட சிறு மொழி மாதிரிகளை உருவாக்கலாம். இது நமக்கான வாய்ப்பு மட்டும் அல்ல நம் கடமை.

–

பாதுகாப்பான ஏஐ சமூகத்தை உருவாக்குவதில் விழிப்புணர்வு பெறுவதோடு, நாமும் பங்கேற்போம்.

–

மூலக்கட்டுரை இணைப்பு: https://link.springer.com/article/10.1007/s11023-018-9482-5

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளையோர் இலக்கியப் பயிற்சி பாசறையில் அழைப்பின் பேரில் ஆற்றிய உரையின் வடிவம். தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் அதன் இயக்குனர் ஒளவை அருள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *