செய்தி தளங்களுக்கான தகவல் சுரங்கம்

செய்தி தளங்களை கண்டறிவதில் ஆர்வம் உள்ளவர் எனில், https://explore.ghost.org/ உங்களுக்கான அருமையான ஒரு பக்க தேடியந்திரமாக அமைகிறது.

வலைப்பதிவு, இணையதளங்களை நடத்த உதவும் வேர்டுபிரஸ் போன்றதொரு இணைய சேவையான கோஸ்ட்.ஆர்க் தளத்தின் சேவையை பயன்படுத்தும் தளங்களை பட்டியலிடும் இந்த பக்கம், சமகால இணைய ஊடகங்களில், துடிப்பானவற்றையும், புதிய சிறந்தவற்றையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்கிறது.

இந்த பட்டியலில் முன்னிறுத்தப்படும் முதல் தளமான டேங்கில் (Tangle) அமெரிக்க அரசியல் செய்திகளை, நடுநிலை மட்டும் அல்லாமல் வலது, இடது என இருதரப்பின் நோக்கில் இருந்தும் முன்வைக்கிறது. அதன் தனிப்பட்ட பார்வையும் முன் வைக்கப்படுகிறது./

வாசகர்கள் ஆதரவில் வெளியாகும் தி லீவர், ஏஐ செய்திகளை புலன் விசாரணை செய்து வெளியிடும் இணையதளமான பிளாட்பார்மர் என வரிசையாக இடம்பெறும் தளங்கள் செய்தி நோக்கிலான தாகத்தத் தீர்க்க வல்லவை.

இதுத் தவிர அண்மையில் துவங்கப்பட்ட செய்தி தளங்களுக்கான பட்டியலும், தொழில்நுட்பம், கலாச்சாரம், சமூக வலை உள்ளிட்ட பிரிவுகளிலான செய்தி தளங்களும் இடம்பெறுகின்றன. மிகவும் பிரபலமான செய்தி தளங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. யூடியூப், தனிப்பட்ட சேவைகள், தொழில்நுட்பம், கல்வி, கலை என்றும் பிரிவுகள் விரிகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் மேலும் அறிக பகுதியை கிளிக் செய்தால் பட்டியல் இன்னும் நீள்வதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான செய்தி தளங்கள் அவற்றின் நோக்கம், உள்ளடக்கம், ஆசிரியர் குழு செயல்பாடு என பல அம்சங்களில் சிறந்து விளங்குவதை அறிய முடிகிறது.

கோஸ்ட் சேவைக்கான விளம்பர நோக்கிலான பக்கம் என்பதை மீறி, இந்த பக்கம், செய்தி நோக்கில் அறிந்து கொள்ள வேண்டிய பல தளங்களை ஒரே இடத்தில் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறந்த ஒரு பக்க தேடியந்திரமாக கருதலாம்.

கோஸ்ட் சேவையை பயன்படுத்தி இத்தனை சிறந்த செய்தி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்ற வியப்பும் ஏற்படுகிறது. தமிழில் வெளியாகும் தி ஹார்ட்லைனர், கோஸ்ட் சேவையை பயன்படுத்துகிறது.

வேர்டுபிரஸில் இருந்து பலரும் கோஸ்டிற்கு மாறியிருப்பதையும் உணர்த்துகிறது.

இதன் மூலம் அறிமுகம் ஆன தளங்கள் ஒவ்வொன்றும் தனி அறிமுகத்திற்கு தகுதியானவை.

–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *