உலகம் முழுவதும் உதவி

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மிஷினை தயாரித்த கம்பெனி அல்லது டீலருக்கு போன் செய்து உதவி கோருவீர்கள்.
.
சம்பந்தப்பட்ட கம்பெனி உடனடியாக யாரையாவது அனுப்பி வைக்கலாம்; அல்லது நாள் கணக்கில், வாரக் கணக்கில் இழுத்தடிக்கலாம். பிரச்சனை அதுவல்ல. உண்மையில் வாஷிங்மிஷினில் ஏற்பட்ட பழுது மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறாக இருக்கும். அதனை சரி செய்ய சில நிமிடங்கள்தான் ஆகும்.

அந்த விஷயம் தெரியாமல் நீங்கள் அல்லாடியிருப்பீர்கள். இதுவும் கூட பிரச்சனை அல்ல. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே! பிரச்சனை என்னவென்றால், செல்போன், கம்ப்யூட்டர், ஐபாடு, டிவிடி பிளேயர், ஏசி என நமது வீடு முழுவதும் நவீன சாதனங்களாக நிறைந்திருக்கும்போது அவற்றில் ஏதோவது பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்ய முடியாமல் முழி பிதுங்கி நிற்பது அடிக்கடி நேரும் அனுபவமாகி விட்டதுதான்.

வீட்டில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மானிட்டர் திடீரென செயலிழந்து போயிருக்கும். கம்ப்யூட்டரே கெட்டுப் போய் விட்டதோ என நீங்கள் திகைத்துப் போய் நிற்பீர்கள். ஆனால் விஷயமறிந்த உங்களது அலுவலக நண்பர், அதனை ஆப் செய்து விட்டு ரீஸ்டாட் செய்தால் எல்லாம் சரியாக போய் விடும் என்பது போல ஒரு குறிப்பை சொல்வார். என்ன ஆச்சரியம்! மானிட்டர் மீண்டும் உயிர் பெற்று விடும்.

செல்போன்கள் விஷயத்திலும் இதே நிலைதான். நவீன சாதனங்களில் எதிர்பாராமல் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகள் குறைந்தபட்சம் இந்த நேரத்துக்கு நமது வாழ்க்கையை முடக்கி போட்டு விடுகிறது.

அதற்கு தீர்வு காண்பது பெரும் சோதனையாக மாறி விடுகிறது. நிறுவனத்தை அணுகுவதோ அல்லது நிபுணர்களை நாடுவதோ மட்டும்தான் நமக்கு தெரிந்த உபாயமாக இருக்கிறது.
அதிர்ஷ்டசாலிகள் சிலருக்கு விஷயமறிந்த நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் இதற்கான தீர்வை தங்கள் அனுபவத்தின் மூலம் அழகாக சொல்லி விடுகிறார்கள்.

எல்லோருமே இப்படி அதிர்ஷ்டசாலிகளாக உணரக் கூடிய இணையதளம் ஒன்று இஸ்ரேல் நாட்டின் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ளது. அந்நாட்டை சேர்ந்த பென் சடான் என்பவர் பிக்ஸ் யா எனும் பெயரில் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.

வாஷிங்மிஷினில் தொடங்கி ஐபாடு, அதை விட சூப்பர் எம்.பி.3 பிளேயர், ஐபோன், ஸ்மார்ட் போன் என எந்த நவீன தொழில்நுட்ப சாதனத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அந்த பிரச்சனையை இந்த தளத்தில் குறிப்பிட்டு உதவி கோரலாம்.

உலகில் எங்காவது ஒரு மூளையில் இருக்கும் நபர் யாராவது இந்த பிரச்சனையை தீர்க்கும் வழியை பதிலாக குறிப்பிடுவார்கள். நமக்குத்தான் அது பெரிய பிரச்சனையாக தெரியுமே தவிர, விஷயமறிந்தவர்களுக்கு அல்லது இது போன்ற பிரச்சனைகளை ஏற்கனவே சந்தித்தவர்களுக்கு அதனை தீர்க்கும் உபாயம் தெரிந்திருக்கும்.

இப்படி உலகம் முழுவதும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் வழிகளை அறிந்திருப்பவர்கள் சங்கமிக்கும் இடமாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது.

செல்போன் அல்லது மானிட்டர் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் அந்த பிரச்சனையை இந்த தளத்தில் குறிப்பிட்டால் இவர்களில் யாராவது ஒருவர் அல்லது பலர் பொருத்தமான பதிலை தந்து விடுவார்.

இந்த தளத்தை தொடங்கிய பென் சடான் தொழில்நுட்ப சாதனங்களில் கோளாறு ஏற்படும் போது அதற்கு தீர்வு காண நிறுவனங்கள் உதவுவதில் அக்கறை காட்டுவதில்லை என்பதை உணர்ந்து நொந்துபோனார்.

இதையே ஒரு வர்த்தக வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் உத்தேசத்தோடு பிக்ஸ்யா Fixya.com இணைய தளத்தை அமைத்தார்.

பிரச்சனை இருப்பவர்கள் அதனை தெரிவிக்கட்டும். அப் பிரச்சனையை தீர்க்கும் வழி அறிந்தவர்கள் அதனை தெரிவிக்கட்டும் என்னும் கோட்பாட்டை செயல்பாட்டு வேதமாக கொண்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 10 லட்சம் சாதனங்களுக்கு மேற்பட்ட பிரச்சனைகளும், தீர்வுகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சொல்லும் தீர்வு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மதிப்பிடும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இப்படி அதிக மதிப்பு பெற்ற நிபுணர்களோடு நேரடியாக இன்டெர்நெட் அரட்டை மூலம் தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறும் புதிய வசதியும் அறிமுகமாகி இருக்கிறது.

அடுத்த முறை உங்கள் செல்போன் செயலிழந்து போனாலோ அல்லது ஏசி சாதனம் பழுதானாலோ இந்த தளத்திற்குள் எட்டிப் பாருங்கள். உங்களுக்கு தேவையான ஆலோசனை கிடைக்கலாம்.

பழுதாகும் வரை கூட காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக இந்த தளத்திற்கு சென்று பாருங்கள். அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் பிரச்சனைகளையும், பதில்களையும் பார்த்தீர்கள் என்றால் எந்த பிரச்சனைக்கும் உலகில் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உலகம் முழுவதும் உதவி

  1. மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படித்த என் மகன், இயல்பாகவே எந்த மெக்கானிசத்தையும் பிரித்துப் பார்த்து எப்படி என்று பார்ப்பதில் ஆர்வமுடையவன். வீட்டில் எது ரிப்பேரானாலும் உடனே பிரிச்சுப்ப் பார்த்து சரிசெய்துவிடுவான். டிவி, டி இன் ஒன், இயர்ன்பாக்ஸ், மிக்ஸி, ஸ்கூட்டர், கார் முதல் ஐபாட், கம்ப்யூட்டர், லாப்டாப் வரை அவன் கை பட்டால் சரியாகிவிடும். அவனுக்கு நாங்க செல்லமா வச்ச பேர், ‘ராஜா கையவச்சா…அது ராங்காப் போனதில்ல!”

    Reply
  2. //நமக்குத்தான் அது பெரிய பிரச்சனையாக தெரியுமே தவிர, விஷயமறிந்தவர்களுக்கு அல்லது இது போன்ற பிரச்சனைகளை ஏற்கனவே சந்தித்தவர்களுக்கு அதனை தீர்க்கும் உபாயம் தெரிந்திருக்கும்.//

    சூப்பரா சொன்னீங்க..

    நீங்கள் உங்கள் பல பதிவுகளில் தளம் பற்றி குறிப்பிடும் போது அதை தமிழில் குறிப்பிடுகிறீர்கள், இதனால் சரியான முகவரி தெரியாமல் போய் விடுகிறது, அதை ஆங்கிலத்திலேயே எழுதினால் அதில் சென்று பார்க்க எளிதாக இருக்கும் அல்லது அந்த தமிழ் வார்த்தைக்குண்டான லிங்க்கை சேர்த்து இருந்தாலும் நலம்.

    உங்கள் பல பதிவுகள் மிக சிறப்பாக உள்ளது. இத்தனை நாள் எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை.

    Reply
  3. ரொம்பவும் உபயோகமா இருக்கும், இந்த தகவல்கள்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.