சிறைப்பறவைகளின் யூடியூப் நடனம்

கோலிவுட்டிலும், ஹாலிவுட்டி லும் எந்தப்படம் ஹிட்டாகும் என்பதை கூட கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறது, யூடியூப் பில் எந்த வீடியோ கோப்பு புகழ் பெறப் போகிறது என்பதை கணிக் கவே முடியாது போலிருக்கிறது. வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான யூடியூப் தளத்தில் லட்சக்கணக்கான வீடியோ கோப்புகள் பதிவேற்றப்பட்டு வந்தாலும், திடீரென குறிப்பிட்ட ஒரு வீடியோ கோப்பு பலரால் பார்க்கப்பட்டு, அவர்களால் மற்ற வர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகிறது.
அதன் பிறகு அந்த வீடியோ கோப்பில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது. அது ஏன் உலகின் கவனத்தை கவர்ந்தது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது. யூடியூப்பில் இடம் பெறும் லட்சக் கணக்கான வீடியோ கோப்புகளில் எது பிரபலமாகிறது என்பதற்கான பொதுத் தன்மையோ, உள்ளடக்கிய சூத்திரமோ இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. அப்படி ஒன்று இருக்கிறதா என்றும் தெரிய வில்லை. ஒரு சில வீடியோ கோப்புகள் மட்டும் யூடியூப்பில் பிரபலமாகி விடுகிறது என்பது மட்டும் உண்மை. தற்போது யூடியூப்பில் இப்படி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வீடியோ கோப்பு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தது.

பிலிப்பைன்ஸ் என்றதும் பல விஷயங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அதில் அந்நாட்டு சிறைச் சாலைகளுக்கு நிச்சயம் இடமில்லை. ஆனால் ஆச்சர்யப்படும் அளவுக்கு அந்நாட்டின் சிறைச்சாலை ஒன்று, யூடியூப் மூலம் உலகப்புகழ் பெற்றிருக்கிறது.
பிலிப்பைன்சின் மத்திய பகுதி களில் உள்ள செபு என்னும் இடத்தில் இந்த சிறைச்சாலை அமைந்திருக்கிறது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நடனமாடும் காட்சி யூடியூப்பில் இடம் பெற்று உலகில் உள்ள லட்சக்கணக்கானோரால் பார்க்கப் பட்டு, இன்டெர்நெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சிறைச்சாலையில் உள்ள 1600 கைதிகள் ஆரஞ்சு நிற உடை அணிந்து பின்னணி இசைக்கேற்ப நடனமாடும் காட்சி அது. காதுக்கும் சரி, கண்ணுக்கும் சரி இனிமையாக அமைந்திருக்கும் அந்த வீடியோ காட்சி, லட்சக்கணக்கானோரை கவர்ந்திழுத்திருக்கிறது.
இதன் மூலம் யூடியூப் பற்றிய செய்திகளில் இந்த வீடியோ காட்சி முதலிடத்தை பிடித்து மேலும் பலரை இந்த வீடியோ காட்சி பார்க்க வைத்திருக்கிறது. இந்த வீடியோ படம் பிரபலமா னது, வியப்பிலும் வியப்பானது தான். இந்த காட்சியில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிய வில்லை.

யூடியூப்பில் வெற்றிபெறும் பெரும்பாலான வீடியோ கோப்பு களை போல, யூடியூப்புக்காக என்று தயாரிக்கப்பட்ட கோப்பு அல்ல இது. மேலும் யூடியூப்பின் வெற்றியை குறிவைத்தும் இது தயாரிக்கப்பட வில்லை. செபு சிறைச்சாலையின் அதிகாரி பைரென்கிரேசியா என்பவர், சிறை கைதிகளுக்கு விசேஷ பயிற்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினார் அவர்களின் நன்னடத்தைக்கு உதவும் வகையில், அவர்களின் அலுப்பை போக்கும் வகையிலும் அந்த பயிற்சி அமைந்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

இதற்காக ஆரம்பத்தில் அவர் ராணுவ அணிவகுப்பு போல கைதிகளுக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். முதலில் முரண்டுபிடித்த கைதிகள், பின்னர் கட்டுப்பாட்டோடு அணிவகுத்து வந்தனர். அந்த காட்சியை பார்த்ததும், கைதிகள் ரசித்து மகிழும் வகையில் இசை மயமான பயிற்சி அளிக்கலாமே என்று அவருக்கு தோன்றியது. இதனையடுத்து மைக்கேல் ஜாக்சனின் பாப் பாடலுக்கு ஏற்ப கைதிகளை நடனமாட வைத்தார்.

ஆரஞ்சு நிற உடை அணிந்து, கைதிகள் இந்த பாடலின் மெட்டுக்கு ஏற்ப தாள லயத்தோடு ஆடினர். இந்த பயிற்சிக்கு நல்ல பலன் இருந்தது. கிட்டத்தட்ட ஒருமாத கால உழைப்புக்கு பிறகு கைதிகள் ஒத்திசைவோடு, பாடலுக்கேற்ப ஆடினர். இந்த பயிற்சியின் அருமையை தன்னுடைய சக அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்வதற்காக கிரேசியா இதனை வீடியோவில் படம் பிடித்து அதனை யூடியூப்பில் இடம் பெற வைத்தார்.

ஆனால் தற்செயலாக பார்ப்பவர் களுக்கு இந்த காட்சி மிகவும் பிடித்துப்போக, யூடியூப் கலாச்சாரத் தின்படி அதனை தங்கள் நண்பர்க ளோடு பகிர்ந்து கொண்டனர். அவ்வளவுதான் இந்த கோப்பு பற்றிக்கொண்டு விட்டது. விரைவில் யூடியூப் சமூகம் முழுவ தும் இந்த கோப்பு பரவி, நம்பர் ஒன் அந்தஸ்தை பெற்று விட்டது.

ஆனால் கைதிகளுக்கு இந்த பயிற்சி அளித்த கிரேசியாவோ, யூடியூப் வெற்றியை பெரிதாக நினைக்க வில்லை. இந்த பிரபலத்தை விட இப்பயிற்சி கைதிகள் மத்தியில் ஒழுங்கு ணர்வை கொண்டு வந்திருப்பதே மகிழ்ச்சியை தருவதாக அவர் கூறுகிறார். இருப்பினும் கைதிகள் தாங்கள் உலகப்புகழ் பெற்றிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருப்பதோடு பெருமிதமும் கொள்கின்றனர்.

——–

youtube link adress; -http://in.youtube.com/watch?v=hMnk7lh9M3o
——-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சிறைப்பறவைகளின் யூடியூப் நடனம்

  1. Hari

    //அவ்வளவுதான் இந்த கோப்பு பற்றிக்கொண்டு விட்டது. விரைவில் யூடியூப் சமூகம் முழுவ தும் இந்த கோப்பு பரவி, நம்பர் ஒன் அந்தஸ்தை பெற்று விட்டது.//

    Why dont you give the link to that youtube video

    Reply
  2. enna kodumainga idhu?
    you tube link enga?

    Reply
    1. cybersimman

      ok.sorry. the link adress is;——http://in.youtube.com/watch?v=hMnk7lh9M3o
      ——-

      Reply
    2. cybersimman

      ok.sorry .the link adress is;———-http://in.youtube.com/watch?v=hMnk7lh9M3o
      ——-

      Reply
  3. உங்களால நானும் பார்த்துட்டேன் 😉

    Reply

Leave a Comment

Your email address will not be published.