‘ஒய் 2 கே’-உலகம் மறந்த கதை

larryநிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை-இந்த பாடத்தைத்தான் ‘ஒய் 2 கே’ பூதம் கற்றுக்கொடுத்து சென்றி ருப்பதாக லாரி செல்ஸர் என்னும் பத்திரிகையாளர் சொல்கிறார்.
.
‘ஒய் 2 கே’வை பலரும் மறந்து விட்டாலும் ‘செல்ஸர்’ மறக்கத் தயாராக இல்லை. இந்த பூதத்தை கட்டுப்படுத்த, உலக நாடுகள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்களை வாரி இறைத்த நிலையில் குறிப்பிட்ட தினத்தன்று, உலகம் பயந்தது போல எதுவுமே நடக்காததை நினைத்துப் பார்க்கும் செல்ஸர், எல்லாம் எதற்காக? என்னும் கேள்வியையும் கேட்கிறார். செல்ஸர் மட்டும் அல்ல-, பலரும் கேட்கும் கேள்விதான் இது.

புத்தாண்டை நெருங்கும்போது உலகமே படபடத்து நின்றாலும், எதிர்பார்த்தது/பயந்ததுபோல் எந்த தொழில்நுட்ப பயங்கரமும் நிகழாமல், வழக்கம்போலவே புதிய நாள் மலர்ந்தது.

என்னவெல்லாமோ சொன் னார்கள், எதுவுமே நிகழவில்லை என்று உலகம் நிம்மதி பெருமூச்சு விடவே செய்தது. இருந்தாலும் மன தின் ஓரத்தில் அந்த சந்தேகம் எழாமல் இல்லை-இத்தனை பரபரப்பும் அதற்கு வித்திட்ட பயமும் தேவை இல்லா ததோ? எனில், இதற்கு யார் பொறுப்பு? நிபுணர்கள் சொன்னது சரியா? தவறா? ‘ஒய் 2 கே’ பிரச்ச னையின் பாதிப்பை மிகைப்படுத்தி யது யார்?

இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு இரு விதமாக பதில்கள் வந்து விழுந்தன. ‘ஒய் 2 கே’ பூதத்தின் பக்கம் நின்ற வர்கள், ஆம், ஒன்றுமே நிகழவில்லை தான்: ஆனால், அதற்கு காரணம் பிரச்சனையே இருக்கவில்லை என்ப தல்ல. அதனை சந்திக்க தயாராக இருந்தோம் என்பதுதான் என்று விளக்கம் அளித்தனர்.

‘ஒய் 2 கே’ விஸ்வரூபத்தை சமாளிக்க, மிகைப்படுத்தலும் அவசியமானது என்று இவர்கள் வாதிட்டனர். இந்த விளக்கத்தை நிராகரித்த வர்கள், எல்லாமே பிரச்சனையை காட்டி, தொழில்நுட்ப ஆலோசனை என்னும் பெயரில் காசு பார்ப்பதற்கான ஏமாற்றுவேலை என்றனர். ‘ஒய் 2 கே’ தொடர்பான விழிப்புணர்வு இணைய தளங்கள் பலவற்றில், தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனங்களின் இணைப்புகள் இடம்பெற்றிருப்பதை இதற்கு ஆதரவாக சுட்டிக்காட்டினர்.

மாபெரும் ஏமாற்று வேலை என்னும் கருத்தை ஏற்கத் தயங்கியவர்கள் கூட, சில நியாயமான சந்தேகங்களை எழுப்பவே செய்தனர். முன்கூட்டியே தயாராகிவிட்டோம் என்னும் வாதமே உண்மை என்றால், அதற்கான வாய்ப்பு பெற்றிராத மூன்றாம் உலக நாடுகளில் எந்த விபரீதமும் எற்படாமல் போனது எப்படி என்று கேட்கப்பட்டது.

‘ஒய் 2 கே’ பரபரப்பின் போது, வட அமெரிக்கா மற்றும் பணக்கார நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தப்பிவிடும். ஏழை நாடுகளை நினைத்தால்தான் கவலையாக இருப்பதாக சொல்லப்பட்டது. ஆக, ‘ஒய் 2 கே’ பொய்த்துப் போனதற்கு யார் பொறுப்பு?
2005-ல், இது தொடர்பாக கட்டுரை எழுதி இது போன்ற கேள்விகளை செல்ஸர் வாசகர்கள் மனதில் எழுப்ப முயன்றிருந்தார்.

இதற்கு அவர் சொல்லும் பதில் நிபுணர்கள் கருதியது போல ‘ஒய் 2 கே’ ஒருபோதும் மாபெரும் பிரச்சனையாக இருக்கவில்லை என்பதுதான்! ஆனால், உண்மையில் என்ன நடந்தது, பேரழிவு தடுக்கப்பட்டதா? அல்லது அதற்கான வாய்ப்பே இருந்திருக்கவில்லையா? என்பன பதில் இல்லாத கேள்விகளே!

இருப்பினும், அடுத்தமுறை வானமே இடிந்து விழப்போகிறது என சொல்லப்பட்டால், பயம் என்னும் படுகுழியில் விழுந்துவிடாமல், சம நிலையோடு அறிவை துணைக்கு அழைத்து நிலைமையை சீர்தூக்கிப் பார்த்தே செயல்பட வேண்டும் என்னும் பாடத்தை இந்த நிகழ்வு கற்றுக் கொடுத்திருக்கிறது.

இதை உலகம் கற்றுக் கொண் டுள்ளதா? என்று தெரியவில்லை. தவிர, பீதியும், பரபரப்பும் பிடித்தாட்டும் போது, அறிவுக்கு வேலை கொடுப்பது சாத்தியமா என்றும் தெரியவில்லை.
சுனாமி பேரலை தாக்கிய போது, முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று அரசையும் நிபுணர்களை யும் நோக்கி கேள்வி கேட்டதை மறந்து விடலாமா?

பறவைக்காய்ச்சல் பீதியின் போது, உலகம் அஞ்சி நடுங்கியதை நினைக்காமல் இருக்க முடியுமா? பேராபத்து நிகழும்போது அலட்சியத் தால் உண்டான விளைவு என்று மனித குலம் நொந்து கொண்ட தில்லையா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே சரியான பதில் உண்டா? என்றும் தெரிய வில்லை. ஆனால், ‘ஒய் 2 கே’ தொடர் பாக மேலும் சுவாரஸ்ய மான விஷயங் கள் இருப்பது மட்டும் உண்மை!
—————–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “‘ஒய் 2 கே’-உலகம் மறந்த கதை

  1. பிரச்சனை ஆகி இருந்தால் ஏன் எச்சரிக்கை செய்யவில்லை என்பார்கள்..பிரச்சனை ஆகாமல் இருந்தால்..இவர்களுக்கு இதே வேலை என்பார்கள்..

    சிலரை எப்போதும் திருப்தி படுத்த முடியாது தான்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.