டிஜிட்டல் வள்ளலார்கள்

botaniஅவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்லை என்றாலும், அவரது ஆதார செய்தியை பின்பற்றி செயல்படுப வர்கள் என்ற முறையில் அவர்களை இப்படி சொல்வது பொருத்தமாகவே இருக்கும். அதிலும் முக்கியமாக நவீன யுகத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் அன்பை வெளிப் படுத்தி தாவரங்க ளோடு தொடர்பு கொள்ளும் புதுமை யான வழியை உண்டாக்கியிருக் கின்றனர்.

.
இக்குழுவினர் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர் ‘பாட்டனி கால்ஸ்’, அதாவது தாவரவியல் அழைக்கிறது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நெஞ்சம் வாடினேன் என்று வள்ளலார் உருகிப்பாடினார் அல்லவா, அதே உணர்வோடு இக்குழுவினர் வாடிய பயிர்களை பேணிக்காப்பதற்கான நவீன வழியை உருவாக்கியுள்ளனர்.

இந்த திட்டத்தின் மையக்கருத்து என்னவென்றால் தாவரங்கள் நம்மை அழைக்கவும், நாம் தாவரங்களை தொடர்புகொண்டு பேசவும் வழி செய்வதுதான்.

இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் இடையிலான தகவல்தொடர்பை சாத்தியமாக்குவது இந்த திட்டத்தின் அடிப்படை. இந்த இரு தரப்பின ருக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கான புதிய வழி இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமான வழி.

பசிக்கு அழும் குழந்தை போல, வேலைக்கு உணவு கேட்கும் பிள்ளை போல, தாவரங்களும் தண்ணீரின்றி வாடும்போது, நீரூற்றுங்கள் என கோரிக்கை வைத்தால் எப்படி இருக் கும், அதுவும் தொலைபேசி மூலம் அழைத்து காய்ந்து கொண்டு இருக்கி றேன் தண்ணீர் தேவை என்று தெரிவித் தால், எப்படி இருக்கும்?! இதைத்தான் பாட்டனி கால்ஸ் செய்கிறது.

தாவரங்களால் எப்படி தொலைபேசி மூலம் பேச முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதற்காகவென்றே தாவரங் கள் உள்ள தொட்டியில் சக்திவாய்ந்த சென்சார் பொறுத்தப் பட்டிருக்கிறது.

இந்த சென்சார் மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் அளவை புரிந்து கொள் வதோடு, தாவரங்கள் வாடிப் போயிருக் கிறதா என்பதையும் தெரிந்துகொள் ளும் ஆற்றல் உள்ளவை.

தாங்கள் இழந்தவற்றை போன் மூலம் தெரிவிக்கும் திறன் படைத்தவை. எனவே செடி நீரின்றி வாடிக்கிடக்கும் போது, அருகே உள்ள தொலைபேசி நிலையத்துக்கு அழைப்பு வரும்.
செடியின் தன்மைக்கேற்ப நீர் தேவை போன்ற கோரிக்கை வைக்கப்படும். அதோடு, நீரூற்றி முடிந்த பிறகு அதற்கு நன்றியும் தெரிவிக்கப்படும்.

முதலில் ஊற்றிய நீர் போதுமானதாக இல்லை என்றால், மேலும் மேற் கொண்டு நீர் தேவை என மீண்டும் கோரிக்கை வைக்கப்படும். அதேபோல, தாவரங்களை பராமரிக் கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வர்களும் அதற்கு போன் செய்து அதன் நிலை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதாவது தாவரங்களை நலம் விசா ரிக்கலாம்.

இதற்காக ஆஸ்ட்டிரிக்ஸ் என்னும் நவீன தொலைபேசி வலைப் பின்ன லின் உதவியை பயன்படுத்திக் கொண் டுள்ளனர். மனிதர்கள் மற்றும் தாவரங் கள் இடையிலான தகவல் தொடர்பை ஊக்குவிப்பதற்கான சோதனை முயற்சியாக இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

தாவரங்களால் தங்கள் தேவைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல முடியும் என்பதும், மனிதர்களால் அவற்றை இன்னும் கூடுதலாக புரிந்துகொள்ள முடியும் என்பதும் இந்த திட்டத்தின் பயனாக கருதப்படுகிறது.

இந்த புதுமையான திட்டம், எதிர் பாராமல் உருவானது. வீட்டுக்குள்ளே தோட்டம் வைத்து பராமரிப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது, இதற்கான யோசனை மின்னல் கீற்றாக பளிச்சிட்டதாம்.

தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தாவரங்களை பார்த்து ரசிக்கக்கூடிய அளவுக்கு நேரமில்லா மல் இருக்கின்றனரே என்று நினைத்த போது, தாவரங்களே அவர்களைத் தொடர்புகொண்டு தண்ணீர் ஊற்றுங்கள் என கெஞ்சினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பிறந்ததாம்.

மேற்கொண்டு யோசித்தபோது, இது சிறப்பான வழியாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் இந்த எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்து பாட்டனி கால்ஸ் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

தாவரங்கள் அன்புக்கட்டளையிடத் துவங்கினால், அவற்றுடனான நம் உறவு மேம்படத்துவங்கும் என்று பாட்டனி கால்ஸ் எதிர்பார்க்கிறது. கலை முயற்சியின் சாயல் கொண்ட இந்த திட்டம் வெற்றிபெற்றால், தாவரங்கள் பராமரிப்பில் முற்றிலும் புதிய வழி பிறக்கும். அதோடு, பயிர்களை பராமரிப்பதில் ஒரு நவீன புரட்சியே உண்டாகக்கூடும்.

———-

link;
www.botanicalls.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

3 Comments on “டிஜிட்டல் வள்ளலார்கள்

  1. நல்ல பதிவு! நன்றி!

    Reply
  2. Pingback: ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது « Cybersimman's Blog

  3. Pingback: ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *