அக்கம் பக்கத்துக்கு ஒரு தராசு இணைய தளம்

neighbourஎல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் போல இருக்கிறது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றும் அச்சத்தில் ஒவ்வொருவரும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர்.
.
இப்படி ஒரு “கனவு ஊர்’ எங்கே இருக்கிறது என்பது ஏக்கத்துடன் நீங்கள் கேட்டால், அதற்கான பதில் உங்களை ஏமாற்றத்திலேயே ஆழ்த்தும். காரணம், இத்தகைய ஊர் எங்கேயும் கிடையாது. எல்லா ஊரிலும் பிரச்சனைகள் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுய நலம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

நள்ளிரவில் பாட்டு கேட்டு தூங்க விடாமல் செய்கின்றனர். சற்றும் கவலையின்றி உங்கள் வீட்டுப் பக்கம் குப்பை கொட்டுகின்றனர். சாக்கடை நீரை தெருவில் ஓட விடுகின்றனர். இவற்றை சுட்டிக் காட்டினால், “உன் வேலையை பார்த்துக் கொண்டு போ’ என்பது சட்டம் பேசுகின்றனர். நீங்களும் சளைத்தவரில்லை. “உன்னை விட்டேனா பார்’ என்று சவால் விட்டு சண்டைக்கு போகிறீர்கள்.

இனி, நீங்கள் சண்டைக்குச் செல்ல வேண்டாம்! அதற்காக பக்கத்து வீட்டுக்காரரின் அநியாயங்களை பொறுத்துக் கொண்டு புலம்பவும் வேண்டியதில்லை. நாலு வார்த்தை எழுதி வைத்தால் போதுமானது! இதற்காக என்றே, ஒரு இணைய தளம் இருக்கிறது. ராட்டன் நைபர் ( Rotten Neighbor )என்பது அதன் முகவரி. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பதிவு செய்து வைப்பதற்காக என்றே இந்த தளம் நடத்தப்படுகிறது. எனவே, பக்கத்து வீட்டுக்காரரின் முரட்டுத் தனத்தையும் இதில் பதிவு செய்யலாம்.

அதே நேரத்தில் புதிய ஊருக்கு குடி போகிறீர்கள் என்றால் அங்குள்ளவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதையும் இந்த தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக வீடு வாங்குபவர்கள், (அ) வாடகைக்கு செல்பவர் களுக்கான தேடியந்திரமாக இந்த தளம் உருவாக்கப் பட்டுள்ளது.

அதிலும் எப்படி, அழகாக கூடுதல் வரைப்படத்தில் குறிப்பிட்ட இடத்தை பெரியதாக்கிப் பார்த்து, அங்கு நீங்கள் பார்த்திருக்கும் வீட்டிற்கு அருகாமையில் இருப்பவர்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவை எல்லாமே அருகாமையில் வசிப்பவர்கள் பதிவு செய்தவை.

இந்த தளத்தில், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களை பற்றி அவர்கள் குணாதிசயத்தை பதிவு செய்யலாம். (அ) நீங்கள் விரும்பும் பகுதியில் பலர், யார் எப்படி என தெரிந்து கொள்ளலாம். இரண்டுமே மிகவும் சுலபமானவை. குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதற்கான கூடுதல் வரைபடத்தில், வீட்டை சுட்டிக்காட்டி அதன் உரிமையாளர் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

மிகச் சிறந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கொண்ட பகுதியை கண்டுபிடிக்க, உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பற்றிய கருத்துக்களை தெரிவித்து மதிப்பீட்டு உதவுங்கள் என்று இந்த தளத்தின் முகப்பு பக்கம் அழைப்பு விடுக்கிறது.

மோசமான அணுகுமுறையை தான் எழுத வேண்டும் என்றில்லை. நல்ல விதமாக நடந்து கொள்பவர்கள் பற்றியும் எழுதலாம். அதே நேரத்தில் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், இந்த தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள். இந்த தளத்தில் எழுதி விடப்போகிறார்கள் என்ற அச்சத்தில் மோசமாக நடந்து கொள்வதை பலர் தவிர்க்கலாம் அல்லவா? அப்படியும் சொல்வதற் கில்லை. பலர் வேண்டுமென்றே அவதூறிலும் ஈடுபடலாம். இதனால் வீண் பிரச்சனைகளும், மன உளைச்சலும் மட்டுமே மிச்சமாகலாம்.

எது நடக்கிறது, தளம் எப்படி உருவாகிறது என்பது போக போகத்தான் தெரியும்.
இப்போதைக்கு இந்த தளத்தை இன்டர்நெட்டின் ஆற்றலை பயன் படுத்திக் கொண்டு சுற்றுப்புறத்தை சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழி என்று மட்டும் குறிப்பிடலாம்.

ஏற்கனவே, “ஜில்வோ டாட்காம்’ சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளின் மதிப்பை தெரிந்து கொள்வதற்கான சேவையை வழங்கி வருகிறது. அதைப் போலவே, சுற்றுப்புறம், மன நிம்மதி தரக்கூடியதாக அமையுமா என்பதை கணக்கிட இந்த தளம் உதவுகிறது.

“ஜில்வோ டாட்காம்’ பிரதானமாக அமெரிக்காவுக்கானது. “ராட்டன் நைபர்’ தளம் அகில உலகிற்கானது என்கின்றனர். இதனை உருவாக்கியுள்ள பிரான்ட் வால்கர் அமெரிக்காவின் கண்டியாகோ எதிரில் வசிக்கும் 27வயதான வால்கர் விவகாரமான இணைய தளங்கள் அமைப்பதே வழக்கமாக கொண் டிருப்பவர். இதற்கு முன்னர் அமெரிக் காவில் வீடு இல்லாதவர்களை அடை யாளம் காட்டும் “பம்பைண்டர்’ டாட் காம் என்று தளத்தையும் அதன் பிறகு மைஸ்பேஸ் தளத்திற்கான பொய்யான நண்பர்கள் உருவாக்கித் தரும் “பேக்ஸ் ஸ்பேஸ்’ டாட்கம் தளத்தையும் நடந்தி யவர். இரண்டு தளங்களுமே மிகுந்த சர்ச்சைக்கு ஆளாயின.

தற்போது அவர் துவங்கியுள்ள தளம் இந்த அளவுக்கு விவகாரமானது இல்லை என்றாலும், இது, நம்மை நல்லவர்களாக மாற்றும் தன்மை கொண்டது. (அ) குறைந்தபட்சம் நல்லவர்களாக அடை யாளம் காட்ட உள்ளது.
———

link;
www.rottenneighbor.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.