உலக காதல் நினைவுச் சின்னம்

loveசரித்திரத்தில் உங்கள் பெயர் இடம் பெற இதை விட சுலபமான வாய்ப்பு இருக்க முடியாது. இப்போதே கூட மேற்கொண்டு இது பற்றி விவரங்களை உலக காதல் நினைவுச் சின்ன தளத்திலேயே தெரிந்து கொள்கிறோம் என்று, நீங்கள் அந்த தளத்திற்கு விஜயம் செய்வீர்கள் என்றால், இந்த நினைவுச் சின்னத்தில் இடம் பெறக் கூடிய முதல் 3,333 அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராகும் வாய்ப்பை பெறலாம்.
இல்லை விஷயத்தை சொல்லுங்கள் என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
லண்டன் நகரை சேர்ந்த செர்ஜி ஹாலிமான்சிவிச் என்பவர் உலக காதல்நினைவுச் சின்னத்தை எழுப்ப திட்டமிட்டிருக்கிறார்.
தான் மட்டுமல்லாமல் இன்டெர்நெட் உலகை சார்ந்த அனைவரோடும் சேர்ந்து இந்த நினைவுச் சின்னத்தை எழுப்ப விரும்பும் அவர் அதற்காக “தி வேர்ல்டு மானுமெண்ட் ஆப் லவ்’ எனும் இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்.
மனிதர்களும் தனக்கு பின்னே நினைவுச் சின்னங்களை விட்டுச் செல்லும் வழக்கத்தை கொண்டிருக் கிறது என்று கூறும் இவர், எகிப்து பிரமிடு, சீனப் பெருஞ்சுவர் இந்த வரிசையில் 21ம் நூற்றாண்டுக்கான நினைவுச் சின்னத்தை நாம் உருவாக்குவோம் என்கிறார்.
21ம் நூற்றாண்டின் நினைவுச் சின்னம் அன்பின் அடையாளமாக திகழ வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இனத்தால், ஜாதியால், மதத்தால் பிளவுப்பட்டு கிடக்கும் மனித இனம் அன்பால் மட்டுமே ஒன்றுபடக் கூடும் என்பதால் பரஸ்பரம் அன்பை நிரூபித்து அந்த பாசப்பிணைப்பால் உலக காதல் நினைவுச் சின்னத்தை உருவாக்கி அதில் நம்முடைய பெயரை பொறித்து வைப்போம் என்கிறார்.
இதற்காக ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு தங்கள் பெயரையும், மிகவும் நேசிக்கும் நபரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களை நேசிப்பதற்கான காரணம் மற்றும் அவர்களுக்கான அன்புச் செய்தியை யும் இடம் பெற வைக்கலாம்.
உறுப்பினர்களுக்கென்று தனியே உருவாக்கப்படும் முகப்பு பக்கத்தில் அவர்களின் புகைப்படத்தோடு இந்த விவரங்கள் இடம் பெறும். மேலும் மகத்தான திட்டத்தில் பங்கேற்ற தற்கான சான்றிதழ் ஒன்றும் அனுப்பி வைக்கப்படும்.
“அன்பின் பாஸ்போர்ட்’ என்று இதனை செர்ஜி குறிப்பிடுகிறார். நாம் நேசிக்கும் நபர்களுக்கு இதனை பரிசாக அனுப்பி வைக்கலாம். உடனேவும் அனுப்பி வைக்கலாம். அல்லது பிறந்தநாள், புத்தாண்டு போன்ற முக்கிய தினங்களின்போதும் அனுப்பி வைத்து நம்முடைய நேசத்தை தெரிவிக்கலாம்.
அன்பை தெரிவிக்க இதை விட சிறந்த வழி வேறில்லை என்கிறார் செர்ஜி. உறுப்பினராக விரும்பும் ஒவ்வொருவரும் 100 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் வரும் 3333பேருக்கு இந்த கட்டணம் கிடையாது.
உறுப்பினராக சேர்ந்தவர்கள் அன்பின் அடையாளமாக திகழக் கூடிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதற்கான வரைப்படத்தை சமர்ப்பிக்கலாம். இதற்கு ஒருவர் கட்டிடக் கலை நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மிகச் சிறந்த கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்று மனதில் தோன்று கிறதோ அதனை குறிப்பிட்டால் கூட போதும். அதே போல் இந்த நினைவுச் சின்னம் உலகில் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம்.
அந்த இடம் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமாக, மென்மையான பருவ நிலை கொண்டதாக அனைத்து நாடுகளிலும் உள்ளவர்கள் வந்து போகக் கூடிய இடமாக இருக்க வேண்டும்.
இப்படி உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் யோசனைகளின் அடிப்படையில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு அதில் உறுப்பினர்கள் அனைவரின் பெயரும் நிறுவனர்கள் எனும் அந்தஸ்தோடு இடம் பெறும்.
அதிகபட்சம் 10 லட்சம் நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்கிறார் செர்ஜி. இவர்கள் அனைவரும் சரித்திர நினைவுச் சின்னத்தில் தங்கள் பெயர் பொறிக்கப்படும் பாக்கியத்தை பெறுவார்கள் என்கிறார் அவர்.
இன்டெர்நெட் சமூகத்தால் உருவாக்கப்படும் இந்த நினைவுச் சின்னம் புது யுகத்திற்கான அன்பின் அடையாளமாக திகழும் என்கிறார் அவர். இது தொடர்பாக பிளாக் தளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அன்பு மாளிகையில் உறுப்பினராக சேருபவர்கள் இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்படும் போது அதன் துவக்க விழாவுக்கும் அழைக்கப்படுவார்கள்.
பின்னர் நாம் மிகவும் நேசிப்ப வர்களோடு எப்போது பிணக்கு ஏற்பட்டாலும் அதனை சரி செய்ய இந்த தளத்திலிருந்து அன்பு பாஸ்போர்ட்டை அனுப்பி வைத்து நேசத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்கிறார் செர்ஜி.

——
link;
http://worldmonumentlove.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உலக காதல் நினைவுச் சின்னம்

  1. mano sanjay

  2. mano sanjay

    செம matter சூப்பரா இருக்கு உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

    Reply
  3. வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது

    Reply
  4. suresh

    வாழ்த்துக்கள் உங்கள் இந்த பதிவு யூதஃபுல் விகடனில் வந்துள்ளது

    Reply

Leave a Comment

Your email address will not be published.