கூகுல் வழியே ஒரு கடல் பயணம்.

1-mapஅமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்றதும் எல்லோருக்கும் கொலம்பசை தான் நினைவுக்கு வரும்.இதி தப்பில்லை என்றாலும் உண்மையில் ஹென்றி ஹடசனும் நினைவுக்கு வர வேண்டும்.

ஹட்சன் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் இல்லை ஆனால் அதன் அடையாளமான நியூயார்க் நகரை கண்டுபிடித்தவர்.இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய சரித்திர பிரசத்தி பெற்ற கடல் பயணத்தை அவ‌ர் மேற்கொண்ட 400 வது ஆண்டு நிறைவு விழா த‌ற்போது கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஹட்சன் பவுண்டேஷன் அமைப்பு அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.அதோடு முக்கியமாக அந்த சரித்திர பயண‌த்தின் பாதையில் சென்று பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளது.

அதாவ‌து கூகுல் வ‌ரைப‌ட‌த்தில் அந்த‌ ப‌ய‌ண‌த்தின் வ‌ழித‌ட‌த்தை இணைத்து அத‌ன்வழீயே சென்றுபார்க்கும் சாத்திய‌த்தை செய்துள்ள‌ன‌ர்.

ஹ‌ட்ச‌ன் இங்கிலாந்தைச் சேர்ந்த‌வ‌ர்.விமான‌ ப‌யண‌த்தின் மூல‌ம் உல‌க‌ம் சுருங்க‌த்துவ‌ங்காத‌ கால‌த்தில் வாழ்ந்த‌ அவ‌ர் த‌ன‌து கால‌த்தின் ல‌ட்சியாமான‌ புதிய‌ க‌ட‌ல் மார்க‌த்தை க‌ண்டு பிடிகக்கும் வேட்கை கொண்டிருந்தார்.

இந்தியா ம‌ற்றும் சீனாவுக்கு நீளம் குறைந்த‌ மார்க‌த்தை க‌ண்டுபிடிப்ப‌த‌ற‌கான‌ முய‌ற்சியில் ஈடுப‌ட்டிருந்தார். முத‌ல் இர‌ண்டு முய‌ற்சிக‌ள் ப‌ய‌ன‌ளிக்காத‌ நிலையில் 1609 ம் ஆண்டில் அவ‌ர் மூண்றாவ‌து க‌ட‌ல் ப‌ய‌ன‌த்தை மேர்கொண்டார்.

பாதி நில‌வு என்னும் க‌ப்ப‌லில் அவ‌ர் ட்ச்சு வ‌ணிக‌ர்க‌ளின் ஆத‌ர‌வோடு இந்த‌ ப‌ய‌ன‌த்தை மேற்கொண்டார்.நார்வே அருகே சென்ற‌ போது வான‌லை மோச‌மான‌தால் அவ‌ரால் த‌ன‌து பாதையில் தொட‌ர்ந்து செல்ல‌ முடிய‌வில்லை.இருப்பினும் அவ‌ர் திரும்பி வ‌ராம‌ல் ஒருவித‌ குருட்டு ந‌ம்பிக்கையோடு முன்னேறிச்சென்றார்.3000 மைல்க‌ள் ப‌ய‌ண‌த்திற்கு பிற‌கு அவ‌ர் அற்புத‌மான‌ துறைமுக‌ ந‌க‌ரையும் அத‌னை சென்ற‌டைவ‌த‌ற்கான‌ ந‌தி வ‌ழியையும் க‌ண்ட‌றிந்தார்.

அந்த நகரம் தான் நியூயார்க். அந்த நதிக்கு ஹட்சனின் பெயரே சூட்டப்பட்டது. சீனாவுக்கான‌ வழியை க‌ண்ட‌றிவ‌தில் வெற்றிபெறா விட்டாலும் தான் கண்ட துறைமுகம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் டச்சு வணிகர்களுக்கு தகவல் கொடுத்தார்.

விரிவாக்கத்தில் ஆர்வம் கொண்ட டச்சுக்காரர்கள் உடனே இந்த துறைமுக நக‌ருக்கு குடிபெயர்ந்து அங்கேயே நியூ ஆம்ஸ்டர்டம் என்னும் குடியிருப்பையும் அமைத்தனர்.அதன்பிறகு வணிகம் பெருகியதோடு நியூயார்க்கைன் முக்கியத்துவமும் அதிகரித்தது.

வணிகரீதியாக நியூயார்க் வளர்ச்சி அடைந்ததற்கும் பல்வேறு காலாச்சார்ங்களை கொண்டவர்களின் சங்கமாமாக அந்நகரம் உருவாவத‌றகும் ஹட்சனின் ப‌ய‌ண‌மே வித்திட்ட‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

உலகமயமாதலின் முதல் கட்டமாகவும் இது கருதப்படுகிறது.என்வே தான் இந்த‌ ப‌ய‌ண‌த்தின் 400 வ‌து ஆண்டு நிறைவு விழாவை ஹாட்ச‌ன் ப‌வுனண்டேச‌ன் த‌னி த‌ள‌ம் அமைத்து சிற‌ப்பாக‌ கொண்டாடுகிற‌து.

ஹ‌ட்ச‌னின் க‌ட‌ல் ப‌ய‌ண‌த்தை கூகுல் வரைப‌ட‌த்தில் பின்தொட‌ர்ந்து செல்ல‌வும் ஏற்பாடு செய்துள்ள‌து. ப‌ய‌ண‌த்தின் நோக்க‌த்தை தெரிந்து கொண்டு ஒவ்வொரு நாளாக‌ ப‌ய‌ண‌த்தை மேற்கொள்ள‌லாம்.
————

link;
http://www.henryhudson400.com/home.php

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.