ஃபேஸ்புக் இனிது ; டிவிட்டர் கொடிது.

1-facebookஇனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்த மூன்று தள‌ங்களுமே இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தள‌ங்களாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.சமூக வாழ்க்கையின் புதிய போக்காகவும் இவற்றின் பயன்பாடு அமைந்துள்ளன.

ஃபேஸ்புக் செய்வதும் டிவிட்டர் செய்வதும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் டிரேசி அலோவி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலையைச்சேர்ந்த உளவியல் துறை பேராசிரியரான அவர் ஃபேஸ்புக் பயனொபாட்டால் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆனால் டிவிட்டர் மற்றும் யூடியூப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் சொல்லும் விஷயத்தை புரிந்து கொள்வதற்கு செயல்பாட்டு நினைவுத்திறன் என்னும் சங்கதியை புரிந்துகொள்ள வேண்டும்.காரணம் இந்த செயல்பாட்டு நினைவுத்திறனை மையமாக கொண்டே அவர் ஆய்வு செய்திருக்கிறார்.

செயல்பாட்டு நினைவுத்திறன என்பது உளவியல் வராலாற்றில் மிகவு சமிபத்திய சேர்க்கை.1960களில் தான் இந்த பதம் பயன்படுத்தலாயிற்று.பொதுவாக குறுகிய கால நினைவாற்றல் தொடர்பாக இது பயன்படுத்தப்படுகிறது.மில்லர் ,கிலான்டர்,மற்றும் பிரிபிராம் ஆகிய அறிஞர்கள் இந்த பதத்தை பயன்படுத்தினர்.மனித மூளையை கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டு இதனை அறிமுகம் செய்தனர்.

குறிப்பெடுத்தல்,படிப்பது,புரிந்து கொள்ளல்,மற்றும் முடிவெடுத்தல் ஆகியவை செயல்பாட்டு நினைவாற்றல் தொடர்பானது.பணியிடத்தில் செய‌ல்படுவது போன்றவை இந்த ஆற்றலை சார்ந்தே இருக்கிற‌து.வேலையில் சிறப்பாக செயல்படவும்,வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஆற்றலே முக்கிய காரணம் என்று நம்புபவர்களில் டாக்டர் டிரேசியும் ஒருவர்.

அதனால் தான் அவர் டிவிட்டர்,யுடியூப் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் செயல்பாட்டு நினைவுத்திறனின் மீது செலுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின்படி டிவிட்டர் மூலம் கருத்துக்களை வெளியிடும் பழக்கம் செயல்பாட்டு நினைவுத்திறனை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.எஸ் எம் எஸ் அனுப்பும் பழக்கமும் இதே பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

டிவிட்டர் செய்யும் போது தகவல்களை ஜீரணிக்க அதிக நேரம் செலவிட முடியாததே இதற்கு காரணம். பார்க்கிறோம் ,படிக்கிறோம் ,மற‌ந்துவிடுகிறோம்.அது பற்றி அதிகம் யோசிக்காமல் அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோம்.டிவிட்டரில் கிடைக்கும் இடிவெளியில்லா தகவல்கள் அவற்றை பகுத்துணரும் அவசியத்தை உண்டாக்குவதில்லை. யூடியூப் மூலம் விடியோ கோப்புகளை பார்க்கும் போதும் இதே தான் நடக்கிறது. எனவே டிவிட்டர் செய்வதும் யூடியூப் பார்ப்பதும் பாதகமானதாக கருதப்படுகிற‌து.

ஆனால் அதே நேரத்தில் ஃபேஸ்புக் செய்வது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது செயல்பாட்டு நினைவாற்றலுக்கான பயிற்சியாக அமைகிறதாம்.சுடோகு புதிரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.காரணம் இந்த செயல்களின் போது மூளை சுறுசுறுப்படைவதோடு சிறந்த ஒருங்கிணைப்பும் உண்டாகிறது.

இது பற்றி டிரேசி விரிவான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளாராம்.

நிறக் டிவிட்டர் ந‌ம்முடைய பகுத்துணரும் ஆற்றலை பாதிப்பதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் மூலம் எச்சரித்துள்ளனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஃபேஸ்புக் இனிது ; டிவிட்டர் கொடிது.

 1. இரண்டும் என்னிடமும் உள்ளது ஜோசிக்க தான் வேணும்
  தகவலுக்கு நன்றி

  Reply
 2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

  Reply
 3. rajamanohar

  நல்ல தமிழாக்கம் . ஆனால் நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்த மாதிரி ஒரு கேள்வி ! http://www.briansolis.com/2009/09/the-dichotomy-between-social-networks-and-education/

  Reply
  1. cybersimman

   நல்ல தகவல். சுட்டி காட்டியமைக்கு நன்றி.படித்துப்பார்த்து பயன்படுத்துகிறேன்.

   Reply
 4. ஃபேஸ்புக்,ட்விட்டர் அலைகளில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படும் இந்தத் தருவாயில், நில்லுங்கள்….சற்று சிந்தியுங்கள் என்பது போல் உள்ளது இந்த ஆராய்ச்சி! உங்கள் பதிவு அதை நன்றாகவே வழிமொழிந்திருக்கிறது.தகவலுக்கு நன்றி! தொடரட்டும் உங்கள் பணி செவ்வனே!

  Reply
 5. வணக்கம் ஃபேஸ்புக்கில் குழுவை வரிசைபடுத்தவும்
  அருமை

  Reply
 6. i like and intrested this website.

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *