ஒவ்வொரு பிரவுசரிலும் உங்கள் இணையதளம்.

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபயர்பாக்ஸே ஆகச்சிறந்தது என வாதிடலாம்.சிலர் ஒபராவுக்கு நிகர் இல்லை என்றும் க‌ருதலாம்.இவற்றைத்தவிர ஆப்பிள் அபிமானிகளூக்கான சஃபாரி இருக்கிற‌து.பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிளோரர் இருக்கிறது.

ஒவ்வொரு பிரவுசரிலும் குறைகள் உண்டு.அவற்றுக்கான சிறப்பம்சங்கள் உண்டு.எனவே சிறந்த பிரவுசர் எது என்பது விவாதத்திற்கு உரிய ஒன்று.

விஷயம் என்னவென்றால் இணையவாசிகள் பல்வேறு பிரவுசர்களை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே.அதாவது ஒரு இணைய‌த‌ள‌ம் ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ பிர‌வுச‌ர்க‌ளில் பார்க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.அதானால் என்ன‌ என்று கேட்கிறீர்க‌ளா?

இண்டெர்நெட் உல‌கில் பிர‌வுச‌ருக்கேற்ற‌ இணைய‌த‌ள‌ம் என்று ஒரு கோட்பாடு இருக்கிற‌து.அதாவ‌து குறிப்பிட்ட‌ பிர‌வுச‌ரில் சிற‌ப்பாக‌ தோன்ற‌க்கூடிய‌ வ‌கையில் இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டிருக்கும்.இணைய‌த‌ள‌த்தின் கீழேயே இத்துணுண்டு எழுத்துக்க‌ளில் இந்த‌ இணைய‌த‌ள‌ம் இந்த‌ பிர‌வுச‌ரில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட‌க்கூடிய‌து என‌ குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கும்.அதனைத்த‌விர‌ ம‌ற்ற‌ பிர‌வுச‌ர்க‌ளில் பிர‌ச்ச்னை ஏற்ப‌ட‌லாம்.

இவ்வாறு இல்லாம‌ல் எந்த‌ ஒரு இணைய‌த‌ள‌மும் சுல‌ப‌மாக‌ பார்க்க‌கூடிய‌ வகையில் பிர‌வுச‌ர்க‌ள் இருக்க‌ வேண்டும் என்று வ‌லியுறுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.இத‌ற்காக‌ பிர‌வுச‌ர்க‌ளுக்கு என்று பொதுவான‌ தர அள‌வுகோள் க‌டை பிடிக்க‌ப்பட‌ வேண்டும் என்றும் வாதிட‌ப்ப‌டுகிற‌து.

பொதுவான‌ இண்டெர்நெட்டில் ந‌ம்பிக்கை கொண்ட‌வ‌ர்க‌ள் இத‌ற்காக‌ ஒரு இய‌க்க‌மே ந‌டத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

இந்த‌ இய‌க்க‌த்தின் அடிப்ப‌டையாக‌ உள்ள‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ற்றி பின்ன‌ர் விரிவாக‌ பார்ப்போம்.இப்போது ப‌ல‌வித‌மான‌ பிர‌வுச‌ர்க‌ளுக்கு வ‌ருவோம்.பெரும்பாலான‌ இணைய‌தள‌ங்க‌ள் குறிப்பிட்ட‌ ஒரு பிர‌வுச‌ரை ம‌ன‌தில் கொண்டு வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.ம‌ற்ற‌ பிர‌வுச‌ர்க‌ளில் பார்க்க‌ப்ப‌டும் போது இந்த‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் சிக்க‌லை ஏற்ப‌டுத்த‌லாம்.

மேலும் பிற‌ பிர‌வுச‌ர்க‌ளில் பார்க்க‌ப்ப‌டும் போது வ‌டிவ‌மைப்பின் அழ‌கிய‌லிலும் மாற்ற‌ம் தெரிய‌லாம்.இணைய‌வாசிக‌ளுக்கு இந்த மாற்ற‌ங்க‌ள் பெரித‌ல்ல‌. ஆனால் இணைய‌த‌ள‌ உரிமையால‌ர்க‌ள் மற்றும் வ‌டிவ‌மைப்பு க‌லைஞர்க‌ளுக்கு இவை மிக‌வும் முக்கிய‌ம்.

ஒரு இணைய‌த‌ள‌ம் ம‌ற்ற‌ பிர‌வுச‌ர்க‌ளில் எப்ப‌டி காட்சி அளிக்கின்ற‌ன‌ என்று பார்க்கும் போது அதில் உள்ள‌ குறைக‌ள் ப‌ளிச்சென‌ புரியும்.அதோடு வ‌டிவ‌மைப்பில் எந்த‌ எந்த‌ அம்ச‌ங‌க்ளை மேம்ப‌டுத்தலாம் என்றும் தெரிந்து கொள்ள‌லாம்.

இத‌ற்காக‌ ஒவ்வொரு பிர‌வுச‌ராக‌ இணைய‌த‌ள‌த்தை பார்க்க‌ வேன்டும் என்றில்லை.அத‌ற்காக‌ என்றே ஒரு இணைய‌தள‌ம் இருக்கிற‌து.’பிர‌விச‌ர்ஷாட்ஸ்’ என்னும் அந்த‌ த‌ள‌த்தில் ஒரு இணைய‌த‌ள‌த்தை ச‌ம‌ர்பித்தால் ஒவ்வொரு பிர‌வுச‌ரிலும் அது எப்ப‌டி காட்சிய‌ளிக்கும் என்று பார்த்து விட‌லாம்.

அத‌ன் பிற‌கு தேவையான‌ மாற்ற‌ங்க‌ளை மேற்கொள்ள‌லாம்.

பிர‌வுச‌ர் ம‌ற்றும் இணைய‌த‌ள‌ வ‌டிவ‌மைப்பில் ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌னுள்ள‌ த‌ள‌ம்.

பிர‌வுச‌ர் உல‌கில் இருந்து ம‌ற்றொரு செய்தி. பிர‌வுச‌ர் வ‌ர‌லாற்றில் முத‌ல் முறையாக‌ ஃப‌ய‌ர்பாக்ஸ்3.5 எக்பிளோர‌ரை பின்னுக்குத்த‌ள்ளிவிட்டு அதிக‌ம் பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் பிர‌வுச‌ர் என்னும் சிற‌ப்பை பெற்றுள்ள‌து.ஆக‌ ஃப்ய‌ர்பாக்ஸை ந‌ம்ப‌ர் ஒன் என்று சொல்ல‌லாம்.

—-

link;
http://browsershots.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒவ்வொரு பிரவுசரிலும் உங்கள் இணையதளம்.

  1. Elavarasan

    இந்த பதிவு ஏற்கனவே ஒரு இணையதளத்தில் விரிவாக வந்துள்ளது சிம்மன் சார்.

    http://winmani.wordpress.com/2009/12/09/இணையதள-சொந்தகாரருக்கும்/

    Reply
    1. cybersimman

      தகவலுக்கு நன்றி.பெரும்பாலும் ஏற்கனவே வந்தவை என தெரிந்தால் எழுதுவதில்லை. சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் இப்படி ஆகிவிடுகிறது.இருப்பினும் தகவலும் எனது கோண‌மும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.மேலும் பிரவுசர் சார்ந்த பிரச்ச‌னைகள் குறித்து விரிவாக எழுதுவதற்கான முன்னோட்டமாக‌வே இதனை க‌ருதுகிறேன்.

      Reply
  2. இளவரசனுக்கு, நான் நேற்று வந்தவன், சிம்மன் அப்படி அல்ல
    தொழில்நுட்பத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழுக்காகவே
    இந்த இணையதளத்தின் மூலம் சேவை செய்பவர்.இந்த பதிவும்
    அவர் இதுதான் என்ன புரியவில்லையா ? நானும் அவரின் வாசகன்
    தான் ஒரு முறை தொலைக்காட்சிக்கு அவர்அளித்த பேட்டியில்
    தினமும் வேலை முடிந்து 4 அல்லது 5 மணி நேரம் இதற்காக
    செலவு செய்வதாக கூறினார் வெறும் காகித பணத்திற்காக நாடு
    விட்டு செல்பவர்கள் மத்தியில் உண்மையிலே இந்த மனிதர்
    தமிழுக்காக செய்யும் இந்த சேவையை பார்த்த பின் தான்
    நாமும் ஒரு இணையதளம் மூலம் சில தொழில்நுட்பசெய்திகளை
    கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது அதன் பின்
    ஆரப்பித்தது தான் நம் இணையதளம். நான் எழுதுதிய இந்த பதிவு
    மட்டுமல்ல நான் எழுதும் அத்தனை பதிவுக்கும் சொந்தகாரர்
    அவர்தான். இதை விட மேல் அவர் என் நண்பர். தயவு செய்து
    இது போன்ற பதில்களை கூறி என் நண்பரை என்னிடம் இருந்து
    பிரித்து விடாதீர்கள்.
    நாகமணி

    Reply
    1. cybersimman

      மிகுந்த நெகிச்சி அளிக்கும் பதில் நாகம‌ணி அவர்களே.என் மீது வைத்திருக்கும் அளவு கடந்த ம‌திப்பிற்கு ந‌ன்றி.என்னை பார்த்து பதிவு செய்வதாக சொல்வது மேலும் நெகிழ வைக்கிறது.இளவரசன் சுட்டிக்காட்டியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.அதில் த‌வறும் இல்லை.த‌மிழ் பதிவுலகம் இத்தனை சுறுசுறுப்பாக‌ இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.தொழில்நுட்ப பாதையில் இணைந்தே பயணிப்போம் நண்பரே.

      அன்புடன் சிம்மன்

      Reply
  3. மிக அருமையான ஒப்பீடு. உங்களது பிளாக் ரொம்ப அருமையாக உள்ளது. இம்மாதிரியான பயனுள்ள செய்திகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.

    Reply
    1. cybersimman

      பாரட்டுக்கு நன்றி.நிச்ச‌யம் நண்ப‌ரே.

      Reply
  4. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published.