இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு.

சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.

இண்டெர்நெட்டை அவ‌ர் த‌ன‌து தொழிலை மேம்ப‌டுத்திக்கொள்ள‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தே பாராட்ட‌த்த‌க்க‌து.அதோடு ஆட்டோ டிரைவ‌ர் ஒருவ‌ர் இண்டெர்நெட்டின் அருமையை உண‌ர்ந்திருப்ப‌தும் இணைய‌த‌ள‌ம் மூல‌ம் த‌ன‌க்கான‌ வாடிக்கையாள‌ர்க‌ளை தேடிக்கொள்வ‌தும் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தானே.
சாம்ஸ‌னின் இணைய‌த‌ள‌ம் எந்த‌வித‌ அல‌ங்கார‌மும் இல்லாம‌ல் எளிமையாக‌ இருக்கிற‌து.சுய‌புராண‌த்துக்கு இட‌ம் கொடுக்காம‌ல் த‌ன்னைப்ப‌ற்றி சுருக்க‌மாக‌ அறிமுக‌ம் செய்து கொள்ளும் சாம்ஸ‌ன் பாதுகாப்பான‌ ஆட்டோ ப‌யண‌த்திற்கு த‌ன்னை நாட‌லாம் என்று குறிப்பிட்டுள்ளார்.நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் வாசலில் தனது ஸ்டான்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை ந‌க‌ரை த‌ன‌க்கு ந‌ன்றாக‌த்தெரியும் என்று பெருமைபட்டுக்கொள்ளும் அவ‌ர் ந‌ல்ல‌ ஒட்ட‌லில் இருந்து ந‌ல்ல‌ க‌டைக‌ள் வ‌ரை எல்லாவ‌ற்றுக்கும் அழைத்துச்செல்வேன் என்று அழைப்பு விடுக்கிறார்.அதே நேர‌த்தில் டாக்சியை விட‌ ஆட்டோ ம‌லிவான‌து என்றும் பெருமைப்ப‌ட்டுக்கொள்கிறார்.
முக‌ப்பு ப‌க்க‌த்தின் மைய‌த்தில் இப்ப‌டி ர‌த்தின‌ச்சுருக்க‌மாக‌ அறிமுக‌ம் செய்து கொள்ப‌வ‌ர் அருகே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌லைப்புகளில் ந‌க‌ர‌ச்சுற்றி பார்ப்ப‌து, த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள்,ஷாப்பிங் ப‌ற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். எல்லாமே சுருக்க‌மாக‌த்தான்.

அவரைப்பற்றி வாடிக்கயாள‌ர்க‌ள் கூறியவை த‌னித‌லைப்பில் இட‌ம்பெறுகிற‌து.அவ‌ரை தொட‌ர்பு கொள‌வ‌த‌ற்கான‌ இமெயில் முக‌வ‌ரியும் கொடுக்கப்ப‌ட்டுள்ள‌து.

இந்திய‌ வ‌ருகை த‌ரும் வெளிநாட்டு ப‌ய‌ணிக‌ள் முன்கூட்டியே எல்லாவ‌ற்றையும் திட்ட‌மிடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தால் சென்னைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌மே சாம்ஸ‌னை புக் செய்து கொள்ள‌ வாய்ப்புள்ள‌து.வெளிநாட்டு ப‌ய‌ணிகளுக்கும் இது ந‌ம்பிக்கையான‌து.
ப‌ல‌ ப‌ய‌ணிக‌ள் இப்ப‌டி இணைய‌த‌ள‌த்தின் மூல‌ம் த‌ன்னை நாடுவ‌தாக‌ சாம்ஸ‌ன் கூறியுள்ளார்.

எல்லாம் ச‌ரி சாம்ஸ‌னின் இந்த‌ இணைய‌ ப‌ய‌ண‌ம் எப்ப‌டி துவ‌ங்கிய‌து.சில‌ ஆண்டுக‌ளூக்கு முன் ஜ‌ப்பானிய‌ ப‌யணி ஒருவ‌ர் சாம்ஸ‌னுக்கு இமெயில் முக‌வ‌ரியை உருவாக்கித்த‌ந்துள்ளார்.அத‌ பிற‌கு ம‌ற்றொரு வெளிநாட்டு ப‌ய‌ணி அவ‌ரது இணைய‌த‌ள‌த்தை வ‌டிவ‌மைத்து த‌ந்துள்ளார்.இன்னொருவ‌ர் அவ‌ருக்கு லேப்டாப்பை ப‌ரிச‌ளித்துள்ளார்.

இப்போது சாம்ஸ‌ன் த‌ன‌து இணைய‌த‌ள‌த்தால் மிக‌வும் பிஸியாக் இருக்கிறார்.
சாவாரியைத்தேடி ஓடி அலையாம‌ல் இணைய‌ம் மூல‌மே அவ‌ர் ச‌ர்வ‌தேச‌ வாடிகாகையாள‌ர்க‌ளை க‌வ‌ர்ந்திழுத்து கொண்டிருக்கிறார்.
சாம்ஸ‌னின் இணைய‌ முக‌வ‌ரி. ட‌க் டாஸ்டிக் டாட் காம்.வெளிநாடு ப‌ய‌ணிக‌ள் ஆட்டோவை ட‌க் ட‌க் என்றே  குறிப்பிடுவதால் இந்த‌ பெய‌ராம்.
 —-

http://www.tuktastic.com/index.htm

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

  1. அட!!

    அவருக்கு இனிய வாழ்த்து(க்)களும் சேதி சொன்ன உங்களுக்கு எங்கள் பாராட்டுகளும்.

    Reply
  2. chennaikaran

    ellam seri… auto-karaar meter pottu varuvara?

    Reply
  3. செய்யும் தொழிலே தெய்வம் என்பதை நவீன காலத்திற்கு ஏற்ற படி
    இணையத்தளம் மூலம் தன்னை நிலை நிறுத்தி காட்டிவுள்ளார்.
    நல்ல முயற்சி .நம்பிக்கையும்,கடின உழைப்பும் இருந்தால்
    எதையும் சாதிக்க முடியம் என்பதற்கு சாம்சன் நல்ல எடுத்துகாட்டு.
    வாழ்த்துக்கள்.

    Reply
  4. உங்கள் பதிவுகள் மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்

    Reply
  5. அருமையான முயற்சி வாழ்த்துக்கள்!

    Reply
  6. நான் ஆதவன்

    அசத்துகிறாரப்பா ஆட்டோகாரர் 🙂

    Reply
  7. வாழ்த்துக்கள்!

    Reply
  8. sikkandar

    முயற்ச்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை

    வாழ்த்துக்கள்

    அன்புடன் சிக்கந்தர்……

    Reply
  9. மெத்த படித்தவர்கள் கூட இணையத்தின் பயன்பாடு தெரியாமல் இருக்கும் இக்காலத்தில் ஆட்டோ டிரைவர் சாம்ஸனை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.

    Reply
  10. prabakaran

  11. பேப்பரில் பார்க்கவில்லை. உங்கள் தளத்தில்தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

    Reply
  12. balaraman

    உண்மையிலே அருமையான செய்தி. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
    இதையும் பாருங்கள்! சற்று தொடர்புடையது!!
    http://www.suruk.com/site/

    Reply
  13. chollukireen

    முன்னாடியே தெரிந்திருந்தால் நம்பகமாக இவரையே அழைத்துக் கொண்டு
    கோவில் குளங்களுக்கு போயிருக்கலாம். மும்பை வந்த பிறகு படித்து என்ன
    பிரயோஜனம். பிறர்க்கு சொல்லலாம்…உதவிகரமான தகவல்

    Reply
  14. ரமேஸ்

    இந்த பதிவு நேற்று (12/2/10) புதிய தலைமுறை புத்தகத்தில் வெளிவந்துள்ளது .

    Reply
  15. cybersimman

    thanks for the info

    Reply
  16. நான் ஓர் அகதி இணையதளம் வைத்துள்ளேன் ஆட்டோ டிரைவர் வைத்திந்தால் என்ன நண்பா எட்டு வயது சிறுவன் இணையதளம் வைத்திருக்கின்றான் அது பிறருக்கு பயனளிக்குமாயின் அதை தங்களது இணையதளத்தில் பதிப்பிக்கவும். mullaimukaam.blogspot.com

    Reply
  17. கேள்விப்பட்டிருக்கிறேன்.

    மீட்டர் கட்டணம் மட்டுமே வாங்கும் ஆட்டோ ராமர் பற்றி லக்கி லுக் பதிவில் படித்தேன்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.