ஈரானின் முதல் ஆன்லைன் சூப்பர் மார்க்கெட்

இண்டெர்நெட் என்றால் குலைந‌டுங்கும் நாடுக‌ளில் ஈரானும் ஒன்று.க‌ட்டுப்பாடில்லாத இண்டெர்நெட் ஆப‌த்தான‌து என‌ க‌ருதும் ஈரானில் இண்டெர்நெட்டை இஷ்டம் போல எல்லாம் பயன்படுத்த முடியாது.

இண்டெர்நெட் சுத‌ந்திர‌ம் என்ப‌து அர‌சுக்கு எதிராக் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ற‌ ப‌ல‌மான‌ அச்ச‌ம் இருப்ப‌தால் அதிகாரிக‌ள் இணைய‌வாசிக‌ளின் ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கையையும் க‌ண்காணித்த‌ வ‌ண்ண‌ம் இருப்பார்க‌ள்.

அதோடு எத‌ற்கு வ‌ம்பென்று ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ வ‌ச‌திக‌ளுக்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்ட‌ன‌ர்.

அதிலும் அதிப‌ர் தேர்த‌லின் போது அர‌சின் த‌ணிக்கையை மீறி முறைகேடுக‌ளை டிவிட்ட‌ர் மூல‌ம் இணைய‌வாசிக‌ள் உல‌குக்கு ப‌ரைசாற்றிய‌ பிற‌கு இன்னும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்கின்ற‌ன‌ர்.

இப்ப‌டி இண்டெர்நெட் விஷய‌த‌தில் க‌ட்டுப்பொட்டித்த‌ன‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளும் ஈரானில் அதிச‌ய‌த்திலும் அதிச‌ய‌மாக‌ இணைய‌ சூப்ப‌ர் மார்க்கெட் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேடோனாக் டாட் காம் என்னும் அந்த‌ இணைய‌த‌ள‌ம் 2500 க்கும் மேற்ப‌ட்ட‌ பொருட்களை இண‌டெர்நெட் மூல‌ம் விற்ப‌னை செய்கிற‌து.முத‌ல் க‌ட்ட‌மாக‌ த‌லைந‌க‌ர் தெஹ‌ரானில் டோர் டெலிவ‌ரி வ‌ழ‌ங்க‌ உள்ள இந்த‌ த‌ள‌ம் பின்ன‌ர் நாடு முழுவ‌தும் விரிவுப‌டுத்த‌ உள்ள‌து.

இணைய‌ சூப்ப‌ர் மார்க்கெட் ஈரானுக்கு ந‌ல்ல‌வித‌மாக‌ அமைய‌ட்டும்.

————-

http://www.meydoonak.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *