பத்து வார்த்தை விக்கிபீடியா

நாமே வாசகர்,நாமே ஆசிரியர் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இணையவாசிகளால் உருவாக்கப்பட்டு வரும் விக்கிபீடியாவின் நம்பகத்தனமை மீது வேண்டுமானால் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம்

ஆனால் அதன் பயன்பாட்டுத்தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எந்த தலைப்பின் கீழ் தகவல்கள் வேண்டுமானாலும் விக்கிபீடியாவுக்கு நம்பிச்செல்லலாம்.

விநோதமான மற்றும் அரிதான தலைப்பின் கீழ் கூட விக்கிபீடியாவில் கட்டுரைகளை காண‌லாம். ஒரு சில கட்டுரைகள் சுருக்கமாக இருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் முழநீளத்திற்கு அதிகப்படியான விவரங்களோடே இருக்கின்றன.

 இப்படி நீளமான படிக்க அலுப்பாக இருப்பதாக அங்கலாய்ப்பவர்களூக்காக ஒரு விக்கிபீடியா இருக்கிறது. ரத்தினச்சுருக்க விக்கிபீடியா என்று இதனைச்சொல்லலாம். இல்லை ப‌த்து வார்த்தை விக்கிபீடியா என்றும் சொல்லலாம்.

 ஆம் இந்த விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே மொத்தம் பத்து வார்த்தைகள் கொண்டதாக‌ இருக்கின்றன. டென் வோர்ட் விக்கி என்னும் இந்த விக்கிபீடியா தற்கால டிவிட்டர் தலைமுறைக்கானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதில் உள்ள‌ க‌ட்டுரைக‌ள் மிக‌வும் சுவையான‌து.ரசித்து படிக்கலாம்.ஆனால் ப‌ய‌ன் மிக்கது என்று சொல்ல முடியாது.

—–http://www.tenwordwiki.wikispot.org/Front_Page

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பத்து வார்த்தை விக்கிபீடியா

  1. விக்கிப்பீடியாவில் அனைவரும் திருத்தம் செய்யலாம் என்பதன் மூலம்தான் அதிக தகவல் கிடைக்கின்றன என்பது என் கருத்து. ’பத்து வார்த்ததை’தகவலுக்கு மிக்க நன்றி நண்பா.

    Reply
  2. ஜகதலப்பிரதாபன்

    தமிழ் விக்கிப்பீடியா சின்னப் பிள்ளைகள் எழுதி பழகும் இடம். புதுசு புதுசா ஆயிரம் பேர் பயன்ர் ஆகுவார்கள். ஆனால் ஒருவரும் எழுதுவதில்லை. 90% கட்டுரைகள் சில வரிகள் மட்டும் தான் இருக்கும். புதுசா எழுதிப் பழகுவர்களுக்கு நல்ல இடம்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *