தேடியந்திரம் ஒன்று: தேடல் பல

(கூகுலை தவிர) இன்னொரு தேடியந்திரம் தேவை என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

 தேடல் என்றதுமே கூகுல்தான் நினைவுக்கு வரும்.கூகுலும் விசுவாசமான ஊழியனை போல பெரும்பாலான நேரங்களில் கேட்டதை கொண்டு வந்து கொட்டி விடும். ஆனால் கூகுல் முடிவுகள் போதாமையை உணர்ந்து வேறு தேடியந்திரத்தில் பொருத்தமான முடிவு கிடைக்கிறதா என்று பார்க்கத் தோன்றலாம்.

அப்படியொரு நிலை பலருக்கு ஏற்படலாம். அதிலும் குறிப்பாக மிகத் தீவிரமாக தகவல்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது ஆழமான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்கள் கூகுலை தவிர வேறு சில தேடியந்திரங்களை முயன்று பார்க்க நேரிடும்.
கூகுலில் கிடைக்காத முடிவுகள், ஆஸ்கிலோ, யாஹுவிலோ, பிங்கிலோ கிடைக்கக் கூடும் என்று இரண்டு மூன்று தேடியந்திரங்களில் தேடலாம்.

தேடல் சூட்சமம் அறிந்தவர்கள் குறிப்பிட்ட வகை தேடல் அல்லது தலைப்புகளுக்கு இந்த தேடியந்திரம் ஏற்றது என அறிந்திருக்கலாம்.

எப்படியோ ஒரே நேரத்தில் மூன்று நான்கு தேடியந்திரங்களில் தேடிப் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு நிலை உங்களுக்கும் ஏற்பட்டால், பல தேடியந்திரங்களை தனித்தனியே தேடிக் கொண்டிருப்பதை விட ஒரே பக்கத்தில் எல்லா தேடியந்திரங்களிலும் தேடிப் பார்த்து விடலாம். இத்தகைய வசதியை பேவிட் தேடியந்திரம் வழங்குகிறது.

ஒரே பக்கத்திலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவுவதால் இதனுடைய சிறப்பு. இதே கோஷத்தில் வேறு சில தேடியந்திரங்கள் இருந்தாலும் இந்த பணியை பேவிட் சிறப்பாக செய்கிறது.

தேடுவதற்கான குறிச்சொல்லை டைப் செய்ததுமே தேடு என கிளிக் செய்தால் அடுத்தகணமே கூகுல் உட்பட அனைத்து தேடியந்திரங்களின் பக்கங்களையும் அதே பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

அவற்றில் எது தேவையோ அதனை கிளிக் செய்து கொள்ளலாம். செய்தி தேவையென்றால் கூகுல் நியூசை கிளிக் செய்யலாம். வீடியோ என்றால் யூடியூப்பில் கிளிக் செய்யலாம். அல்லது டிக் தளத்திலோ, டிவிட்டர் பதிவுகளிலோ தேடிப் பார்க்கலாம்.

அமேசான், விக்கிபீடியா என இணையவாசிகள் தவறாமல் சொல்லும் தளங்களின் முடிவுகளையும் இங்கேயே பார்த்து விடலாம்.

தேடல் பக்கத்தில் ஐந்து கட்டங்களில் தேடியந்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தேவையென்றால் உங்களுடைய அபிமான தேடியந்திரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேடல் பக்கத்தை விட்டு வெளியேறாமல் எல்லா வகையான முடிவுகளையும் சுலபமாக தேடிப் பார்த்து விடலாம். தேடல் முடிவுகள் திருப்தி அளித்தால் அப்படியே பேஸ்புக், டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி பேவிட் உங்களை அசத்தி விட்டதாக நினைத்தீர்கள் என்றால் அதில் உறுப்பினராக சேரலாம். உறுப்பினராக சேரும்போது கூடுதல் அனுகூலங்கள் உண்டு.  நீங்கள் பார்க்கும் பக்கங்களையெல்லாம் அப்படியே புக் மார்க் செய்து கொள்ளலாம். அவற்றை உங்கள் பெயரில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
அதோடு தேடியந்திரத்திற்கான பின்னணி சித்திரத்தை உங்களது விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளலாம்.  அதன் பிறகு எந்த கம்ப்யூட்டரில் இருந்து தேடினாலும் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தேடுவதை போன்ற உணர்வை பெறலாம்.

மேலும் தேடல் கட்டத்தை திரையின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் மாற்றி வைத்துக் கொள்ளலாம். கூகுல் மீது உங்களுக்கு எந்த அதிருப்தி இல்லையென்றாலும் கூட ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம்.

—————-

http://favitt.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தேடியந்திரம் ஒன்று: தேடல் பல

  1. பயனுள்ள தகவல்…

    Reply
  2. அருமையான தகவல். வாழ்த்துக்கள்.

    மோகனகிருஷ்ணன்,
    புதுவை.காம்

    Reply
  3. ரிக்கிப்பீடியா என உள்ளது. தவறை சரி செய்யவும்!,…

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published.