கவலைகளுக்கான டிவிட்டர்

உங்கள் கவலைகளை, பிரச்சனைகளை, மனஉளைச்சல்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது “வொரிபேடு’ இணைய தளம்.

நோட்பேடு தெரியும். வேட்பேடு தெரியும் அதென்ன “வொரிபேடு’? என்று கேட்கத் தோன்றலாம். வொரிபேடு இணைய தளத்தை கவலைகளுக்கான டிவிட்டர் பதிவு என்று வைத்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தில் உள்ள டிவிட்டர் செய்திகளை பதிவு செய்வதற்கான கட்டத்தை போன்ற நீளமான கட்டத்தில்  இணையவாசிகள் தங்களை வாட்டிக்கொண்டிருக்கும் கவலைகளை பதிவு செய்யலாம்.

இவ்வாறு ஏற்கனவே இணையவாசிகளால் பகிர்ந்துகொள்ளப்பட்ட கவலைகள் இந்த கட்டத்தின் கீழ் வரிசையாக இடம்பெற்றிருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருக்கும் எந்த விஷயத்தையும் இதில் பகிர்ந்து கொள்ளலாம். 

இப்படி கவலைகளை பகிர்ந்துகொள்வதால் என்ன பயன்? என்று நீங்கள் கேட்கலாம். மனம் விட்டு பேசினால் அல்லது மற்றவர்களோடு கவலைகளை பகிர்ந்துகொண்டால் பிரச்சனை தீருகிறதோ இல்லையோ மனதை அழுத்திக்கொண்டிருக்கும் பாரம் இலேசாகி விடும் என்று கூறப்படுவது உண்டல்லவா?  அதே கருத்தின் அடிப்படையில்தான் இந்த தளத்தை ஹெர்னாண்டஸ் உருவாக்கி உள்ளார்.

ஒரு  விதத்தில் இது அவருடைய சொந்த அனுபவத்தில் பிறந்த தளமாகும். எல்லோரையும் போல மன அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு இலக்கான ஹெர்னாண்டஸ் ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை ஒரு காகிதத்தால் எழுதி வைக்க வேண்டும் எனும் யோசனையை பின்பற்றி இருக்கிறார். இவ்வாறு பிரச்சனைகளை எழுதும் போது அவற்றை வேறிடத்தில் இறக்கி வைத்து விட்டதுபோல ஒரு நிம்மதியும் ஆசுவாசத்தையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

இதனால் பிரச்சனைகள் தீராவிட்டாலும் பிரச்சனைகளால் ஏற்படும் உளைச்சல்களிலிருந்து விடுபட முடிவதையும் அவர் உணர்ந்திருக்கிறார். இதன் பயனாக யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் உணர்வோடு, இணையவாசிகள் தங்களது கவலையை பகிர்ந்துகொள்வதற்கான ஓரிடத்தை இணையத்தில் உருவாக்கும் நோக்கத்தோடு “வொரிபேடு’ இணைய தளத்தை அமைத்துள்ளார்.

பக்கம் பக்கமாகவோ அல்லது பத்தி பத்தியாகவோ எழுதினால் வேலைக்கு ஆகாது என்று தற்போதைய டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப அதிகபட்சமான 140 எழுத்துக்களுக்குள் கவலைகளை வெளிப்படுத்தி விட வழி செய்யும் வகையில் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். 

வொரிபேடு தளத்தில் கவலைகளை பகிர்ந்துகொண்டதே ஒருவித நிம்மதியை தரலாம். பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்கள் பகிர்ந்துகொண்ட கவலைகளை படித்துப் பார்த்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கருத்து சொல்லலாம். இப்படி நாமும் கருத்துக்களை பெற முடியும். அப்படியே, ஊக்கமளிக்கும் செயலாக சியர்அப் சின்னத்தில் கிளிக் செய்து ஆதரவு தெரிவிக்கலாம்.

கவலைகள், மனஉளைச்சல்கள், சந்தேகங்கள் என எதனை வேண்டுமானாலும் இப்படி பகிர்ந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் நம்முடைய பெயரையும் வெளியிடலாம் அல்லது பெயரை குறிப்பிடாமல் கவலையை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம். கவலைகளை பகிர்ந்துகொள்வதின் மூலம் நிம்மதியடைந்து மகிழ்ச்சியாக உணரலாம் என்று இந்த தளம் ஊக்கமளிக்கிறது.

சொன்னால் நம்ப முடியாத வகையில் இருந்தாலும் பிரச்சனைகளை எழுதி வைப்பது எத்தனை பெரிய ஆசுவாசத்தை தரக்கூடும் என்பதை இந்த தளத்தை பயன்படுத்தினால் உணர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். அல்லது இந்த வாழ்க்கை எனும் பற்சக்கரத்தில் என்னுடைய வேட்டி நுனி கூட சிக்கியதில்லை என்று கவிஞர் கல்யாண்ஜியைப்போல  உற்சாகத்தோடு கூறக்கூடியவர்கள் இந்த தளத்தில் நுழைந்து மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம். இணைய தள முகவரி   WWW.Worrypad.Com.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கவலைகளுக்கான டிவிட்டர்

  1. //பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்//

    //இந்த வாழ்க்கை எனும் பற்சக்கரத்தில் என்னுடைய வேட்டி நுனி கூட சிக்கியதில்லை என்று கவிஞர் கல்யாண்ஜியைப்போல உற்சாகத்தோடு கூறக்கூடியவர்கள் இந்த தளத்தில் நுழைந்து மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம்//

    பகிர்ந்துக் கொள்ளத் தூண்டும் வகையில், தகவலை விரிவாக அறிவித்தமைக்கு மிக்க நன்றி சகோ..

    Reply
  2. Pingback: கவலைகளுக்கான டிவிட்டர் : வலைச்சரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *