டெஸ்க்டாப்பை பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம்.

உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?அதை உலகோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?

டெஸ்க்டாப்.லே சேவை இதை தான் செய்கிறது.

இந்த சேவையின் மூலம் டெஸ்க்டாப் பிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கிரின்சேவர் சித்திரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இதில் உறுப்பினராவது மிகவும் சுலபம்.உறுப்பினரானவுடன் ஸ்கிரின்சேவர் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்கள் அதனை பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.பிரதானமாக மேக் கம்ப்யூட்டருக்கான சேவை என்றாலும் லேப்டாப்.டெஸ்க்டாப் என எல்லாவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளலாம்.

உறுப்பினர்கள் தங்களுக்கான சுருக்கமான அறிமுகத்தையும் உருவாக்கி கொள்ளலாம்.

ஸ்கிரீன்சேவை தோற்றங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிய ஸ்கிரின்சேவர் தோற்றங்களையும் சுலபமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.

ஸ்கிரின்சேவர் சித்திரங்கள் அழகின் அடையாளம் மட்டும் அல்ல.ஒருவிதத்தில் அவை அதனை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்க கூடியவை.எனவே இந்த சேவை மூலம் புதுமையான ஸ்கிரின்சேவரை மட்டும் அல்ல அவற்றின் பின்னே உள்ள நபர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் காலம் இது.டெஸ்க்டாப் சித்திரத்தையும் பகிர ஒரு சேவை இருப்பது பொருத்தமானது தானே.

http://desktop.ly/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டெஸ்க்டாப்பை பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம்.

  1. அருமை வாழ்த்துக்கள் நண்பரே.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *