ஐக்கான்களுக்கான தேடியந்திரம்

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்கள்.தேடுவதற்கு வசதியாக பலவித வகைப்பாடுகள்.புதிய ஐகான்கள்.பிரபலமான ஐகான்கள்.ஐகான் பிரம்மாக்கள்.இப்படி ஐகான் பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான தேடியந்திரமாக ஐகான் ஆர்க்கேவ் இணையதளம் வசிகிக்கிறது.

எந்த விதமான ஐக்க்கான் தேவை என்றாலும் சரி ஐக்கான்களுக்கான இந்த தேடியந்திரம் அதனை எடுத்து தருகிறது.தகவல்கலை தேட இருக்கவே இருக்கிறது கூகுல்.அதிலேயே புகைப்படங்களையும் தேடிக் கொள்ளலாம் என்றாலும் புகைப் படங்களை தேட என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.

புகைப்படங்கள் என்று பொதுவாக சொன்னாலும் அவற்றிலும் பல ரகங்கள் இருக்கின்றன.நிழற்படங்கள்,சித்திரங்கள்,கோட்டோவியம் இவற்றோடு ஐக்கான்களும் அடங்கும் .குறிப்பிட்ட பொருளை காட்சி ரூபமாக உணர்த்த பயன்படும் அடையாள சின்னங்களான ஐகான்கள் பல இடங்களில் பயன்படுகின்றன.

பிரவுசருக்கான ஐக்கான்கள் எல்லாம் தானாகவே கிடைக் கின்றன.சில நேரங்களில் பொருத்தமான புதிய ஐக் கான்கள் தேவைப்பட்டால் இந்ததேடியந்திரத்தில் தேடிக் கொள்ளலாம்.கூகுல் கோடிக்கணக்கான இணைய பக்கங்களை தொகுத்து வைத்திருப்பது போல கிட்டத்தட்ட 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐக்கான்கலை இந்த தளம் வைத்திருக்கிறது.அவற்றில் இருந்து பொருத்தமானதை இந்த தளம் தேடி தருகிறது.

மேலும் ஐக்கான்கள் அவற் றுக்கான வகைகளின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளன.இசைமயமான ஐக்கான்கள்,கார்ட்டுன் ஐக்கான்கள்,காதல்ஐக்கான்கள்,கொண்டாட்ட ஐக்கான்கள்,கலாச்சார ஐக்கான்கள் என் எண்ணற்ற வகையில் ஐக்கான்களை காணலாம்.புதியஐக்கான்கள்,பிரபலமான ஐக்கான்கள் என்றும் அலசிப்பார்க்கலாம்.முகப்பு பகக்த்திலேயே இன்று தேடப்பட்ட ஐக்கான்கள் ,நேற்றைய ஐக்கான்கள் என்றும் ஐக்கான்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஐக்கான்களை உருவாக்கிய கலைஞர்களுக்கு என்று தனி பகுதியும் உள்ளது.இவற்றோடு பயனாளிகள் தங்களுக்கு பிடித்தமான ஐக்கான்களை சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது.பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

http://www.iconarchive.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஐக்கான்களுக்கான தேடியந்திரம்

  1. நல்ல தகவல் . நன்றி சார்

    Reply
  2. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி திரும்பி உள்ளது மற்றும் எப்படி! ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, நட்சத்திரம், நடவடிக்கை மீண்டும் இப்போது உள்ளது
    எங்களுக்கு முன் எப்போதும் போல் பொழுதுபோக்குவதாகவும். மேலும் அறிய இங்கே சொடுக்கவும் http://bit.ly/n9GwsR

    Reply
  3. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *