காந்தி நினைவாக எழுத்துரு!

நீங்கள் காந்தியத்தை பின்பற்றுகிறீர்களா என்று கேட்பது போலவே மகாத்மா மீது ஆர்வம் கொண்டவர்களை பார்த்து நீங்கள் காந்திய எழுத்துருக்களை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கலாம் தெரியுமா?

மகாத்மா எழுத்துரு இருப்பதை அறிந்திருந்தால் அவரும் உற்சாகத்தோடு ஆம் காந்தி எழுத்துருக்களை தான் பயன்படுத்துகிறேன் என்றும் பதில் அளிக்க கூடும்.

நீங்களும் கூட மகாத்மா அடிச்சுவட்டில் நடக்க விரும்பினால் காந்தியின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துருவை பயன்படுத்தலாம்.

மகாத்மா என்றதுமே நினைவுக்கு வரும் அவரது தோற்றத்தின் அடையாளமாகிய வட்ட வடிவ கண்ணாடியை போல அழகிய குண்டு குண்டான எழுத்துக்களை கொண்டதாக இந்த காந்தி எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றை பயன்படுத்தினால் அழகான நேர்த்தியான எழுத்துக்களை கொண்ட வரிகளை உருவாக்கலாம்.

அகிம்சையை போதித்த காந்தியின் கருத்துக்களுக்கு இணைய உலகில் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவது போல இந்த எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மகாத்மாவின் பிறந்த நாளின் போது அறிமுக செய்யப்பட்ட இந்த எழுத்துருக்களை பயன்படுத்த என்றே தனி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம்,இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துருக்களை டவுண்லோடு செய்ய‌லாம்.
காந்தி தமிழ் மொழியை மிகவும் நேசித்தவர் என்பதால் தமிழிலும் இந்த எழுத்துரு இருப்பது மகிழ்ச்சியே.

இன்ரைய இளைஞர்கள் காந்தி கண் கொண்டு உலகை காண வேண்டும் என்பதே இந்த எழுத்துருவை உருவாக்கிய குழுவின் வேண்டுகோளாக உள்ளது.

காந்தி எழுத்துருவுக்கு மாற இணைய முகவ‌ரி;http://www.gandhijifont.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “காந்தி நினைவாக எழுத்துரு!

  1. நல்ல தகவல் நண்பரே.

    Reply

Leave a Comment

Your email address will not be published.